Monday, May 29, 2017

வெள்ளோட்ட விழா படங்கள் -2






















வெள்ளோட்ட விழா படங்கள்


வெள்ளோட்ட விழா படங்கள் 


அல்ஹாஜ் எம் ரி எ நிஸாம் (மாகாணக் கல்விப் பணிப்பாளர்)


ரிபாய் காரியப்பர் --ரமீஸ் அப்துல்லாஹ் 



நூலாசிரியர்- டாக்டர் சாஹிலா இஸ்ஸதீன் 



தீரதம் -பிரதிமைப் பிரதி 




வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட பணிப்பாளர் அப்து அஸீஸ்



வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட பணிப்பாளர் அப்து அஸீஸ்

Saturday, May 27, 2017

எ.எம். சாஜித்

தினகரன்-26.05.2017 முத்தாரம் பகுதியில் எ.எம். சாஜித் 



Thursday, May 25, 2017

கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ்

 கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் வழங்கிய முன்மொழிவு-



சமூகங்களின் அடையாளத்தை வெளிப்படுத்துவதில் இலக்கியங்களுக்கு முக்கிய பங்குண்டு. ஈழத்தில் தமிழ் பேசும் இரு சமூகமானதமிழர்களும் முஸ்லிம்களும் தமதுஅடையாளத்தைவெளிப்படுத்துவதற்கு இலக்கியத்தைமுக்கியசாதனமாகப் பயன்படுத்திஉள்ளனர். ‘மரணத்துள் வாழ்வோம்’ என்றகவிதைத் தொகுதி ஈழத்துத் தமிழ் சமூகத்தின் ஒட்டுமொத்தமானபோராட்டவலியைவெளிப்படுத்துவதாகஅமைந்தது. இதேபோன்று‘மீசான் கட்டைகளில் மீளஎழும் பாடல்கள்’ என்றதொகுதி போராட்டத்தின் உக்கிரத்திற்குள் நசுங்குண்ட முஸ்லிம்களின் வலியைவெளிப்படுத்தியது. அதேநேரம்தொகுதிகளாகவெளிவராவிடினும் 1980களுக்குப் பின்னர் ஈழத்தில் வெளிவந்தபெரும்பாலானசிறுகதைகள் அவ்வச்சமூகஅடையாளத்தைவெளிப்படுத்துவதில் பெரும் பங்குவகித்தன.


1950களில் அ.ஸ.கிழக்கிலிருந்து சிறுகதைஎழுத முனைந்தபொழுது வேறொருவிதமான நெருக்கடியைச் சந்தித்தார். தமிழகசஞ்சிகைகளுக்குஅவர் எழுதியசிறுகதைகளில் இருந்த இங்குள்ளஊர்ப்பெயர்களும் ஆட்பெயர்களும் திருத்தப்பட்டுத் தமிழகப் பாணியிலே வெளிவந்தது. ஈழத்துச் சுதேசஉணர்வுகளுடன் எழுதப்பட்ட அவரது கதைகள் செங்கல்பட்டுவாகவும் ஆபீசாகவும் தலைமைக்குமாஸ்தாவாகவும் திருநெல்வேலிச் சந்தியாகவும் மாற்றப்பட்டவரலாறுஉண்டு.

 அதுபோக ஷரிஆ சம்பந்தப்பட்டபிரச்சினைகளைக் கதைக் கருவாகக் கொண்டுஅவர் சிலகதைகளைஎழுதியவரலாறும் உண்டு. இந்தத் தொடர்ச்சிபோக 1980களில்தான் தமதுசொந்தசமூகஅடையாளங்களை இயல்பாகவும் வேண்டுமென்றும் தமதுகதைகளுக்குள் கொண்டுவரநமதுஎழுத்தாளர்கள் முனைந்தனர்.


இந்தவரிசையில் சாய்ந்தமருதைச் சேர்ந்த தீரன் ஆர்.எம். நௌஸாத் ‘வல்லமைதாராயோää‘வெள்ளிவிரல்’ என்ற இரு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டவர். இவரது பிந்திய சிறுகதைத்தொகுதியில் இனப்பிரச்சினை தொடர்பான பல்வேறுகதைகள் வெளிவந்தபோதும் முஸ்லிம் சமூகம் சார்ந்த சிலகதைகளும் வெளிவந்தன. அதேபோன்று இத் தீரதம் என்ற தொகுதியில் வெளிவந்தகதைகளும் இனப்பிரச்சினை சார்ந்ததும் சமூக அடையாளங்களை வெளிப்படுத்தும் கதைகளாகவும்அமைந்துள்ளன.


அதேநேரம் ‘நட்டுமைää’ ‘கொல்வதெழுதுதல் 90’ ஆகிய இரண்டு நாவல்களையும் தீரன் எழுதியுள்ளார். கிழக்கில் நாவல் துறையின் வளர்ச்சி மிகவுமே போதுமானதல்ல. அவ்வாறு இருப்பினும் இவ்விரு நாவல்களையும் முக்கியமான நாவல்களாகக் கொள்கிறபோதும் இதனுள் உள்விழுந்து பார்க்கிறபோது விமர்சனரீதியாகச் சிலகேள்விகளை எழுப்பவேண்டிய தேவையிருக்கிறது. அதேபோன்று தீரதம் என்ற இத்தொகுதியில் வெளிவந்தசிறுகதைகள் சிலவற்றைப் பற்றியும் சிலகேள்விகள் எழுப்பவேண்டியிருக்கிறது. ஒட்டுமொத்தமாகக் கிழக்கு முஸ்லிம் சமூகத்தின் அனுபவங்கள் இந்தக் கதைகளில் பதிவாகியிருப்பதுகுறிப்பிடத்தக்கது.


