Friday, October 27, 2023

மறிக்கிடா- தீரதம்-சிறுகதை-3

  

மறிக்கிடா.

 

      ~அகிலேஸ்வரி என்கிற அகிலமக்கா பத்து ஆடுகள் வைத்திருந்தாள். எல்லாம் பெட்டைகள்தாம்.. பெட்டைகளுக்கு மறிக்காக என்று வைத்திருந்த பெரிய கிடாவை  சென்ற பெருநாளைக்கு முஸ்லிம் சந்தையில் இருபத்தெட்டாயிரம் கொள்ளை விலைக்கு விற்றுவிட்டிருந்தாள். ரொக்கப்பணத்துக்கும் கல்முனை சொர்ணம் நகைமாளிகையில்  கைச்செயின் வாங்கி அணிந்திருந்தாள்.

 

      அகிலமக்காவுக்கு வயது 45தான். இன்னும் நரைக்கவுமில்லை.  சதா வேலைவாடை செய்ததில் கட்டுமஸ்தான உடம்பும்..நல்ல முகவெட்டும்... சதா வெற்றிலை போட்டுச் செக்கச்சிவந்திருந்த உதடுகளும்... முந்தானையை மீறத் துடிக்கும் மார்புகளும்..... கணவர் சின்னப்புவுக்கு  தனது 68 வயதில் அவளுக்கு தன்னால் டீடு கொடுக்க முடியாதென்பதை  தாம்பத்திய இரவுகளில் சந்தேதகமறத் தெரிந்து கொண்டிருந்தார். பிள்ளை குட்டிகளும் இல்லை.  என்றாலும்  பெயருக்கு கணவர் என்ற லேபலோடு ஏதோ அவள் சொல்வதையெல்லாம்  செய்து கொண்டு காலம் தள்ளிக் கொண்டிருந்தார்.

 

      அகிலமக்காவின் ஆட்டுப்பட்டியில் இப்போது எல்லாமே பெட்டைகளாகவே இருந்தன. மறிக்கு ஒரு கிடாய் இல்லை. அப்படியானால் பட்டி பெருகுவது எப்படி... மறிப்படுவதற்கு பெட்டைகள் தயாராக இருந்தன.. அவற்றின் யோனி நீர் வழிந்து தொழுவம் முழுவதும் மணத்தது..  இந்த நேரத்தில் சரியான ஒரு கிடாய் அகப்பட்டால்  தப்பாமல் இரண்டிரண்டு குட்டிகளாவது கிடைக்கும்.. அகிலமக்கா சி;ன்னப்புவிடம் சொன்னாள்.

    

      ~~ஞ்சப்பாருங்கோ... பெட்டைகளுக்கு மறிக்கு விட  நல்ல கிடாய் ஒண்டைப் பாருங்களன்.. சொல்லி எத்தினை நாளாயிற்று... ஒரு வேலைக்கும் உதவாது நீங்க...||  என்று குத்தி விட்டாள்.

~~பாத்துட்டுதானே இரிக்கிறன்..  ந்தப்பக்கத்து மாப்புள்ளக் கிடாவெல்லாம் சரிப்பட்டு வரா...  சீலைப்பள்ளியில மய்யதீன்காக்காட பட்டியில நெல்ல தெரமான ஒரு கிடா இருக்கிதாம்.. எப்படியும் இண்டைக்கிப் போய்ப் பார்த்துட்டு வாரன் புள்ளேய்...|| என்று சொன்ன கையோடு புறப்பட்டும் விட்டார்.

 

      எட்டுமைல்தூரம் நடந்து போய் மய்தீன் காக்காவின் ஆட்டுப்பட்டியை அடைந்தார். மய்யதீன் காக்காவின் பட்டியைப் பார்த்த போது உண்மையில் அதிசயப்பட்டார். இருபது பெட்டை ஆடுகளும்.. ஒரு மாப்பிள்ளைக் கிடாவும் நின்றன.. மய்யதின் காக்காவின்; மாப்பிள்ளைக் கிடாவைக் கண்டு அசந்து போனார்.. ஏறக்குறைய ஒரு மாட்டின் உயரத்தில் தாடியும்.. நீண்டு வளைந்திருந்த கொம்புகளும்.... கழுத்தில் கிண்கிணிமணிகளுடனும் மிக்க கம்பீரத்துடன் நின்று கொண்டு திமிறிக் கொண்டிருந்தது.. அதன் சத்தமே கரகரப்பாக ஆண்கள் கத்துவதைப் போலிருந்தது. அதன் வீச்சம்  மூக்கைத் துளைத்தது.. தன்னை நெருங்கும் ஆட்களை முட்டித் தள்ள மூர்க்கம் கொண்டு பாய்ந்தது..

 

      மய்யதீன் காக்காவும் அந்த ஆட்டுக்கிடாவைப் போலவே  ஆஜானுபாகுவாக கம்பீரமாக காட்சியளித்தான்..  சின்னப்புவைக் கண்டதும் வரவேற்று ஆட்டுப்பால் கொடுத்து உபசரித்த பின் விசயத்தைக் கேட்டு விட்டு நக்கலாய்ச் சிரித்தான்..

 

      ~~சின்னப்பு அண்ணேய்... நம்மட கிடாவப் பாத்தாய்தானே... சின்னப்பெட்டையெல்லாம் இதுக்குக் கிட்ட நிக்க ஏலுமா..  ஒரு தரத்தில நாலைஞ்சி பெட்ட வேணும் இதுக்கு... || என்று தன் மாப்பிள்ளைக்கிடாவின்; பாலியல் சக்திப் புராணம் பாடிவிட்டு ~~நான் எல்லாருக்கும் மறிக்கு விடுறல்ல சின்னப்பண்ணே.. நீ தூரத்துல யிரிந்து வந்திருக்காய் ண்டபடியால பரவாயில்ல உனக்கு  தாரன்.. ஆனா ஒருதரம் மறிக்கு விட மூவாயிரம் ரூவாத் தெரணும்..||  என்று தயைதாட்சண்யமின்றிக் கேட்டான். அவனே கிடாவைக் கூட்டி வந்து  மறிக்கு விட்டுக்கூட்டிப் போக போக்குவரத்துச் செலவு.. தனக்கு சாப்பாட்டுச் செலவு.. கிடாய்க்கு தாராளமாக கிளிசறிப் புண்ணாக்கு... மறியேற முன் கிடாய்க்குச் சாராயம்.. என்று சில உபவிதிகளும் சொன்னான்.   மய்யதீன் காக்காவின் நிபந்தனைகளும் விலையும் மிகமிக அதிகமாகவே இருந்ததாலும் அகிலமக்காவிடம் தன் கெட்டிக்காரத்தனத்தை நிருபிக்க வேண்டி அவன் சொன்னவற்றுக்கெல்லாம் சம்மதித்துத் திரும்பினார் சின்னப்பு.

 

      சொன்னபடியே அடுத்தநாள் அதிகாலையிலேயே  மய்யதீன் காக்கா தன் மாப்பிள்ளைக் கிடாவுடன் அகிலமக்காவின் வீட்டுக்கு வந்துவிட்டான். சின்னப்பு எங்கோ போய்விட்டிருந்தார். அகிலமக்காதான் வந்து வரவேற்றாள். அகிலமக்காவின் கட்டுமஸ்தான அழகில் ஒரு கணம் ஒருகணம் மெய்மறந்தான் மய்யதீன் காக்கா... .இந்த நோஞ்சான் சின்னப்புவுக்கு இப்படி ஒரு பெண்சாதியா... என்று மறுகினான். சட்டெனத் தன்னைச் சுதாகரித்துக் கொண்ட மய்யதீன் காக்கா

 

~~சின்னப்பு அண்ணர் வரச்சொல்லியிரிந்தாருக்கா... || என்றான்.

