Tuesday, November 27, 2018

மம்மகாசிம் சேமன்

மனேய் சித்திரா பேப்பருல கத படிச்சாலும் இம்படு விரப்பு வெரக்காது கா மறிக்கிடாக்கு
மெய்யா மெய்யா இத கொள்ள தரம் படிச்சிபோட்டன் இன்டகிம் புதுசா உச்சு கொட்டி படிக்கிராப் போலயே கெடக்கு கா தீரரு


Friday, October 19, 2018

காத்தான்குடி பஹ்மியா ஷெரீப்


Fahmiya Shareef is with R.M. Nowsaath.

"தீரரின் தீரதம்"


கிழக்கிலங்கைக்கென்று ஒரு தனியான இலக்கியச்சுவை இருக்கிறது.அது மண்வாசனையா? மொழி நளினமா? பாத்திரங்களின் உயிர்ப்புத்தன்மையா? எழுத்தாளர்களின் தனித்தன்மையா? ஏதோ ஒன்று நம்மை கட்டியிழுத்து அந்த எழுத்துக்களின் காலடியில் போட்டு விடுகிறது.
தீரரின் "தீரதம்" படிக்கும் போதும் ஏதோ பக்கத்து வீட்டுக்காரியுடன் நம் உள் வீட்டு யன்னலுக்குள் நின்று பேசுவது போல் அத்தனை இயல்பாய் இருக்கிறது.அதீத கற்பனைக்கெல்லாம் இடமில்லாது கதைகள் நம்மைச்சுற்றியே ஆட்டுக்குட்டியாட்டம் மேய்கிறது.
நகைச்சுவைக்கும் பஞ்சமில்லாது, சிலேடைகளுக்கும் சிக்கனமில்லாது,
மனிதகுலத்தின் யதார்த்தங்களையும், சமூகப்பரப்பின் ஆழங்களையும் பலவீனங்களையும் மிக அழகாகப்பேசுகிறது தீரதத்தின் பத்து சிறு(பெருங்)கதைகளும்.
கபடப்பறவைகளும்,அணிலும், ஆத்துமீனும் படிக்கையில் கண்களின் ஓரம் கரிப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை...தீரரே உமது பாசமான இலக்கிய நட்பு கிடைத்தமைக்காய் பெருமிதம் கொள்கிறேன்....
-தொடரும்-

Comments
Nafees Mohamed R.M. Nowsaath ♥️♥️♥️♥️
Manage
Reply1d
R.M. Nowsaath ஆஹா..ஒரு நயாகரா நன்றிகளும் எவரெஸ்ட் அன்பும் பஹ்மியா ஷெரீப்
Manage
Reply15h
aana Mackeen இந்த 'தீ - ரதம்' காலமெல்லாம் பேசப்படவேண்டிய ஒன்று. பயணித்துப் பார்க்க வேண்டிய ஒன்று...
Vadakovay Varatha Rajan நீங்கள் சொன்னது மிகையான வார்த்தைகள் அல்ல . ஆத்துமீன் ஆசை , பொன்னெழுத்து பீங்கான் என்பன அற்புதமான கதைகள்
Manage
Reply13hEdited
மருதூர் ஜமால்தீன் நானும் பல முறை படித்தேன் எனது சிறுபராயத்து எண்ணம்வரும்போது அதற்குாிய கதைகளைப்பாா்த்து எனது சிறுவயதுக்கிராமத்திற்கு சென்று வந்து ஆறுதலடைவேன் 
தீரனே இதே அமைப்பில் இன்னுமொரு தொகுதி வேண்டும் கிடைக்குமா
Manage
Reply13h
Mohamed Sabry தீரரின் நட்டுமை, கொல்வதெழுதுதல், வெள்ளிவிரல் எல்லாம் வாசியுங்கள்.. அவர் எப்பேர்ப்பட்ட ஆளுமை மிக்க எழுத்தாளர் என்பது புரியும். வாழ்த்துக்கள்தீரர்
Manage
Reply13h
Fahmiya Shareef Mohamed Sabryவாசித்துக்கொண்டிருக்கிறேன் சகோ..😊
Manage
Mohamed Musny Can I borrow ☺️
Manage
Reply11h