‘ஒய்த்தாமாமா’ää‘பொன்னெழுத்துப் பீங்கான்ää தீரதம். முதலானகதைகள் முஸ்லிம் சமூகம் சார்ந்த மிகமுக்கியமான கதைகள். இப்போதைய சிறுவர்களுக்கு ஒய்த்தாமாமா பற்றிய அனுபவம் இருப்பதில்லை. ஒய்த்தாமாமாவின் வேலைகள் எல்லாவற்றையும் வைத்தியர்கள் பாரமெடுத்துக்கொண்டார்கள். முஸ்லிம்களிடம் சாதிஉண்டா என்று கேட்பவர்களுக்கு ஒய்த்தாமாமா ஓர் ஆதாரமாக அமையக்கூடும். ஆனால்ääஅந்தச் சமூகக் கட்டுமானத்தைப் பற்றி தீரன் சொல்லவரவில்லை என்று நினைக்கிறேன். அதேநேரம ;ஒய்த்தாமாமாவைப் பற்றிய ஒரு பதிவினை தீரன் மிகஅற்புதமாகக் கொண்டுவந்திருக்கிறார்.

‘பொன்னெழுத்துப் பீங்கான்’ லண்டனுக்குச் சென்ற தன் மகளின் செய்தியை அறியவிரும்பும் தாயின் ஏக்கத்தைவெளிப்படுத்துகின்ற ஒரு நல்லகதை. அவள் பக்கத்தில் ஒரு வெள்ளைக்காரனோடு நின்று எடுக்கப்பட்டஒரு புகைப்படப் படத்தைக் கண்டவுடன் அந்தத் தாய்க்கு ஏற்பட்ட மனஉணர்வு மிகஅற்புதமாக இந்தக் கதையில் வருகிறது. புலிகளினால் கொலைசெய்யப்பட்டதன் கணவர் ஒரே பீங்கானிலே–பொன்னெழுத்துப் பீங்கானிலே சாப்பிட்ட கதையை அந்தத் தாய் இக்கதையில் விபரிக்கிறாள்.
“அப்படிப்பட்டஎனக்கிப் பொறந்தஒனக்கிட்டயும் அந்தப் பொன்னெழுத்துப் பீங்கான்தான் இரிக்கிம்..அதுலநீஆரையும் சாப்பிடஉடமாட்டாய் ண்டும் எனக்கித் தெரியிம்..ண்டாலும் புள்ளே..எண்டமனம் கெடந்துஅல்லாடுது.. ஒடன இந்த கெசட்டுப் பீசக் கேட்டஒடனே… நாட்டுக்குப் பறந்துவாடா என்டகண்டுமகளாரே! நீ வெராட்டி என்ட மய்யத்துலதான் முளிப்பாய்.. செல்லிட்டன்.. வல்லபெரியநாயன் ஒனக்கு ஒதவி செய்யட்டும்.. ஆமின்… ம்க்க்க்க்..ம்ம்ம்.
கிராமிய உணர்வு ததும்பும் இக்கதையில் பொன்னெழுத்துப் பீங்கான் இங்கு ஒரு குறியீடாக வருவதாகவே நான் உணர்கிறேன். இக்கதையிலும் முஸ்லிம் உணர்வு சார்ந்த வியாக்கியானம் ஆங்காங்கே வருகிறது.

தீரதம் என்பது இறைகாதலை வெளிப்படுத்துகிற மிகமுக்கியமான ஒருகதை. சூபி இசம் சார்ந்த இக்கதை பழைய மெய்ஞ்ஞான பாடல்களின் இன்னுமொரு வியாக்கியானமாக உரைநடையில் வந்த ஒன்றாகவேநான் நோக்குகிறேன். புதுமைப்பித்தன் முதலான பலசிறுகதை ஆசிரியர்களும் இந்தத் தத்துவார்த்தரீதியான ஆன்மீகம் சார்ந்த கதைகளை எழுதியிருக்கிறார்கள். அவ்வகையில் முஸ்லிம்கள் சார்ந்த ஆன்மீகரீதியான உணர்வினை வெளிப்படுத்துகிற மிகஎளிய ஒருகதையாகவே தீரதம் கதையைக் கொள்ளலாம்.

கிராமிய அனுபவங்களைக் கூறுகிற அதுவும் கிழக்குப் பிரதேச கிராம அனுபவங்களைக் கூறுகிற ஒரு நல்லகதை ‘மறிக்கிடா. ஆனால்ää இக்கதையைப் பொறுத்தவரையில் மாற்று இனப் பாத்திரங்கள் கதையாகி இருப்பது நமது இன உறவுக்கு அப்பாலே முரண்படத்தக்க கேள்விகளையும் எழுப்பக்கூடும். இப்படியான கதை சொல்லுகிறபாங்கு ஈழத்துச் சிறுகதை மரபிலே உண்டு. மிகக் கவனமாக இந்தமாற்று இனப் பாத்திரங்களைக் கையாள்வதில் ஆசிரியர்கள் மிகப் பொறுப்புடன் செயற்பட வேண்டிய தேவையிருப்பதாகவும் நான் உணர்கிறேன்.

‘அணில்’ இன ரீதியான விவகாரங்களை வெளிப்படுத்துகிற ஒருமுக்கியமான நல்லகதை. இதேபோன்று புதியஉத்தியில் அமைந்த இன விவகாரங்களைக் கையாள்கிற மற்றுமொருகதை ‘காக்காமாரும் தேரர்களும்’ இக்கதை வெறும் செய்திகளைத் தொகுத்துச் சொல்வதாக இருந்தாலும் ää
”இதெல்லாம் ஒருசிறுகதையா?’ என்று முகத்தில் வீசினார் பத்திரிகைஆசிரியர். இதெல்லாம் சிறுகதையல்ல.. பெரும்பெரும் கதைகள்.. என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினேன். –
இக்கதையிலுள்ள‘பெரும்பெரும் கதைகள்’ என்றசொல்லின் மூலமே இச்சிறுகதையின் முழு அர்த்தத்தையும் ஆசிரியர் வெளிக்கொண்டுவருகிறார். இவ்வகையான கதைகளை தீரன் முன்னரும் எழுதியுள்ளார்.

 ‘மும்மான்’ என்றகதையும் இன ரீதியான விவகாரங்களை வெளிப்படுத்துகிற நல்லகதை.
இலக்கியக்காரர் ஒவ்வொருவருக்கும் அவரவர் வீட்டிலே இருக்கிற பிரச்சினைகளை ஒரு அற்புதமான உத்தியோடு அணுகியிருக்கிற ‘கபடப்பறவைகள்’ என்ற கதை சுவாரசியமானதுதான்.