 

~~ஓம்..ஓம்..  நீதானா மறிக்கு விட வந்த.. கிடா நல்லாருக்குது காக்கா...! இது உன்னதா..? | என்ற அகிலமக்கா கிடாயின் அருகே வந்தாள். மய்யதீன் காக்காவின் .இடுப்பளவு உயரத்தில் கம்பீரமாக நின்றிருந்த கிடாய் அகிலமக்காவைக் கண்டதுமே  உற்சாகமாகிப் பாய்ந்தது. அதன் உயரத்திலும் பிடரிமயிர்ச்சிலிர்ப்பிலும்  கனபரிமானத்துடன் உயர்ந்து நீண்டு சுருண்டிருந்த கொம்புகளிலும் பெரிய வட்டச் செவ்விழிகளில் தெரிந்த ஆவேசத்திலும்  அகிலமக்கா மயங்கித்தான் போனாள்.

 

~~எங்கக்கா சின்னப்பண்ணரைக் காணல்லை..?|| என்று கேட்ட மய்யதீன்காக்கா அகிலமக்காவின் கட்டுடலில் வைத்த பார்வையை மீட்டிக் கொள்ள முடியாமல் மறுகினான்...

 

~~கொத்து பறிக்க கரப்பத்துக்குப் போயிட்டாரு.. வந்துருவாரு...|| மய்யதீன் காக்கா தன்னை கள்ளத்தனமாகக் குறுகுறுவெனப் பார்ப்பதை உணர்ந்து கொண்ட அகிலமக்கா உள்ளுர நகைத்துக் கொண்டாள். ஏதோ கொஞ்சம் சந்தோஸமாகவும் கர்வமாகவும் இருந்தது..

 

~~இதுர குறியப் பாருக்கா... இத பட்டியடிப்பிட்டிக்கே போய் சின்னக்குட்டியா வாங்கி வந்து வளத்தது.. நெல்ல திறமான சாப்பாடு போட்டு வளத்த கிடா...  ஒருநாளைக்கிச் சாப்பாட்டு;க்கே அய்நூறு போகுதுக்கா..|| என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் மய்யதீன்காக்காவின் பார்வை அகிலமக்காவின் அங்கங்களில் இரகசியமாக மேய்ந்தது.. மறிக்கிடாவின் பார்வை தூரத்திலிருந்த பெட்டைஆடுகளின் தொழுவத்தின் மீதிருந்தது.

 

~~விலைக்கு கேட்டா குடுக்க மாட்டியா..?|| அகிலமக்கா நழுவும் முந்தானையைச் சரிசெய்யாமலே கேட்டாள்.

 

~~ல்லக்கா.. லச்சம் தந்தாலும் சரியான்.. அது நம்முட மாப்பிள்ள... புள்ள மாயிரி வளக்கன். நான்...||

 

      ஆட்டுத் தொழுவத்துள் அடைபட்டுக் கிடந்த பெட்டைகளின் மதனநீர் நாற்றத்தில் கவரப்பட்ட கிடா  மய்யதீன் காக்காவின் பிடியிலிருந்து விடுபட  கால்களை உயர்த்திக் கிளம்பித் திமிறியது. ~ஞ்ங்ங்ஙமேமமய்ங்ங்ங்|| என்று விசித்திரத்தொனியில் கத்தி மய்யதீன் காக்காவின் தோளில் கால்களை உயர்த்தித் துள்ளியது. அவனை நெட்டித்தள்ளியது. அதன் உயர்த்திய  கால்களிடையே  வெளித்தள்ளிய  கிடாயின் ஆண்குறி   செஞ்சிவப்புக்கலரில்  விறைத்துக் கிளம்பி நீண்டிருந்தது. 

 

~~குறியப் பாத்தியாக்கா... ?|| என்று சாதாரணமாகத்தான் கேட்டான் மய்யதீன் காக்கா. ~~ம்ம்..ம்..|| என்ற அகிலமக்கா அதனைப் பார்த்துக் கிறுகிறுத்துப் போனாள்..  ~~ஆ..என்ன நீட்டமும் பெரிசும்...|| என்ற உள்ளார்ந்த அருட்டுணர்வால்; அவளுக்குள் ஏதோ சிலீரிட்டு மனதுக்குள் பாய்ந்தது...

 

~~அக்கா கிடாய்க்கு கொஞ்சம் சாராயம் வேணுமக்கா...||

~~சாராயமா..?||

~~ஓமக்கா... கொஞ்சம் குடிச்சா நெல்ல திறமா மறிப்படுமக்கா..||

 

       அகிலமக்கா வியப்புடன் சின்னப்பு குடிக்க வைத்திருந்த  அரைப்போத்தலைக் கொணர்ந்து கொடுத்தாள். உபசாரங்கள் முடிந்ததும்  இருவருமாக கிடாவை தொழுவத்துக்குள்  கூட்டிப் போனார்கள்.. ஆனால் மதனநீர் வாசத்தால் கம்பேறியிருந்த கிடா  பெட்டைகளைக் கண்டதுமே  மய்யதீன் காக்காவின் பிடியிலிருந்து திமிறிக் கிளம்பி அவனை முட்டிக் கொண்டு பாய்ந்தது

 

      ~ஞ்ங்ங்ஙமேமமய்ங்|| என்று கத்தி ஆவேசப்பட்டது. ~~விடுவிடு..|| என்றாள் அகிலமக்கா.. மய்யதீன் காக்கா பிடியை விட்டதும்... எகிறிப் பாய்ந்த கிடா  ஒருபெட்டையின்  பின்பக்கத்தை நோக்கி ஒரே பாய்ச்சலில் பாய்ந்தது. பெட்டையின் பின்புறம்  தன்னிரு கால்ககளால் இறுக்கிப் பிடித்துக் கொண்டு மேல் உயர்ந்தது. அதன் செந்நிறக் குறி ஒரே கணத்தில் கம்பீரமாக வெளிப்பட்டுப் பெட்டையின் பின்புறத்தைத் துளைத்துக் கொண்டு மறைந்தது..  மறிக்கிடா மிக ஆவேசத்துடன்  ஆடியது..  அதன் ஆக்ரோசத்தையும் ஆவேசத்தையும் கண்ட அகிலமக்காவின் பார்வை தன்னிச்சையாகவே மய்யதீன் காக்காவின் மயிரடர்ந்திருந்த பரந்த தொடைகளின் மீது பட்டு மீண்டது.....

 

      ~~என்னக்கா எப்பிடி மறியேறுது பாத்தியாக்கா..?| என்ற மய்யதீன்காக்கா ஒடுக்கமான தொழுவத்துக்குள் அகிலமக்காவை  மிகநெருங்கி அவளது வெற்றிலைவாசம் மூக்கருகே மணக்குமளவுக்கு நின்றிருந்தான்..அவனது தார்ப்பாய்ச்சிக் கட்டியிருந்த சாரனுக்கு வெளிப்புறம் தெரிந்த கால்களில் மறிக்கிடாவின் ரோமக்கற்றைகள் போலவே அடர்ந்திருந்தது..

 

~~ம்...|| என்ற அகிலமக்கா தன்வசத்திலில்லை. மறியாடும் கிடாவின் கம்பீரத்தில் இலயித்திருந்தாள்...

