வாசித்தேன்......தீரன் நௌசாத் நாடறிந்த பிரபல்யமான எழுத்தாளர். சுமார் 7 நூல்களை இலக்கிய உலகிற்கு தந்துவிட்டு ஒன்றும் தெரியாத அப்புராணி போலவே தானுண்டு தன்வேலை உண்டு என்று இருப்பவர். அவரது கொல்வதெழுதல்-90 மற்றும் வெள்ளிவிரல் என்பன வாசகர்கள் மத்தியில் பலத்த சலசலப்பையும் அவர்மீதான அபிமானத்தையும் விதைத்தது எனலாம்.
தீர்த்தத்தில் இங்கு நான் பேசப்போவது வெறும் ஒரேயொரு கதையை மாத்திரமே அதுதான் ஒய்த்தா மாமா, அதுதவிரவும் கள்ளக் கோழி. மறிக்கடா என்று இன்னும் பேசவேண்டிய இரண்டு கதைகள் அதில் இருப்பது உபரியான தகவலாகும்.
ஒய்த்தா மாமா சிறுகதை -யதார்த்தினின் சுவடுகளை அடையாளப்படுத்தி நிற்கிறது. பழைய கிராமங்கள்,அதன் பண்பாடுகள்,கலாசாரங்கள் என்பன மதக்கிரிகைகளில் எவ்வாறான செல்வாக்கினை செலுத்தின என்பதனை ஒரு சிற்பியின் நுணுக்கத்துடன் வெகு லாவகமாக செதுக்கியுள்ளார் தீரன்.
முஸ்லிம்களின் ஆண் பிள்ளைகளுக்கான விருத்த சேசம் செய்கின்றவரை ஒய்த்தா மாமா என்று அழைப்பார்கள். அந்த விருத்த சேஷத்திற்கு தயாராக இருக்கின்ற ஒரு சிறுவனின் மனோ நிலையை அழகாக சொல்லியிருக்கும் தீரன் அதற்கூடாக இஸ்லாமிய மரபுவழிப் பாரம்பரியத்தை அடையாளப்படுத்தியுள்ளார்.
இப்போதுகளில் இல்லாமல் ஆகிப்போய்விட்ட பலவிடயங்களை இந்தக்கதைக்கூடாக தரிசிக்க முடிகிறது. கிழக்கு மாகாணத்தின் வாழ்க்கை வழக்குநெறிகளும் அந்தப்பிரதேசத்தின் இயல்பான கதையோட்டமும் கதைக்குள்ளால் வாசகனை சுழியோட வைக்கிறது. தீரனின் தீரதம் வாசியுங்கள் - மறிக்கடா பத்தி எனக்கொன்றும் தெரியாது..
௦௦௦௦
Write a comme