மேலும்சில கதைகளோடு அமைந்த இந்த தீரதம். என்ற தொகுதி ஒருநல்ல சிறுகதை ஆசிரியன் ஆர்.எம். நௌஸாத் என்பதற்கு மிகப் பெரும் சான்றாகும். நல்ல படைப்புக்களை வாசிக்கின்றபோது இன்னும் இன்னும் செழுமைபெற்ற நல்லகதைகள் வந்துசேரும். அதுமாத்திரமன்றி இந்தக் கதைகளைச் செப்பனிடச் செப்பனிட இன்னும் நல்லகதைகள் வந்துசேரும். நௌஸாத்தின் கதைகள் புதியஅனுபவங்களைத் தருகிற நல்லகதைகள் என்பதில் நமக்குச் சந்தேகமில்லை. தீரதம் ஆசிரியருக்கு நமது பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும் என்றும் உண்டு.


கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ்
தலைவர்.. மொழித்துறை
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.
ஒலுவில்- சிறிலங்கா.
2016.11.10


Mohamed Haniffa நல்லதொரு ஆய்வும் பார்வையும்


Vimal Kulanthaivelu இன்றுதான் தெரியும் நீங்கள சாய்ந்தமருதை சேர்ந்தவரென்று . . . நல்ல உரை தீரர்.

தீரன். ஆர்.எம் நௌஷாத் நம்ம profileஐ இது வரையும் நோண்டிப் பார்க்காத ஒரே நபர் நீங்கள்தான் என்று விளங்கிற்று,, 🤣

Vimal Kulanthaivelu பிரபல்யங்களை நோண்டலாமா ?

Mohideen Saly சிறப்பு! நிகழ்வுக்கு வரமுயற்சித்தும் முடியவில்லை மன்னிக்கவும்! தீரதம் கிடைக்க வழி செய்யவும்

தீரன். ஆர்.எம் நௌஷாத் இல்லை வர முயற்சிக்கவில்லை.....பரவாயில்லை...காத்தான்குடியில் சந்திப்போம் விரைவில்


Mohamed Ali தீரன் அவர்களே உங்களது தீரதம்
சிறு கதைத் தொகுப்பிலுள்ள கதைகள்
பற்றிய விமர்சனக் குறிப்பைப் படித்தேன். கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் அதனை எழுதி இருந்தார். அவரது ஆய்வுக் குறிப்பினூடே உஙகளது சிறுகதைகளின் தார தம்மியம் பளிச்சிட்டன. சிறுகதைக்குரிய பண்பு
நலங் குறையாது வாசகனை வளைத்துப் பிடிக்குந் திறனோடு எழுதும் வல்லபம் உங்களிடம்உள்ளது என்பதை கலாநிதி றமீஸ்அப்துல்லாஹ் அவர்கள் வழங்கிய
ஆய்வுப் பார்வையூடாக மட்டுமல்லஏலவே உங்கள் சிறுகதைகளை ஞானம் சஞ்சிகையிலும் படித்து அறிந்துள்ளேன். கதை எழுதும் கலைகைவந்துள்ள துங்களுக்கு! என்னும்
போது என் வார்த்தைகளில் பொய்வந்துள்ளது எனக் கொள்ளாதீர்.

தீரனே! ஒரு தரம் உங்கள் தீ ரதம்படிக்கக் கிடைத்தால் நான் பரவசம்அடைவேன் என்று நினைக்கிறேன்.
தரமான வாசகர்கள் நிச்சயம் தீரனைத்தேடிப் படிப்பார்கள்.

தீரன். ஆர்.எம் நௌஷாத் மிக்க நன்றிகள் கவியரசரே

Adam Iyoobkhan முன் மொழிவு அருமை ,,கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் சேரின் ,,,அருமையான ஆய்வுப் பார்வை ,,..,வாழ்த்துககள் ,.,

Mumthas Hafeel நனறி தீரன்

எழுத்தாளர் மையம் மருதமுனை எழுத்தில் மாவீரன் எங்கள் அன்புக்குரிய தீரன் ! வாழ்த்துக்கள்.

தீரன். ஆர்.எம் நௌஷாத் கலை ஊக்கிக்கு நன்றிகள்

Akbar Digamadulla தீரதம் ஒன்று கிடைக்குமா?

மருதூர் ஜமால்தீன்




கருவது சமுகக்கவலையை உளமேற்றித்தருகின்ற கதையிது  தீரனின் தீரதம்பிறாிடம் பிடிபடாபிழையற்றசொல்லாடல்திறமையே இவாிடம்தந்தது    தீரதம்படிப்பவா் உணா்விலே  பழைமையின் வாசனைநடிப்பிலா வாழ்வியல்நமக்கீந்தாா் தீரதமஎழுத்திலே ஆய்விலேஎழுந்திடும்கருத்திலேபழுதிலா சிந்தையில்படைத்தட்டாா் தீரதம்  சமுகத்துவாடையும் சால்புயா்சிந்தையும்வெகுமதியிறையிடம்வரப்பெற்ற தீரனேமானுடக் கொடுமையைமாற்றிட வெகுண்டவா்பேணியும் எழுத்தினைபடைத்த இத்தீரனே எழுகயெம்தீரனேஎழுத்தெனும் ஆயுதம்பழுதித்தீ நெஞ்சோரைத்திருத்திடத்தொடா்ந்திடு

Wednesday, May 24, 2017

பர்ஸான் முகம்மது-சம்மாந்துறை

தீரதம் - வயது வந்தவர்களுக்கு மட்டும்!
                             Farzan Mohamed 