மறிக்கிடா ஒரு பெட்டையை முடித்துவிட்டு அடுத்ததை நோக்கித் தாவ... மய்யதீன் காக்கா கிடாவை இழுத்துப் பிடித்துக் கொண்டு சிரித்தான்..

 

~~~ஒரு பெட்டைக்கு மூவாயிரமக்கா.. மத்ததுக்கு ஏறணுமெண்டால் வேறயா ரெண்டாயிரம் தெரணுமக்கா...||

 

~~காசிலேயே குறியா இரி.... பாத்துத் தாரண்.. விடு.. விடு...|| என்று அவசரப்படுத்தி தற்செயலாகப்படுவது போல கயிற்றைப் பிடித்திருந்த அவனது கையைப் பிடித்து உலுக்கி விட்டாள் அகிலமக்கா...

 

~~விட்டா ஆக்கள்ளயும் ஏறுமக்கா இது.. சரியான மறி...! ஆனா  பொருத்தமான பெட்டை ல்லக்கா உங்கிட்ட..|| என்ற மய்யதீன்காக்கா ~~ஒரு மணித்தியாலத்துல மூணு தெரம் ஏறுமக்கா.. பட்டியடியில ஒருநாள் நாலு பெட்டையளுக்கு ஏறிச்சக்கா...|| என்று பெருமை கூறியவாறே ஒரு விசமப் புன்னகையுடன் அகிலமக்காவை கடைக்கண்ணால் பார்த்தான்.

 

      அகிலமக்காவோ- மய்யதீன்காக்கா தன்னை உரசும் அளவுக்கு நெருங்கி நின்றிருந்ததை ஆட்சேபிக்கவுமில்லை..  தள்ளிப்போகவுமில்லை.. அவனிடமிருந்து வீசிய ஒருவகையான  வியர்வை நெடி அவளைத் தள்ளிப் போகச் செய்யவில்லை. அவனது ஆட்டுவாசத்தை உள்ளுர ரசித்துச் சுவாசித்தபடி... வெளிப்படைக்கு மூக்கைப் பொத்திக் கொண்டிருந்தாள்..

 

      மறிக்கிடா ஆவேசம் அடங்காமல் மறுபடி உயரக்கிளம்பியது... ~~எங்கக்கா அவரு.. சின்னப்பு...அண்ணர்...?| என்று கேட்டு தன் வலிமையான கரங்களால் மறிக்கிடாவின் கயிற்றைப் பற்றித் திடீரென இழுத்தான் மய்யதீன் காக்கா

 

~~கரப்பத்துக்குப் போனவரு..|| .என்ற அகிலமக்கா தன்னையறியாமலே ~~அவரு  வெர நெல்லாச்  சுணங்கும்....|| என்றும் முணுமுணுத்துவிட்டு  பின்-  ~~காக்கா கன பெட்டையளுக்கு விட்டிருப்பாய் போல....|| என்றாள் எதையோ நினைத்துக்கொண்டு.

 

~~என்னக்கா... கன பெட்டையளுக்கா...?...ஙிக்கிக்கஹ{ய்... அப்பிடி ல்லக்கா.. கண்டகண்ட எல்லாப் பெட்டையளுக்கும் விடுறயில்லக்கா... பரவாயில்ல...|| என்றான் பூடகமாக..

 

      திடீரென மறிக்கிடா மய்யதீன் காக்காவின் பிடியிலிருந்து திமிறி விடுபட்டு அகிலமக்காவை நோக்கிப் பாய... அகிலமக்கா பயந்து கத்தியபடி ஒரு தற்செயல் கணத்தில் மய்யதீன் காக்காவின் பின்பக்கமாகப் பாய்ந்து அவனது முதுகைப் பிடித்துக் கொண்டாள். மய்யதீன் காக்கா சிரித்தபடியே ~~பயந்துட்டியாக்கா..?|| என்று கேட்டு கிடாயை இறுகப் பிடித்து இழுத்து அதன் விறைத்த குறியில் கொஞ்சம் சாராயத்தை ஊற்றினான். பின் அகிலமக்காவிடம் ~~இதக் கொஞ்சம் பிடித்துப் பாரனக்கா... இன்னம் வெறைப்பு  அடங்கல்ல...|| என்றான் குறும்பாக...

 

      ~~எ...என.ன...ந..நா..னா...புடிக்கவா....?|| பயத்துடன்  அகிலமக்கா தயங்கியபடியே கையை நீட்ட...  ~~அப்பிடி ல்லக்கா ந்தா இப்பிடிப் பிடிச்சுப் பாருக்கா..|| என்ற மய்தீன்காக்கா திடீரென வெகு  சுவாதீனமாக அகிலமக்காவின் கையோடு தன் கையை வைத்துப் பிடித்துக் கொண்டு  . கிடாயின் விறைத்த குறியைப் பிடிக்கச் செய்தான்.. ~~ஆ..என்ன நீட்டமும் பெரிசும்...||

      கிடாயின் குறியில் கைபட்டதுமே அகிலமக்காவுக்குள் ஒரு பூகம்பம் வெடித்து மனதெல்லாம் சிலீரிட்டுப் பரவியது..    அகிலமக்காவின் கைபட்ட கூச்சத்தில் கிடாய் திமிறி  ஆவேசத்துடன் அகிலமக்காவை நோக்கி அசுர வேகத்துடன் தாவ- ~~.க.கடவு..ளே...ய்...|| என்று கத்திக்கொண்டே நிலை தடுமாறித் தரையில்  விழுந்தாள்  அகிலமக்கா. மய்யதீன் காக்காவும் தடுமாறி சமநிலை குலைந்து அகிலமக்காவின் மீது இடறினான். மறிக்கிடா விடுபட்டு அடுத்த பெட்டையை நோக்கித் தாவியது.

 

      ~~ச்சீ.. நாசமத்துப் போன மறிக்கிடாதான் இது.|| என்று கிடாயைத் திட்டியபடியே எழுந்த மய்யதீன்காக்கா ~~உளுந்துட்டியாக்கா..?|| என்று கேட்டு அகிலமக்கா எழத் தன் கைகளை நீட்டினான்.. அவனது கைகளைப் பற்றிப்பிடித்த அகிலமக்கா எழும்பாமல் கீழே கிடந்தவாறே ~~அவரு... வரச் சுண....ங்கு.......|| என்று ஏதோ முணுமுணுத்தாள்.  மய்யதீன்காக்கா ஒருநமுட்டுச் சிரிப்புடன் கீழே கிடந்த அகிலமக்காவையே உற்றுப்பார்த்தான்...

 

      சற்றுநேரத்தின் பின் தொழுவத்துக்குள் மய்யதீன் காக்காவின் மறிக்கிடா வேகத்துடன்  இயங்கத் தொடங்கியது. ~~ஆ..என்ன நீட்டமும் பெரிசும்...|| என்ற உள்ளுணர்ச்சியுடன் அகிலமக்கா   அதன் வேகத்தில் இலயித்துவிட்டாள்.. சின்னப்பர் வரச் சுணங்கும்தானே...? ..0 (2012)

 

 

888888888888888888888888888

கள்ளக்கோழி- தீரதம்- சிறுகதை-2

  

கள்ளக்கோழி.