Tuesday, April 17, 2018

பேராசிரியர் முஜிபுர் ரஹ்மான்

பேராசிரியர் முஜிபுர் ரஹ்மான் 
                Mujeeb Rahman
இலங்கையை சார்ந்த நண்பர் ஆர்.எம்.நௌஸாத் எழுதிய தீரதம் என்ற சிறுகதை தொகுப்பை சமீபத்தில் தான் வாசித்தேன்.அருமையான கதைகள்.அற்புதமான வாசிப்பனுபவம்.சில கதைகள் தோப்பில் முஹம்மது மீரானை நினைவு படுத்தியது.பத்து கதைகள் தான்.ஆனால் பல்வேறு காலங்களின் இலங்கை முஸ்லிம்களின் வாழ்க்கையை சொல்லும் கதைகளாக இருக்கிறது.
இன்றைய கதைகள் அனைத்தும் இனவரைவியல் கூறுகளை கொண்டதாக இருக்கிறது.அந்த வகையில் சமகால மோஸ்தராக இத்தன்மை இலங்கை எழுத்தாளர்களிடம் இருப்பது ஒரே அலைவரிசையை காட்டுகிறது.நான் நௌஸாத்தின் அனைத்து கதைகளையும் நன்றாக ரசித்தேன்.ஒய்த்தா மாமா கதை நம் மொழியில் ஒசாவை குறித்து அமைந்திருக்கிறது.விருத்த சேதனம் செய்பவரை,முடித்திருத்துபவரை,மருத்துவம் செய்பவரை ஒசா என்று நமது பகுதியில் அழைக்கிறார்கள்.
அந்த கதையை வாசிக்கும் போது என் ஞாபக பரப்பில் எனக்கு சுன்னத் எடுத்த அந்த சம்பவம் பெரிய சம்பவமாக அமைந்ததை கொண்டு வந்தது.வட்டார மொழியை இலாவகமாக அவர் பயன்படுத்தி இருக்கிறார்.என்னை நிலைகுலைய வைத்த கதை பொன்னெழுத்து பீங்கான்.தலைமுறை இடைவெளியை காலமாற்றத்தை துல்லியமாக வெளிபடுத்தி இஸ்லாமிய வாழ்க்கை மதிப்பீட்டை அல்லது வைதீக மரபை காப்பாற்ற எண்ணும் தாயின் உள்ளத்தை காட்டும் சித்திரிப்பு அந்த கதை.
கனகட்சிதமாக பழமைக்கும் புதுமைக்குமான பாலத்தை அறுத்துவிடாமல் இழையோட வைத்திருக்கும் பாங்கு தேர்ந்த கதை சொல்லி என்று நௌஸாத்தை நாம் வியக்கிறோம்.புலிகளின் அராஜகம் முஸ்லீம் மத்தியில் எப்படி பாதிப்புகளை நிகழ்த்தேறியிருக்கிறது என்பதை வலுவாக அழுத்தம் திருத்தமாக இக்கதை வெளிப்படுத்துகிறது.
அதுபோல் தீரதம் கதை அற்புதமான கதை அனுபவத்தை தருகிறது.நிஜாமுதீன் அவ்லியாவின் வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இக்கதை தரீக்காவின் முக்கியத்துவத்தை சொல்லிச்செல்லுகிறது.
கபடப்பறவைகள்,ஆத்துமீன் ஆசை,அணில் போன்றவை புதுமை எழுத்தாக இருக்கிறது.இலக்கியத்தரமான கதைகளாக இக்கதைகள் அமைந்திருக்கிறது என்பதே இத்தொகுப்பின் முக்கிய அம்சமாகும்.நௌஸாத்தின் இத்தொகுப்பு தமிழ்சூழலுக்கு நல்ல வாசிப்பனுவத்தை தரும் என்று சொல்லிக்கொள்கிறேன்.
00