வாலிபம் குறையாத வார்த்தைகளை கையாளும் எழுத்தாளன் ஒருவர் தனக்கு வயதாகி விட்டதாக பேச்சுக்கு சொல்லிக் கொள்வார். அவர் தான் 'தீரதம்' சிறுகதைத் தொகுதியின் தாயும் தந்தையுமான தீரன் ஆர்.எம்.நௌஸாத் அவர்கள்.
வெறுமனே வார்த்தைகளை கோர்த்து கதைகளாகவும் கவிதைகளாகவும் விற்கின்ற எழுத்தாளர்களிடையே சற்று வித்தியாசமாக இவர் வார்த்தைகளை ரசித்து நீள அகலம் புரிந்து கதைகளை வடித்து தன்னை அதனுள் உலாவ விட்டு வாசகர்களுக்கு தன்னையே விற்பனை செய்கிறார். காரணம் அவர் பாணியில் கதை சொல்லி வேண்டும் என்பதற்காய்.
நான் ஒவ்வொரு முறையும் சொல்வதுண்டு; தமது பிரதேச வழக்கு சொற்களை பயன்படுத்தி இலக்கியம் படைப்பதாலும் அநாகரீகமான விடயங்களைக் கூட நாகரீகமாக சொல்லி ரசிக்க வைப்பதனாலும் என் போன்ற பலர் இவரையும் இவரது இலக்கியங்களையும் அதிகம் நேசிப்பதுண்டு.
இங்கு தீரதம் சிறுகதைத் தொகுதியிலே மொத்தமாக 10 சிறுகதைகளை வாசிப்பிற்கு சமர்ப்பிக்கிறார். இவரது கதைகளை படிக்கையில் எனக்கு தோன்றுவதெல்லாம் "ஏனைய எழுத்தாளர்கள் எழுத மறந்த விடயங்களை நேரம் ஒதுக்கி இவர் கவனிக்கின்றாரா இல்லை ஏனையவர் துணியாத விடயங்களில் இவர் துணிகின்றாரா..." என்பதே.
இங்கு ஒவ்வொரு கதையும் வெவ்வேறு வடிவங்களை வெளி்ப்படுத்துகின்றன. இவ்வாறும் சிறுகதைகள் இருக்கலாம் என இவரது சிறுகதைகள் பிரச்சாரம் செய்கின்றன.
இத் தொகுதியிலே 'மறிக்கிடா' எனும் ஒரு கதை உண்டு, அதைப் படித்த போது என்னை அறியாமலேயே அவையில் சிரித்து விட்டேன். மேலும் 'கள்ளக் கோழி' கதையை படித்த போது சமூக எதார்த்தத்தை உணர முடிந்தது. 'ஒய்த்தா மாமா' கதை என் இளமைக் காலத்தை மீட்டிப் பார்க்கச் செய்தது. அது எந்தளவெனில் அக்கதையை படித்து முடித்து விட்டு சாய்ந்திருந்து இருபது வருடங்கள் எனை பின்னோக்கி அழைத்துச் சென்றேன். இது தான் தீரனின் உத்தி.
நான் கதைகளைப் பற்றி; அவற்றின் சாராம்சத்தை ஒரு போதும் சொல்லப் போவதில்லை. ஏனெனில் நீங்கள் முழுவதுமாக அவற்றை நுகர வேண்டும் என்பதற்காகவே. நான் சொல்வதற்கும் குசும்பன் தீரன் சொல்வதற்கும் பல இடைவெளி உண்டு.
நான் படித்து முடித்த கையோடு என் தோழி ஒருத்தி தீரதம் தொகுதியை வாசிப்பிற்கு பற்றிக் கொண்டாள். மூன்று மணி நேரம் கழித்து எனை தொலைபேசியில் அழைத்து "வளிசல்... என்னடா புத்தகம் இது..." என்றாள். நான் "சிறுகதைப் புத்தகம்" என்றேன். பிறகு "படித்தாயா... எவ்வாறு உள்ளது..." என்றேன். அதற்கவள் "மறிக்கிடா தலைப்பு வித்தியாசமாய் இருந்தது. படித்துப் பார்த்த போது தான் உனதும் தீரனதும் ரசனை புரிந்தது..." எனச் சொல்லி அழைப்பை முடித்துக் கொண்டாள்.
நல்ல வேளை 'கள்ளக் கோழி'யை அவள் படிக்கவில்லை போலும்!
*
நான்,
முஹம்மது பர்ஸான்.
சம்மாந்துறை.
23.05.2017
Issath Rehana, Sajeeth . ஆர்.எம் நௌஷாத் மிக்க நன்றிகள் தம்பி பர்சான்... விழாவுக்கு வந்து ...தந்து இதைப் பகிர்ந்து கொண்டமைக்கு....உன் தோழி '' வளிசல்... என்னடா புத்தகம் இது..." என்றாளே அந்த சொல்லில் தீரன் வாழ்கிறான். Basith தீராத பசியோடு நானும் காத்திருக்கிறேன். இன்ஷா அல்லாஹ் ஊர்வந்ததும் கள்ளக்கோழியை பிடித்திவிடுவேன். கவிப்பூவரசர் பர்சான் உம் தீரதத்தையும், தீரதத்தையும் பக்குவமாய் வைத்துக்கொள்ளும் நாவாற ருசிக்கும் வண்ணம்... பெண் தோழியிடம் தீரதத்தை வாங்கி சலவை போட்டு வையும், தொற்றுக்கள் தொற்றாதிருக்க...med கண்டிப்பாக உங்களை தீரனிடம் அனுப்பி குணப்படுத்த வேண்டும். உமது பசியை அவர் மட்டுமே போக்கக்கூடியவர். உம்முடையது தீராத இலக்கியப் பசியல்லோ...றிந்தவர் நீர்மட்டும்தான் என்பதையானறிவேன்... அதைபோல் என்தீனி யாதென்பதையும் நீரறிவீர்...தீரதத்தை தயார்படுத்தும்...தீராப்பசியுடன் நான் தயார்..ரசனைக் குறிப்புகள்- தீரன் ஆர் எம் நெளஸாத்தின் தீரதம் மண லில் விளையாடித் திரியும் அரைநிஜார் பையன், வாயில் நாவூற மாமரத்திற்கு கற்களால் எறிகிறான், மாங்காய் விழுகிறத...See More Mahdy Hassan Ibrahim கள்ளக்கோழி கொழும்பு வரட்டும்! ஒரு கடி கடிக்கிறேன்! ஆர்.எம் நௌஷாத் பலபேரும் கடிச்சிக் கடிச்சி வெறும் முள்ளுத் துண்டுகள்தான் மிச்சம் மஹ்தி 🤣arzan Mohamed எலும்பென்டாலும் கள்ளக் கோழிட போல வருமா என்னsmailjalal Mohamed Ismail Deeranin kiramiya sol valam.....rompa piramadam....ithuvaraium nam pahuthil veru yaraium kallappa....
ns
Rahmathullah Str எங்கவாப்பா புத்தகம் #வெள்ளிவிரல்லயே என் விரலும் ஒருசாதியா ஆனிக்கி....
இதையும் குடுப்பா...