   ~மண்டயப் பொளந்துருவன்...ல்லாட்டி கைச்சந்துல ஒண்ட எறக்கிற...எந்த அறாங்குட்டி யெண்டு பாத்துருவம்..|| ண்டு நம்முட ஆத்தப்பாக் கௌவன் கய்யிலிரிந்த அருவாக்கத்திய இறுக்கயாப் புடிச்சிட்டு நட்ட ராவையில அவண்ட ஊட்டுக்குப் பொறகால இரிக்கிற பெரப்பம் பத்தைக்க ஒளிச்சிட்டுக் குந்திரிந்தான்.

       ஒளிச்சிட்டுக் குந்திரிந்தான். ஒரு மனிசன வெட்டி அரியிற அளவுக்கு ந்த எளுவத்தாறு வயசில ஆத்தப்பாக் கௌவனுக்கு  வெஞ்சினம் வந்தததென்ன..?அப்பிடி ஆர வெட்டி அரியப் போறான்..?: ஆரந்த அறாங்குட்டி...? வேறாரு..? .பேத்திற்ற ராவையில இருட்டுக்க வந்து போற...ஒரு அறாமி..!..ஆரவன்...? ஆரா இரிக்கட்டும்..! .கவையில்ல... ண்டைக்கி வெட்டிப்போட்டுத்தான் மறுவேல... ரெண்டு பேரையும் வெட்டிப்போட்டுட்டு  தூக்குல தொங்கிற யெண்டாலும் செரிதாங்....ஆத்தப்பாக் கௌவன் உரத்த ரோசக்காரன்....

 

      கௌவன் உரத்த ரோசக்காரன்.... ஆத்தப்பாக் கௌவண்ட பேத்தி நெல்ல வடிவான கொம்புள.. நெல்ல செறப்பாத்தான் கலியானம் செஞ்சிவெச்ச..  நகநட்டு சீருசெனத்தி எல்லாம் குடுத்த.. என்ன நடந்த கொதறத்தோ..?. பண்ணினவன் ஒரு பொடவ யாவாரி.. நெல்லாத் தெரிஞ்சவன்தான்.. காசிகப்பும் வெச்சிரிந்தான்.. மட்டக்களப்புல பொட்டணி யாவாரம்... ஆத்தப்பாக் கௌவனுக்கு ம்மாட வழியில கொஞ்சம் ஒறவு... ...அவண்ட சாதிசனம்தான்.. பண்ணி மூணுமாசம்தான் இரிந்தான். அண்டொரு நாள் சும்மா ஏசிப் போட்டுக் கோவிச்சிற்றுப் போய்ட்டான்.  ம்மாட ஊட்ட போனவன் திரும்பி வெரல்ல... சும்மாரிந்த குமரப் பழுதாக்கிப் போட்டுப் போய்ட்டான்.. .. ரெண்டு வரிசமாகுது...

 

 

      ரெண்டு வரிசமாகுது... கோய்ச்சிட்டுப் போனவனக் கூட்டிட்டு வெரப் போன ஆத்தப்பாக் கௌவன அவன் மாப்புள்ளட வாப்பாக்காரன் புடிச்சித் தள்ளி உட்டுட்டான். ~போடாக் கௌட்டு வள்ளா.. ஒண்ட பேத்திர .........க்க எண்ட மகன்ட ....ஒரு நாளும் இனிப் பூர  மாட்டா..போடா போடா....ண்டு வெரசினான. ~~அப்பிடி என்ன குத்தம்டா செஞ்ச எண்ட பேத்தி...என்னடா கொறடா அவளுக்கு..? செல்லுங்களண்டா அறாமியள்..?|| ண்டு ஆத்தப்பாக் கௌவன் ரோட்டுல நிண்டு கொம்பினத்துக்கு...மாப்புள்ளட ம்மாக்காரி முந்தானய சுத்திக்கட்டிட்டு ரோட்டுக்கு ஓடியாந்து..

 

      ரோட்டுக்கு ஓடியாந்து.. .~~டெ ஆத்தப்பாக் கௌவா...ஒ;ண்ட பேத்தியப் பண்ணின நாள்ள இரிந்து என்ட மகனுக்கு  யாவாரத்தல நட்டம்டா நக்கு வள்ளா.. குறி கேட்டுப் பாத்துட்டம்.. அவள  வெலக்கினாத்தான் முசிவத்தும் வெலகுமாம்.. இனி இஞ்ச வெராதடா கௌவா.. காதிக் கோட்டுலதான் வளக்கு வெளக்கம்  எல்லாம்.. இனி ஞ்சாலப் பக்கம் வந்தியெண்டா....த்த்த்த்த...|| ண்டு டானிஸ் ஆடிட்டாள்...

    

      டானிஸ் ஆடிட்டாள்... கோவத்துல ஆத்தப்பாக் கௌவன் சம்பந்திர சொத்தையில  வெத்திலாக்கக் காறித் துப்பிட்டு ~~அடி வெங்கிளாத்துர வேலக்காரி... ஒண்ட வங்கிசத்த நெக்கித்  தெரியாதா.. ஒருவாக்காசிக்கி மாட்டுப்பீயத் திண்ட கூட்டம்... இனி ஒன்ட மகன் அறாமாக்கும் வேணா...நெல்ல ஒரிச்சினல் மாப்ள்ள நான் எடுப்பன்டி...|| ண்டு சவால் உட்டுட்டு வெட்டக்கிறங்கி வந்துட்டான்.. அத்தோட எல்லாம் அறுந்து போச்சி.....

 

      எல்லாம் அறுந்து போச்சி.... மாப்ள்ள பொண்ணப் பிரிக்கிறத்துக்கு காதிக் கோட்டுல வழக்கு நடக்குது...வேள் பேத்தி புரியனோட ஒளுங்கா வாள ல்ல  அவளும் நெல்ல பார்வையான  கொம்புள.. ரோட்டுல திரியிற வளிசலுகள் பேத்தில கண்ணக் கிண்ணப் போட்ருவாணுகள்  ண்டத்தால ஆத்தப்பாக் கௌவன் கண்ணுல எண்ண ஊத்திக் கங்காணிப்பாயிரிந்தான்..  மஸிமாவ வெட்டக் கிறங்க உட மாட்டான்.. கேட்டதெல்லாம் காலடியில கெடைக்கிற மாயிரி கட்டுக் காவலா  வெச்சிருந்தான்.. பேத்திக்கி அவிசிரமா மாப்பிள்ள பாத்தான்....

 

      பாத்தான்தான்...ஆனா என்ன வெச்சிரிந்து என்ன..? ப்ப கொஞ்ச நாளா...பேத்திர நடத்தயள்ள கொஞ்சம் சமிசயம் தட்டுது. .கொஞ்ச நாளா ராவையில பவுடர் பூசுறாள்.. தனிய நிண்டுட்டுச் சிரிக்காள்...  அத்துரு மணக்குது... தலையில கிளிப்புகளும்.. களுத்துல மணி நெக்கிளசும் ஊசாடுது.. கொசாலா இரிக்காள்... சொணங்கித்தான் எளும்புறாள்.. செல நேரம் மாலமசண்டைக்க ஒரு பத்தப்பதினஞ்சி நிமிசம் ஆளக் காணல்ல... . எங்கடி போன ண்டு கேட்டா  ~~என்னது நா ஒண்டுக்கு இரண்டுக்குப் போறல்லியா.. ஊட்டுக்குள்ளயா பீமூத்திரம் உர்ர..?||  ண்டு கேட்டு கடிச்சி ஏறப்பாக்காள்.. ~~கௌட்டு வயதுல சோத்தத் திண்டுட்டுப் படுக்காம கௌவண்ட கேள்வியப் பாரு... || ண்டு செல சமயம் புறுபுறுக்காள்..

 