Tuesday, May 23, 2017

எம் எம் நெளஷாத்

ரசனைக் குறிப்புகள்- தீரன் ஆர் எம் நெளஸாத்தின் தீரதம்





மணலில் விளையாடித் திரியும் அரைநிஜார் பையன், வாயில் நாவூற மாமரத்திற்கு கற்களால் எறிகிறான், மாங்காய் விழுகிறது, பரணுக்குள் ஒளித்து உப்பு தடவி சாப்பிடுகிறான்- இந்த சுகானுபவம் இருக்கிறதே, ஆஹா ஆஹா ஆஹாஹா, அதே அனுபவத்தைத் தந்தது தீரனின் தீரதம்.
வெறித்தனமான வர்ணனை இல்லை, வெட்டிப்பேச்சு இல்லை. ஒவ்வொரு சம்பவக் கோர்வையையும் ஒவ்வொரு கறுப்பு வெள்ளை புகைப்படமாக எடுக்கலாம், கனகச்சிதமாக மனதில் நிற்கிறது.
தீரனின் முகத்தில் மோனாலிசா ஓவியத்தைப் போல் எப்போதும் ஒரு ஹாஸ்யப் புன்னகை தவழ்ந்து கொண்டிருக்கும், அந்த அங்கதம் கதையில் நுழைந்தால் எப்படியிருக்கும்? கதை முடியவும் குபீரென்று சிரிப்பால் அதிர்ந்து விடுகிறோம்,
தீரன் நீங்கள் இப்பதி கிராமிய மரபுகளை கதையில் கொண்டுவரும் தனித்த ஆளப்பா! 
பிரதேச நகைச்சுவை உணர்வை மிக நேர்த்தியாக கதையில் கொண்டு வருகிறீர்கள், சொல்லட்டா? மலையகத்தில் மிக அழகாக இருப்பதற்கு பசுந்தா இரிக்கீங்க என்று சொல்வார்கள். 
தீரன் உங்கள் மொழிநடை பசுந்தா இருக்கிறது, உங்கள் பேச்சுவழக்கு பசுந்தா இருக்கிறது, உங்கள் நடையழகு பசுந்தா இருக்கிறது,
 அப்படியென்றால் கொஞ்சோணும் போல இருக்குது,
தீரன் ஐயா, நூல் தளக்கோலத்திலும் இன்னும் சற்று கவனம்
 செலுத்தினால் நன்று போல் தோன்றுகிறது, வாழ்த்துகள்

0
தீரன். ஆர்.எம் நௌஷாத் சொர்க்கபுரி சங்கதிகள் புனைவுகள் மூலம் தென் கிழக்கு சிறுகதை உலகுக்கு ஒரு புதிய பரிணாமம் தந்தவர் நீங்கள் ...............நாம எதோ பழைய கறுப்பு வெள்ளைப் பாட்டுப் படிக்கிற ஆட்கள்...உங்களிடமிருந்து இப்படி ஒரு ரசனைக் குறிப்பு கிடைத்திருப்பதே ஒரு பெரிய அங்கீகாரம் என எண்ணி மகிழ்கிறேன்....வேலைப்பளுக்களின் மத்தியிலும் வந்து கனமான அன்பளிப்பும் தந்து கௌரவித்தமையை என்றென்றும் நன்றியுடன் நினைத்திருப்பேன் டொக்டர்...



Kattankudy Fouz தீரன் நௌஸாத் இலக்கிய
உலகில் பேசப் பட வேண்டிய ஒருவர். காரணம் அவரின் கற்பனை வளம்! தமாஸ்...
சீராக சிந்திக்கின்ற மனோ பாவம்! பழைமையை ஓரம்...See More



Adam Iyoobkhan அருமை,,,,தீரனின் முகத்தில் மோனாலிஸா ஓவியத்தைப் போல் எப்பொழுதும் ஒரு ஹாஸ்யப் புன்னகை தவழ்ந்து கொண்டிருக்கும் ,,,.,


Farzan Mohamed அருமை டொக்டர்...
உமது மென்மையான குணம் போலவே உமது விமர்சனமும் இதமாக உள்ளது. உமது நூலில் இன்னும் 5 கதைகள் பாக்கி உள்ளது. விரைவில் நாம் அது பற்றி உரையாடுவோம்

Monday, May 22, 2017

சபாத் அஹமத் தந்த புகைப்படங்கள்

 வெளிநாட்டமைச்சின் சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம் ஏ எல். அப்துல் அஸீஸ் 