      செல சமயம் பரபரக்காள்... வேள்ள ந்தப் புதுக் குசாலுக்கு என்னடா காரணம் ண்டு ஆத்தப்பாக் கௌவன்  உசுப்பாம ஒசாரா கங்காணிக்கத்  தொடங்கினான்.  ரெண்டொரு நாள் மாட்டுக்குடில்ப் பக்கம் ஆரோ பொளங்கின மாயிரி சமுசயம் தட்டிட்டு... ன்னமின்னம் ஊசாட்டம் பாத்ததுல பேத்திக்கு ஆரோ ஒர்த்தனோட சாடமாடயாத் கள்ளத்தொடர்வு இரிக்கி ண்டு வெளங்கிப் போச்சி...  ம்.. நமக்குத் தெரியாம வேளவு தகிரியமா ஞ்சயே வந்து சந்திக்கிறவன்...ஆரந்த அறாமி..?  

 

      ஆரந்த அறாமி.. கள்ளக்கோழி புடிக்க வாறவன்...? ஒரு நா பகல் அப்பான் சாப்பிட்டுட்டு கொஞ்சம் கெளிவம் ண்டு ஆத்தப்பாக் கௌவன் கண்ணமூடிட்டு உள்ளறைக்க கட்டில்ல படுக்கிற மாய்ரி சாஞ்சிற்று இரிந்தான்.. வேள் பேத்தி சாப்புக்க படுத்தவள் எளும்பி பொறக்கடக் கதவ உசுப்பாம தொறந்துட்டு.. வெட்டயால போறாள்.... ஆத்தப்பாக் கௌவனும் தவண்டுட்டு வெட்டையால வந்து ஊட்டுக்குப் பொறகால இரிக்கிற  பெரப்பம் பத்தைக்க ஒழிச்சிட்டு இரிந்து பாத்தான்.. நெனச்சது செர்தாங்...! ஒரு சீட்டிச் சத்தம் கேக்குது.... ஒடன மாட்டுக்குடிலுக்க வேள் பேத்தி போறதும்... ஆரோடயோ குசுகுசுக்கிறதும்.....ம்.....   .சிக்கிலட்டுப் பொகையும் மணக்குது..?  ஆத்தப்பாக் கௌவன் வெறச்சிப் போய்ட்டான்.. ஆரந்த அறாங்குட்டி...? என்ன கட்டுக்காவலா வெச்சிருந்தும் ந்தப் பொட்ட நாய் போன போக்கென்ன..?

 

      போன போக்கென்ன..? பேத்தி ஒரு அஞ்சி நிமிசத்தில திரும்பிட்டாள்.. கய்யில ஒரு பெரிய பார்சல்... சிரிச்சிட்டு  திரும்பிப் பாத்து கைகாட்றாள்...என்னயோ கதைக்காள்... டக்கெண்டு கௌவன் திரிம்பி வந்து படுத்துட்டான்... நெஞ்சப் பொத்திற்று வெஞ்சினத்த விளுங்கிற்றான்... ம்மாட மண்ட.... இத ரெண்டுல ஒண்டு பாக்காம உட்றல்ல... ண்டு அந்நரம் முடிவு கட்டினான். ஆரு நாயா இரிந்தாலும் நக்க வார நாய்க்கி அருவாக்கத்தியால மண்டையில கொத்துற ண்டு தீமானங் கட்டிட்டான்... 

 

      அந்நரமே முடிவு கட்டிட்டான்..  இதப்பத்தி ஆத்தப்பாக் கௌவன் பேத்திட்ட ஒரு கதயும் கேக்கல்ல..  தெரிஞ்ச மாய்ரி காட்டிக்கயும் ல்ல.. ஆனா செரியான சந்தர்ப்பத்த காத்துட்டு அதுலயே ஒரு கண்ணாயிரிந்தான்..

 

      அதுலயே கண்ணா இரிந்தவன்...ஒரு திட்டம் போட்டுட்டான்.. இண்டு ராவைக்கி தோட்டத்துல பண்டிக் காவலுக்குப் போறண் ண்டு செல்லிட்டு  சாப்பாடும் கட்டி எடுத்துட்டு.. போறாப்பல போக்குக் காட்டிட்டுப் போய்.....நெல்ல மசமசண்ட இருட்டுக்க  ஆத்தப்பாக் கௌவன்  கிறுகி வந்து ஆருக்கும் தெரியாம ஊட்டுக்குப் பொறகால இரிக்கிற பெரப்பம் பத்தைக்க குந்திரிந்தான். கய்யில மூணு வெத்தி டோர்ச்சி லைட்டும் நெல்ல கூரான அருவாக்கத்தியும் வெச்சிட்டுப் பதுங்கிற்று சத்தம்கித்தம் போடாம குந்திரிக்கான்......

 

      சத்தம்கித்தம் போடாம குந்திரிக்கான்......ண்டைக்கி நெல்ல அம்மாச இருட்டு... ஒத்தச் சாமக் கோளி கூவக்க.. வெசயம் தொடங்கிட்டு... ஆத்தப்பாக் கௌவன் நெனச்ச மாய்pரியே நடந்திச்சு...  திடிருண்டு  மாட்டுக்காலைக்கிப் பொறகால  இரிந்து ஒரு சின்ன விசில்ச்சத்தம் கேட்டிச்சு... ஒடனே  பேத்தி பொளக்கடக் கதவத் தொறந்துட்டு வெட்டால வாறாள்.. சாட்டுக்கு கெணத்துல தண்ணி அள்ளி காலக்களுவுறாள்.. பொறகு.. ன்னொரு கனப்புச் சத்தம் கேட்டதும்... பேத்தி வந்து மாட்டுக்காலைக்குள்ள பூந்துட்டாள்... ஆத்தப்பாக் கௌவனுக்கு எரத்தம் கொதிக்குது.... பல்லக் கடிச்சிட்டு அருவாக்கத்திய இறுக்கயாப் புடிச்சிட்டு சரசரண்டு பெரப்பம் பத்தைக்க தவண்டு தவண்டு மாட்டுக்காலப்பக்கம் வந்துட்டான்.

 

      மாட்டுக்காலப்பக்கம் வந்துட்டான். ஆனா கௌவன் வந்த சத்தம் கேட்டுட்டுப்  போல.... வேள் பேத்தி குசுகுசுப்பாக ~~ஆரே வாறாக.. ஆரே வாறாக..|| ண்டு செல்லிட்டு டக்குண்டு எழும்பி பொடவயத் தூக்கிட்டு ஒட-கூட இரிந்த ஆரோ ஒரு கள்ளன்  உடுத்திரிந்த சாரனையும் அவுட்டுட்டு  மாட்டுக்காலைக்கி வெளியால பாஞ்சான்... ஆனா..   ஆத்தப்பாக் கௌவனும் உடல்ல.. டக்கெண்டு பாஞ்சி அவண்ட காலக் கட்டிப்; புடிச்சிட்டான்..  ரெண்டு பேரும் தட்டுமுட்டுப் பட்டு மாட்டுக்காலைக்க உளுந்து கட்டிப்புடிச்சிட்டுப்; பெரள.... பேத்தி பயத்தில ஊட்டுக்க ஓடிட்டாள்.. ஆத்தப்பாக் கௌவன் தன்னோட மல்லுக்கட்டின ஆம்பிளய ஒரே புடியா அமுக்கிட்டான்...  ஆனா அவன் எளந்தாரிப் பொடியன்..

 

      எளந்தாரிப் பொடியன். ஆத்தப்பாக் கெனவன்ட கய்யக் கடிச்சிற்றான்..புடிய ஒதறி உடுபட்டுட்டு... டக்கெண்டு பசுமாட்ர கவுட்டுக்குள்ளால ப10ந்துட்டு மத்தப்பக்கமா பாஞ்சிட்டான்.. ஆனா ஆத்தப்பாக் கௌவன் சட்டுண டோச்சி லைற்ற அவண்ட சொத்தையில வெளிச்சம் அடிச்சிற்று...அருவாள ஓங்க......

 