 தெ .கி.ப.க. தமிழ்த்துறை தலைவர் கலாநிதி ரமீஸ் அப்துல்லாஹ் 



நூலின் பிரதிமை பிரதி கையளிப்பு - வைத்திய அத்தியட்சகர் சஹிலா இஸ்ஸதீன் 



 நூலின் பிரதிமை பிரதி கையளிப்பு -- எம்.ரி.எ. நிஸாம் (மாகாண கல்விப் பணிப்பாளர் 


 வைத்திய அத்தியட்சகர் சஹிலா இஸ்ஸதீன் 


 நூலின் பிரதிமை பிரதி கையளிப்பு -- கலாநிதி  றமீஸ் அப்துல்லாஹ் 


 நூலின் பிரதிமை பிரதி கையளிப்பு - எ.எல். அப்துல் அஸீஸ்


 எம்.ரி.ஏ . நிஸாம் -மாகான கல்விப் பணிப்பாளர் 


 நூலாசிரியர்- நன்றியுரை 





சாஜித் அஹ்மத் --- தீரனின் கதை உலகம் -

தீரனின் கதை உலகம் - #தீரதம்

000



இரவோடு இரவாக, ஒரே மூச்சில் தீரன் ஆர்.எம் நௌஸாதின் 'தீரதம்' சிறுகதை தொகுப்பினை வாசித்து முடித்து விட்டேன். தீரனின் கதையுலகம் மிக விசித்திரமானது. நட்டுமை, கொல்வதெழுதுதல் 90 போன்ற நாவல்களில் புரிந்து கொள்ளப்பட்ட விடயமது. வெள்ளி விரல் சிறுகதை தொகுப்பிற்குப் பிறகு தீரனின் தீரதம் வாசிக்க கிடைத்ததில் பெரு மகிழ்ச்சிதான். 

கவிதைகளால் மாத்திரம் நிரம்பி வழிகின்ற இக்கால எழுத்துச் சூழலில் நாவல்களினதும், சிறுகதைகளினதும் வருகை அதிசயமாகவே நிகழ்கிறது. அதிலும் கிழக்கில், கவிதைத் தொகுப்புக்களின் வருகையானது மலிந்து கிடக்கின்ற பண்டப் பொருளாகிவிட்டது. நாமெல்லாம் பயந்துவிடாதபடி தீரன் கவிதைகள் எழுதவில்லை என்பது பெரும் திருப்திதான்.


'ஒய்த்தா மாமா' என்று ஒரு கதை இருக்கிறது இத் தொகுதியில். ஒவ்வொரு முஸ்லிமும் சந்திக்க வேண்டிய ஒரு முக்கிய கதாப்பாத்திரமாக அதனை வடிவமைத்திருக்கிறார் தீரன். தற்கால முறையில் வைத்தியர்களே சுன்னத்து வைத்து விடுவதால் ஒய்த்தா மாமாக்களின் வருகையும் குறைந்து விட்டது என்கிறார். எல்லாவற்றையும் தாண்டி சுன்னத்துக் கல்யாணமும், குஞ்சாமணியினை வெட்டி விடுவார் என பயமுறுத்தும் நினைவுகளையும் மிக அற்புதமாக சொல்கிறார் தீரன். கலாச்சார பண்பாடுகளின் மறக்கடிக்கப்பட்ட கூறுகளை மீண்டும் ஞாபகப்படுத்துகின்ற ஒரு கதை சொல்லியாக தீரனைப் பார்க்கிறேன். ஒய்த்தா மாமா கதை மூலம் சிலவற்றை கட்டுடைத்தும், ஒற்று நோக்கியும் தீரன் கடந்து செல்லும் கிராமியம் மிக ரம்மியமானது.


அடுத்து என்னை மிகவும் கவர்ந்த கதை 'மறிக்கிடா' டபுள் மீனிங்கில் ஒரு முழுக் கதையினையும் நகர்த்திச் செல்ல முடியுமா? எனும் கேள்விக்கு தீரனின் இக்கதையே தக்க சான்று. நேரடியாக சொல்ல கூச்சப்படுகின்ற அல்லது சொல்வதற்கான நெருக்கடிகளை தகர்த்து எறியும் மூலதனம் தீரனுக்கு வாய்த்திருக்கிறது. பெண் ஆட்டிற்கு இனப்பெருக்கம் செய்வதற்காக வெளியூரிலிருந்து கொண்டுவரப்படும் கிடாவினை ஒரு குறியீடாகக் கொண்டு, இரண்டு கதைகளை ஒரே புள்ளியில் நகர்த்தியிருக்கிறார் தீரன். முழுக்க முழுக்க டபுள் மீனிங்கில் சொல்லப்பட்ட கதையின் கிளைமெக்ஸ் இப்படித்தான் முடியும் "சற்று நேரத்தின் பின் தொழுவத்துக்குள் மய்யதீன் காக்காவின் மறிக்கிடா வேகத்துடன் இயங்கத் தொடங்கியது. அகிலமக்கா அதன் வேகத்தில் இலயித்துவிட்டாள்... சின்னப்பர் வரச் சுணங்கும் தானே"


'பொன்னெழுத்துப் பீங்கான்' புலி பயங்கரவாதத்தினால் கொல்லப்பட்ட ஒருவனின் மனைவி, தனது பெண் குழந்தையினை வளர்ப்பதில் எதிர் கொள்கின்ற பெரும் துன்பம் பற்றிய கதையாடலை கொண்டிருக்கிறது. முழுமையாக இக் கதை இதனை பேசாவிட்டாலும், இடை இடையே இம்மாதிரியான புலி பயங்கரவாத்தின் கொடூரங்கள் இக்கதையில் தலைகாட்டுகின்றன. ஆனால் கதையின் ஒரு மித்த குரல் வேறு விடயத்தின் மீதே கரிசனை கொள்கிறது.


'அணில்' ஒரு விசித்திரமான கதை. மனித உணர்வின் வங்குரோத்து அரசியலினை மிக நுணுக்கமாக சொல்லியிருக்கிறது. இறுதியில் இக்கதையின் முடிவினை மாற்றியல் பார்வையினூடாகவே தந்திருக்கிறார் தீரன். தமிழ் - முஸ்லிம் - பௌத்த உறவின் வெளிப்பாடு பற்றியும், இறுதி நிலைப்பாட்டில் அவை கொள்கின்ற மரபு முறைச் செயற்பாடும் கதையின் போக்கினை இன்னொரு பக்கம் நகர்த்தியிருக்கிறது. உறவுப் பாலத்தின் பெரும் நெரிசலினை இக்கதை தோற்றுவித்தாலும், தீரனின் மனோ நிலைசார்ந்த அரசியல் எதிர்மறையாகவே சிந்தித்திருக்கிறது. அதற்கான காரணங்களை வரலாற்றிலிருந்து நாங்கள் நோக்க முடியும். அவற்றினை மறந்து விட்டாலும், இலகுவில் கடந்துவிட முடியாத வடுவாகவே எம் மனதினில் இருக்கிறது. அம்மனதின் வெளிப்பாட்டினை கதை சொல்லியாக ஒரு அணில் உலாவருவதும், அது உணவாகிவிடுவதும், பின்பு அதுவே பழக்கமானதாக அறிக்கை விடுவதும் காலத்தின் தவிர்க்க முடியாத அபத்தமாகும்.


'காக்காமாரும் தேரர்களும்' பத்திரிகைச் செய்திகளாக, துணுக்குகளாக, உரையாடலாக வெளிப்பட்டு இறுதியில் பெரும் பெரும் கதைகள் என்றபடி முடிவடைகிறது. இதில் மிக அற்புதமான ஹாஷ்யம் என்னவெனில், ஆலிமு சபை சொல்கின்ற 'ஜனாதிபதி தலையிட வேண்டும்' எனும் வாக்கியமாகும். சிறுகதைக்குரிய பண்பு இக்கதையின் இறுதியில் முழுமையடைந்து விரிந்து நிற்கின்றன.


'கபடப் பறவைகள்' ஒரு நல்ல கதை. எழுத்தாளர்களுக்கான சாட்டையடி. ஒரு படைப்பாளனின் எழுத்துலகம், அவனால் சேமிக்கப்படுகின்ற சொத்துக்கள், அவற்றின் பெருமானம், அவன் மீதான பிறரின் நிலைப்பாடு என மண்ணறையில் இருந்து எழுந்து வருகின்ற ஒரு எழுத்தாளனின் உலகம் பற்றிப் பேசுகிறது. அதுவும் இறந்து 40 நாட்களின் பின் வருகிறார். மீண்டும் உலகத்தினை வெறுத்து மண்ணறைக்கே செல்கிறார். இறுதியில் இக்கதை இப்படி முடிவடையும் "என்னை மௌத்தாக்கியதற்கு மிக்க நன்றி இறைவனே... என்று துதி செய்து கொண்டே நெடுந்தூக்கத்தில் ஆழ்ந்தேன்"


இவை கதைகள் பற்றிய சிறு பார்வை மட்டுமே. இன்னும் இத் தொகுதியில் உள்ள கள்ளக் கோழி, தீரதம், மும்மான், ஆத்துமீன் ஆசை போன்ற கதைகள் பற்றி நிறையவே பேச முடியும். அதுவரைக்கும் தீரன். ஆர்.எம் நௌஷாத் எனும் அற்புதமான கதை சொல்லி வாழ்க...



MB Azam Mohammed தீரதம் எண்டா என்ன காக்கா


Nawfeer Atham Lebbe அற்புதமான பார்வை. ஆழ அகலத்தைச் சொல்லும் கதையாடல்.
#தீரதம் ஒன்றுமே சரியாக இன்னும் வாசிக்கவில்லை. 
ஒரு பரீட்சை வந்து தொல்லை தருகிறது. இன்ஷா அள்ளாஹ்


சில குறிப்புகள்

Mursith Mohamed நிகழ்வுக்கு வந்தும் கடைசிவரை இருக்க முடியாமல் போய்விட்டது.. அலுவலக வேலை நிமித்தமாக ஏற்கனவே பயணப்படவேண்டி இருந்ததால்....

நன்றிகலந்த வாழ்த்துப்பூத்தூவல்கள்..

தீரன். ஆர்.எம் நௌஷாத் இலக்கியனின் நைஸான நழுவுதலும் ஒரு ரசிக்கத்தக்க இலக்கியம்தான்...ஆறுதலாகப் பேசுவோம்


Shibly Ahamed சில தனிப்பட்ட மருத்துவக் காரணங்களால் வரமுடியவில்லை. வீடு வந்து நூலொன்றைப் பெறுகிறேன் இன்ஷா அல்லாஹ்

தீரன். ஆர்.எம் நௌஷாத் ----- சபாத் அஹ்மத் ,,,,,தேவைப்பட்ட புகைப்படங்களை தந்தீர்கள் சாச்சா......மிக்க நன்றிகள்.....சின்ன நூலுக்கு ஒரு பெரும் தொகை தந்தீர்கள்...என் சகோதரி வியந்து போய் மிகுதியை அங்கிளிடம் கொடுத்து விடு என்றாள்...என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் நான்.......

Rahmath Rajakumaran தீரன் இன்னமும் தர வேண்டும் இலக்கியத்தின் வாயில் திறந்தே இருக்கிறது


Waffa Farook உடல் வர மறுத்தாலும் மனம் பறந்து வந்து முன்வரிசையில் அமர்ந்து பிராத்தித்துகொண்டிருந்ததை நீ கண்டிப்பாய் நன்பனே!

Nawfeer Atham Lebbe சிறந்த நிகழ்வு. வாழ்த்துக்கள்


தீரன். ஆர்.எம் நௌஷாத் உங்களுடன் வெகு நேரம் பேசிக் கொண்டிருக்கக் கிடைக்கவில்லை... மீண்டும் சந்திக்க உரையாட மனம் ஏங்குகிறது நௌபீர்

Mumthas Hafeel தூரம் என்னைத் தடுத்தாலும்
மனக்காகமோ
முன்வரிசையில் அமர்ந்திருந்தது
பெருத்த பிரார்த்தைகளுடன்.
மன்னிக்க வேண்டுகிறேன் நண்பா.

தீரன். ஆர்.எம் நௌஷாத் அது நீங்கதானா...? அன்பான மனங்களுக்கு தூரம் ஒரு கேடா...? உங்கள் வாழ்த்தும் நீங்க வடிவமைத்த பிரதிமைகளும் என்னை உங்கள் பால் வெகுவாக ஈர்க்கச் செய்து விட்டது ஹபீல் -மிக்க நன்றிகள்

Mumthas Hafeel தீரத்தையும் மறிக்கடாவையும் கூடவே கட்டி VPP இல் அனுப்பி வையுங்கள்.காசு கட்டி வாங்கிக்கொள்கிறேன்.
Ramees Deen அல்ஹம்துலில்லாஹ்!