      அருவாள ஓங்க...... டோர்ச்சி லைற்று வெளிச்சத்துல அவண்ட சொத்தையப் பாத்த  ஆத்தப்பாக் கௌவன் வெறைச்சிப் போய்ட்டான்... ஒடன அருவாக்கத்திய கீள போட்டுட்டான். வெக்கத்துல மெலச்சிப் போய் அப்பிடியே செல மாய்ரி நிண்டுட்டான். அப்பிடியே குந்திட்டான்.. வெறப்படி இரிக்கிம்..? வந்துட்டுப் போற அந்தக் கள்ள அறாங்குட்டி வேள் பேத்திர உட்டுட்டுப் போன புரிசன்காரன்தான் ண்டு தெரிஞ்ச பொறகு........................?  (2011)

 

8888888888888888888888888888

 

 

ஒய்த்தாமாமா-தீரதம்- சிறுகதை -1

  ஒய்த்தா மாமா.

 

       எனக்குப் பத்து வயதிருக்கும் போது அது நடந்தது..... ஒய்த்தாமாமாவைக் கண்டாலே எனக்குப் பயம். அவர் சிறுவர்களின் குஞ்சாமணியை தயைதாட்சண்யமின்றி அறுத்தெறிகிறவர் என்று கேள்விப்பட்டதிலிருந்து இந்தப்பயம். இது நிச்சயமாக நமக்கும் எப்போதோ நடக்கத்தான் போகிறதென்று உணர்ந்ததிலிருந்து அவரைக் கண்டாலே குலை நடுக்கம்தான்.. அப்படி அவர் குஞ்சாமணியை அறுத்தெறிகிறவர் என்றால் நம்மட வாப்பா பெரியப்பா பெரிய ஆம்பிள்ளைகள் எல்லாம் எப்படி ஒண்டுக்குப் போகிறார்கள் என்று கேள்வி மண்டையைக் குடையும்..  பள்ளிக்கூடம் செல்லும் வழியில் ஒய்த்தாமாமா தென்பட்டால் பதறிப் போய் வேறு வழியாக ஓட்டம் பிடிப்பேன்..  வீட்டருகே விளையாடிக் கொண்டிருக்கும் போது கண்டாலோ துடித்துப் பதைத்து உள்ளறைக்கு ஓடி விடுவேன்..

 

      எங்கள் வீட்டில் வேலையாளாக இரிந்த கலந்தன்காக்காதான் ஒய்த்தா மாமாவைப் பற்றி கதைகதையாகச் சொல்வான்.. சில பிள்ளைகளின் குஞ்சாமணியை நுனியில் கொஞ்சமாக அறுப்பார் என்றும்.. அறுத்த குஞ்சு பல்லியின் வால் துடிக்கிறாப் போல்  துடிக்குமென்றும்..அதுல சைத்தான் வந்து நிற்குமென்றும.. சில துடுக்குப் பிள்ளைகளின் குஞ்சாமணியை குலையோடு அறுத்து அதனைக் கடலில் கொண்டு போய் வீசிவிடுவார் என்றும்.. அபபடிப்பட்ட பிள்ளைகள்  இனிச் சூப்பேயவும் முடியாதென்றும் அவன் சொன்ன கதைகள் பல... அதிலிருந்து நானும் எனது துடுக்குத்தனத்தையெல்லாம் அடக்கி கப்சிப்பென்றிருப்பேன்...

 

      ஆயினும் ஒருநாள் மூன்றாம்தவணைப் பரீட்சை சித்தியடைந்து மிகச் சந்தோசமாக ரிப்போர்ட்டை வாப்பாவிடம் காட்டியபோதுää அவர் மகிழ்ந்து போய் ~~நாலாம் வகுப்புப் பாசாய்ட்டான் மகன்... இனி நீ அஞ்சாம் வகுப்பா..? ...பெரிய ஆள்... உனக்கு வார வெள்ளிக்கிளம சுன்னத்து வெய்க்கப் போறம்டா மகனே....|| என்று என் சம்மதமில்லாமலேயே திடீரென்று அறிவித்தார். கூட நின்றிருந்த கலந்தன்காக்கா வாப்பாவுக்குத் தெரியாமல் என்னிடம் தன் விரலைக் காட்டி கத்தியால் கரகரவென அறுத்தெறிவது போல் பாவனை காட்டினான்...  நான் பயத்தில் ~~எண்டம்மா...எண்டம்மா...|| என்ற கத்திக் கொண்டே உம்மாவிடம் ஓடி அவளைக் கட்டிப்பிடித்துக் கொண்டேன்... உம்மா சிரித்து... ~~பயப்புடாதேடா தம்பி...அது எல்லாருக்கும் செய்றதுதான்.. அபபிடியெல்லாம் நோகாது...சும்மா கடியன் கடிச்சாப்பல கொஞ்ச நேரம் கடுக்கும்...மறுகாச் செரி...|| என்று சொல்லிச் சிரித்தாள்...

 

      எனக்கு ஒரே குழப்பமாகிப் போய்விட்டது.. என் அங்க இழப்பில் அவர்களுக்கென்ன சந்தோஷம் என்று புரியவில்லை.  முதல் ஆளாக வகுப்பேறிய சந்தோஷமும் போய்விட்டது.. எல்லோர் மீதும் கோபித்துக் கொண்டு படுத்துவிட்டேன்..  மாலையில் உம்மா என்னை எழுப்பி  தேறுதல் சொல்லி சாப்பிட வைத்தாள்.. வாப்பா வந்து..~~என்னடா தம்பி பயந்துட்டியா.. பயப்புடாதே.. எல்லாருக்கும் வெய்க்கிறதுதானே.. எனக்கிம் உண்ர வயதில வெச்சதான்.. அந்த நேரம் கய்ட்டம்...ப்ப எல்லாம் லேசி..! ஒண்டுக்கும் .பயப்புடாத...|| என்றார்..

 

      நான் பயத்தடன் ~~ எனக்கி முன்ன பொறந்த லாத்தாவுக்கு வெய்க்காம எனக்கேன் வாப்பா வெய்க்கிறீங்க.. மொதல்ல அவளுக்கு வெய்ங்க...|| என்றேன்.. அதைக் கேட்டு எல்லோரும் கலகலகவென்று சிரித்தார்கள்.. கலந்தன்காக்கா எட்டிப் பார்த்து...~~உனக்கிட்டதானே குஞ்சாமணி இருக்கி...லாத்தாக்கிட்ட அது ல்லியே....|| என்று சிரித்து...மறுபடி விரலை வெட்டிக் காட்டினான்... எனது இந்தக் கேள்வி அல்லசல் முழுவதும் பெண்கள் மத்தியில் பரவி... போறவாற பெண்கள் சிறுமிகள் எல்லோரும் என்னைப் பார்த்துச் சிரித்தார்கள்... நான் பயத்தடனும் ஏக குழப்பத்தடனும் வீட்டு தொங்கல் அறைக்குள் ஒழித்திருந்தேன்..

 

      அன்று பின்னேரம் சுன்னத்துக் கலியாணம் என்று கார்ட்டெல்லாம் அடித்து வந்தாயிற்று..