தீரன். ஆர்.எம் நௌஷாத் தங்கள் தந்தையார் என் அன்புக்குரிய ஆசுகவி அன்புடீன் அவர்கள் தன உடல் சுகயீனத்தையும் பொருட்படுத்தாது வந்திருந்து வாழ்த்திச் சென்றார்...உண்மையில் அன்பின் தீன் முழக்கம் அவர்தான்...

Ramees Deen "எல்லோரும் வாழ்வோம் இனிது"-இது எனதருமை தந்தையின் பிரார்த்தனை.
உங்களுக்கு நன்றி சேர்.

Mansoor A Cader மறிககடா மட்டும் வாசிக்கக்கிடைத்தது. அழகான காட்சிப்படுத்துகை. நுட்பமான கட்டமைப்பு. இயற்கையான படிமங்கள். ஒரு மலையாளப்படம் பார்த்த பிரமிப்பு. (பிறகு என்ன நடந்தது தீரன்)


Abdul Rasak Abdul Rasak நானும் வாசித்துவிட்டு நீண்டநேரம் யோசித்துக் கொண்டிருந்தேன்.


தீரன். ஆர்.எம் நௌஷாத் Mansoor A Cader sir... அதை ஏன் சேர் முதலில் வாசித்தீர்கள்...? ம்க்கும்..... அதன் பின் என்ன நடந்ததென்றால்...உண்மையில் மையதீன் காக்கா அந்த ஊரை விட்டும் திரும்பி வரவில்லை... அவனைத் தேடித் போன நண்பனும் வரவில்லை... அது இணக்கலவர் தீயாய் பற்றி எரிந்து இரு ஊர்...See More

K S Mohammed Shuaib இந்த காரியப்பர் என்றால் என்ன...?


தீரன். ஆர்.எம் நௌஷாத் காரியப்பர் என்றால் .....இது இலங்கை முஸ்லிம் சமுகத்தில் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினருக்கு மட்டும் வழங்கப்படும் குடும்ப்பப் பெயர்.....கி.பி.1600களில் ஏமன் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த ஒரு வைத்தியர் சிங்கள அரசனிடம் அரண்மனை வைத்தியராக கடமையில் அமர்ந்தார். அவரது வைத்தியத் திறமை கண்டு அந்த அரசன் அவருக்கு அளித்த பட்டப் பெயர் அது....சிங்கள மொழியில் ..கார்ய என்றால் அதிகாரி..பேரு என்றால் குறுநிலப் பகுதி... வைத்தியருக்கு சில கிராமங்களை வழங்கி கௌரவித்து வழங்கிய ஒரு பட்டம் கார்ய பேரு. அது நாடைவில் திரிந்து காரியப்பர் என வழங்கலாயிற்று...அந்தக் குடும்பத்தினர் இன்று வரை விடாப்பிடியாக தம் பெயருக்கு பின்னால் அந்த பட்டப் பெயரை ஒரு கட்டாய பெருமையுடன் உபயோகித்து வருகின்றனர்,,, அமைச்சர் எம்.எஸ்.காரியப்பர்-அமைச்சர் அஷ்ரப் போன்றோர் இந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள்....


K S Mohammed Shuaib ஓஹோ...அப்படியா....?


K S Mohammed Shuaib எனக்கு இந்திய ராணுவத்தின் பழைய தளபதி பேரு ஞாபகம வந்திட்டு...ஜெனரல் கரியப்பா..!!

தீரன். ஆர்.எம் நௌஷாத் K S Mohammed Shuaib நீங்கள் குறிப்பிட்ட ஜெனரல் கரியப்பா..யாரென்று நினைக்கிறீர்கள்...? கார்யப்பர் குடும்பத்திலிருந்து காணாமற் போன அதாவது கோபித்துக் கொண்டு வீடு விட்டு ஓடி காணாமல் போன அப்துல் ரஹீம் காரியப்பரின் மகன் ஆவார்....இந்துவாக மாறி வடநாட்டில் வாழ்வதாக நேரில் கண்ட இன்னொரு லாபீர் காரியப்பர் தன் நாட குறிப்பில் எழுதி உள்ளார்.


Isaac Henry Victor Since I have had plain-tea with MS several times while he sat on his easy chair ... this information and conversation is very valuable ... I am glad your book release went well. My best wishes to you and your family.

Mahdy Hassan Ibrahim நிகழ்வு மிகமிகச் சிறப்பாக நடந்ததில் மகிழ்ச்சி! இன்ஷா அல்லாஹ்! கொழும்பில் புத்தக நிலையங்களில் உங்கள் நூலைக் கிடைக்கச் செய்தால் வாங்கலாம்!


Abdul Gaffoor வெளியூர் நண்பர்கள் வீட்டுக்குவந்தன் காரணமாக வரமுடியவில்லை Sorry

Jamaldeen Wahabdeen நல்ல விழா தீரனும் தீரதமும் வாழ்க

Sunday, May 21, 2017

வபா பாரூக்


தீரன். எனும் இனியவனின் 'தீரதம்' சிறுகதை தொகுப்பு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிக்கு சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
நிகழ்வு நிறைவாக நடைபெற மனம் நிறைந்த வாழ்த்துக்கள் நன்பா
அன்புடன் பரீட் சன்

சரூக் அப்துல் அஸீஸ்

Image may contain: 2 people, people smiling, people standing
Want to tag yourself?  
Yes · No
Mohamed Sarook Abdul Azees
3 hrs
இன்று #தீரதம் சிறுகதை நூலை தீரன். ஆர்.எம் நௌஷாத் சேர் அவர்களிடம் வெள்ளோட்ட நிகழ்வில் பெற்றுக் கொண்ட போது.

ராசிக் கெளிஓயா





நம்ம சங்க சிங்கம் . . வீர தீரன் . . மன்மதக் குஞ்சு . . 
என் அருமை மச்சான் தீரன். ஆர்.எம் நௌஷாத் அவர்களின்
 "தீரதம்" சிறுகதைப் பிரதியின் வெள்ளோட்ட விழா நிகழ்வு 
சிறப்பாக நடைபெற சங்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம் !