~~ எல்லாம்வல்ல இறைவன் திருவருளால்... நிகழும் ஹிஜ்ரி 1412 ஸவ்வால் மாதம் பிறை 12க்குச் சரியாகிய 1969ம் ஆண்டு பங்குனி மாதம் 23ம் திகதி பி.ப.4.00 மணியளவில் எமது திருநிறைச் செல்வன் அ.ற. முகம்மது றெஸ்வின்  அவர்களுக்கு விருத்தசேதனம் செய்யப் பெரியோர்கள் நிச்சயித்திருப்பதால் அன்று நிகழும் பகற்போசனத்திலும் அன்று மாலை நிகழவுள்ள வைபவத்திலும் தாங்கள் குடும்ப சகிதம் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.. இவ்வண்ணம் மீ.மு. அப்துல றகீம் முதலாளியும் பாரியாரும்.......|| வாசிக்க வாசிக்க ஆனந்தமாயிருந்தாலும் வருவோர் போவோரெல்லாம் மாப்பிள்ள மாப்பிள்ள என்ற கூப்பிட்டுக் கூப்பிட்டு அன்பு காட்டியதாலும்.. எராளமான அன்பளிப்புக்கள் கிடைத்துக் கொண்டிருந்ததாலும்  ஒய்த்தா மாமா மீதான பயம் சற்றுக் குறைந்தது... இருந்தாலும்.....  கலந்தன்காக்கா  எங்கள் வீட்டிலிருந்த ஒரு பெரிய அருவாக்கத்தியை எடுத்து என் கண்ணில்படும்படியாக ஒழித்து வைத்திருந்தான்.. அடிக்கடி அமை எடுத்து தீட்டிக் கொண்டுமிருந்தான்.. அக்கத்தியையம் என்னையும் பார்த்து அறுத்தறுத்துக் காட்டி என் பயத்தை சற்றும் குறையவிடாமல் அதிகரித்துக் கொண்டேயிருந்தான்....

 

      வெள்ளிக்கிழமைக்கு இன்னம் நான்கு நாட்கள்தாம் இருந்தன.. வாப்பா பென்னம்பெரிய ஒரு மாட்டை அறுத்து தானம் கொடுத்தார்.. வீடெல்லாம் திருத்தினார்கள்.. புது மை பூசி கதவெல்லாம் பொலிஸ் மணத்தது.. தென்னங்குருத்தோலைகளால் அலங்காரம் செய்து நிலைப்படிகளில் தொங்கின... வாசலில் பெரிய பந்தல் இட்டு சீலையால் மறைத்து அழகழகாக சோடனைத்தாள்ககளால் அலங்கரித்தார்கள்.. தென்னம்பாளையின் குருத்துகளில் வண்ணவண்ண அலங்காரங்கள்...ஆறு பெரிய டியுப் லைற்றுகள்... பத்துக் குண்டு பல்புகள்  கலர்கலராய் உமிழ்ந்து கண்ணைப் பறித்தன... ஷ்பீக்கர் கொண்டு வரப் போயிருந்தார்கள்.. பொல்லடி அடிக்கவும்..குருடி கவி பாடவும்.  சானாப் புலவன் வாழ்த்துப் பாடவும்.. போட்டோக்கள் பிடிக்கவும்..... ஏற்பாடுகள் நடந்தன..

 

      வாப்பாவின் தங்கச்சிமார்..மாமிமார் பொண்டுகள் கூட்டி வந்தார்கள். என்னை அலங்கரிக்கப்பட்ட கதிரையில் அமர வைத்து...பூக்கள் சொரிந்து...குரவையிட்டு...பகல்வர்த்தி சக்கரம் கொளுத்தி...பால்பழம் தந்து...பரிசுகள்...காசுகள்...துணிமணிகள்....உண்மையில் நான் பெரிய மாப்பிள்ளையேதானா..? வந்தோருக்கு உபசாரங்கள்...அதற்குதவியாக என் உம்மாவின் உறவினப்பட்டாளங்கள்...எப்போது பார்த்தாலும் கேக்..வாழைப்பழம்...துதல்..மஸ்கற்...கோப்பி..டீ..என்று பான வகைகள்...பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தார்கள்....வீடெல்லாம் கலகலப்புக்குப் பஞ்சமில்லை...

 

      வெள்ளிக்கிழமை விடிந்தது.. கண்விழித்ததுமே...வீடெல்லாம் பரபரப்பாக இயங்கியது... ஓ... இண்றைக்கு அல்லவா சுன்னத்து....? என்ற நினைப்பு வந்ததுமே பயந்து போய் சட்டென்று எழுந்து விட்டேன்... உம்மா வந்து என்னை அணைத்துக் கொண்டாள்... ~~ண்டைக்கித்தான் என்ட பள்ள பெரிய எளந்தாரியா ஆகப் போறான்..டோ..ய்..|| என்ற சிரித்தாள்.. மாப் பிட்டும் காடைக்குருவிக் கறியும் தந்து சாப்பிடச் செய்தாள்... என்னைக் கண்டதும் கலந்தன் காக்கா சிரித்து... ~~ஙா...மாப்பிள்ள எழும்பிட்டியா... ண்டைக்கி ஒரு ஆள்ர குஞ்சி அறுந்து தொங்கப் போகுது..பா..ர்....||   என்று என் கண்ணெதிரேயே அந்;த அருவாக்கத்தியை எடுத்து  முற்றத்து முண்டாக்கல்லில் கூர் தீட்டித் தீட்டி என்னைப் பார்த்துச் சிரித்தான்.. நான் வாய்குளறிப் போய் உம்மாவின் பின்னால் நின்று அழத்தொடங்pகினேன்... உம்மா சிரித்து...~~டேய்....கலந்தா..! .பிள்ளயப் போட்டு பயமுளுத்தாட்டாதடா... || என்று அவனுக்கு ஏசினாள்.. வாப்பா வந்துää  ~~தம்பி...அவண்ட கதய உட்டுட்டு..நீ வடிவாக் குளிச்சிட்டு வாடாம்பி...பள்ளியடிக்கிப் போய் காணிக்க போட்டுட்டு வருவம்...|| என்றார்...

 

      கலந்தன் காக்காவும் மீரானும் எனக்குக் கிணற்றடியில் வைத்து தண்ணீர் ஊற்றி வார்த்தார்கள்.. அந்நேரம் கலந்தன்காக்கா என் அதைப் பிடித்துப் பார்;த்து ~~ண்டையோட இது அறுந்து போகும்...வெறும் மொட்டையா இரிக்கிம்... நா ஒய்த்தமாமாட்ட செல்லிட்டன்.. வேரு செரியான துண்டாக்காரன்.. குலையோட அறு..ண்டு செல்லிரிக்கன்...|| என்றான்.. நான் பயத்தால் விறைத்துப் போனேன். உடனே மீரான் ~~டெ..கலந்தா..புள்ளயப் பயம் காட்டாதடா.  அதெல்லாம்   சும்மா   செல்றான்டா  தம்பி.. .நீ ஒ;ண்டுக்கும் பயப்புடாத....|| என்று ஆறுதலளித்தாலும் மீரானும் பொய்தான் சொல்கிறானோ என்று மேலும் பயமாகி விட்டது...

 

      குளித்து முடிந்ததும் எனக்கு புது உடுப்பு அணிவித்தார்கள்.. வாழ்வில் முதற்தடவையாக லோங்ஸ் அணிந்தேன்... புது உடுப்பும்..காலில் சப்பாத்தும் அணிந்து உண்மையில் பெரிய ஆள் போலத்தானிருந்தேன்... என்னைக்கண்ட வகுப்புக் கூட்டாளிமாரும் அல்அசலில் வசிக்கிற சிறுமிகளும் ஆச்சரியம் ததும்ப என்னைப் பார்ப்பதும் கிசுகிசுப்பதுமாக இரு;ந்தனர்.. எனக்குப் பெருமையாக இருந்தாலும் மாலை நடக்கவிருக்கும் ஒய்த்தா மாமாவின் அறுப்பை  எண்ணி எண்ணி பயந்துகொண்டுமிருந்தேன்...

 

      மாலை அஷர் தொழுகை முடிந்த கையோடு  பரபரப்பு ஆரம்பமாகி விட்டது... ஒய்த்தா மாமா வந்துவிட்டார்.. நான் பயத்தால் விறைத்துப் போய் உம்மாவிடம் போய் ஒட்டிக் கொண்டேன்... உம்மா சற்றுக் கவலையாக.... ~~ஞ்சங்க..புள்ள ஒரமாப் பயப்புடுறான்.. அவர மாமாட்டச் சொல்லி கொஞ்சம் ஊதிப்பாருங்க.....|| என்றதும் வாப்பா வந்து என்னிடம் ~~ஏன்டா மகன் பயப்பர்ராய்..? வா ..வா.. மாமா கொஞ்சம் ஊதிப்பாக்கட்டும்...வா...| என்று என்னைப் பலவந்தமாக இழுத்துக் கொண்டு ஒய்த்தாமாமாவிட்ம கொண்டு வந்தார்... ~~மாமா...புள்ள கொஞ்சம் பயந்திரிக்கான்.. கொஞ்சம் ஊதிப்பாருங்க...|| என்றதும்- ஒய்த்தா மாமா என்னைப் பார்த்தார்... அவரது கண்களில் ஒன்று மாறுகண்ணாக இருந்தது... ~~தம்பி...நீதானா.. மாப்பிள்ள...சரிசரி..வா..வா...ஒண்டுக்கும் பயப்புடாத...சும்டமா கொஞ்சத்த நோண்டிவிடுவன்... ப்ப வா..ஊதிப்பாப்பம்....|| என்று சொல்லி என்னை அருகமர்த்தி அரபு பாஸையால் என்ன்னவோவெல்லாம் ஓதி நெஞ்சில் ஊதி விட்டார்.. கைச்சந்தில் ஒரு சின்ன வெள்ளைச் சீலையில் ஒருருபாய் நாணயக்குற்றியை முடிச்சிட்டுக் கட்டினார்.. பின் என் நெஞ்சிலும்  முகத்திலும் மெதுவாக தண்ணீரினால் ஓங்கியடித்தார்... ~~ஙா..செரிநெசரி.. அ.. இனிப்பயப்படமாட்டாரு மாப்பிள்ள...உள்ளுக்க கூட்டிட்டுப் போய் உடுப்ப மாத்திக் கூட்டிட்டு வாங்க...|| என்றார்..

 

      கலந்தன்காக்கா அநதப் பெரிய அருவாக்கத்தியக் கொண்டு போய் ஒய்த்தாமாமவினருகே வைத்துவிட்டு என்னை நோக்கிச் சிரித்தான்... ~~வேல செரி..|| என்றான்.  நான் வெருண்டு போய்..கத்தியழ ஆரம்பித்தேன்...   . இனி நடப்பதெதுவும்; என் வசத்திலில்லை என்று புரிந்துவிட்டடது... நான் அணிந்திருந்த லோங்ஸைக்யும் சேர்ட்டையும் கழற்றிவிட்டார்கள்.. வெறும் ஒரு வெள்ளைத் துண்டை உடுத்துவிட்டார்கள்....

 

       கலந்தன் காக்காவும் மீரானும் என் தாய்மாமாவும் சேர்ந்து என்னைப் பலவந்தமாக ஒய்த்தாமாமா வின் அருகே கொண்டு சென்றனர்... . ஒரு மர உரலுக்குப் பக்கத்தில்  கீழே அமர்ந்திருந்த ஒய்த்தா மாமாவின் பக்கத்தே ஒரு தட்டு நிறைய மணல் இருந்தது ..சின்னஞ்சிறிய கத்திகளும்...கூடவே.. பயமுறுத்தும் ஒரு வகை மணமும்...  உத்தரத்திலிருந்து நூல் தொங்கியது..அதில் ஒரு பெரிய வெள்ளைச்சீலை கட்டி பாயின் மீது படிந்து தொங்கியது.... ஒய்த்தாமாமா ~~கத்தாத மருமகனே...ஒரு அஞ்சி நிமிசத்தில வேல முடிஞ்சிரும்..|| என்று சொன்னார்..  நான் உதறிக் கத்தி ஆர்ப்பரித்தேன்.. என் கூச்சலை யாரும் பொருட்படுத்தவில்லை..

 

      ஒய்த்தாமாமா எனக்கு விளங்காதபடி கலந்தன்காக்காவிடம் ஏதோ சைகை செய்தது போலிருந்தது. அவரின் எதிரே உரலில் என்னைப் பலவந்தமாக  இருப்பாட்டினார்கள். எனக்குப் பின்னாலிருந்த கலந்தன்காக்கா நான்உடுத்தியிருந்த வெள்ளைத் துண்டை சட்டென உருவிவிட்டான்... நான் நிர்வானமாக மகா அவமானத்துடனும் ஆத்ததிரத்துடனும் அவனின் கையைக் கடித்தேன்.. ஆனால்.. அவன் என்புறத் தொடைகளுக்கள்  அவனது கைகளைச் செலுத்தி என் கைகளையும் சேர்த்து ஒரே கொடுங்கைப்பிடியாகப் பிடித்துக் கொண்டான்... மீரான் என் தலையை ஒரு பக்கமாகத் திருப்பிப் பிடித்துக் கொண்டான்... என்னால் அசையவே முடியவில்லை... ஒரு சற்றும் திமிறவும் முடியவில்லை... நான் என்வசமிழந்து  கண்களை மூடிக் கொண்டேன்... ஒய்த்தாமாமா மிக இலகுவாக என் குஞ்சாமணியைப் பிடித்........ வேறு ஒன்றும் என் நினைவிலில்லை.................

 

      எனக்கு ஞாபகம் வந்து விழித்துப் பார்த்தபோதுää பாயில் படுக்க வைக்கப்பட்டிருந்தேன்... உம்மாவின் முகம் கண்ணீருடன் தெரிந்தது... வாப்பா சிரித்தபடி என்னிடம்...~~எல்லாம் முடிஞ்சி மகன்... நோகுதா..?|| என்று கேட்டார்... கலந்தன்காக்காவும் மீரானும் புன்னகைத்தனர்... ~~சின்னத்து வெச்சாச்சேய்...|| என்றனர்...  எனக்குத் துளி கூட வலிக்கவில்லை... நான் தயக்கமாக என்னை மூடியிருந்த வெள்ளைச்சீலையைச் சற்று உயர்த்திப் பார்த்தேன்... எதுவும் தெரியவில்லை... ஆயினும் என் குஞ்சாமணியைச் சுற்றி சீலையால் கட்டுப் போடப்பட்டிருந்தது..ஓ..இருக்கிறது. நான் வெட்கத்துடன்..ஒய்த்தாமாமாவைப் பார்த்தேன்... ஒய்த்தாமாமா என்னைப் பார்த்து ~~எ;ன்ன மருமகனே... ஒரு சின்னத்துண்டை நோண்டிவிட்டேன்.... எப்பிடி..நோகிச்சா...ல்லியே... வாப்பாட்டச் சொல்லி எனக்கி காணிக்கை கூடயா வாங்கித் தா...|| என்று சிரித்தார்....அதன் பிறகு எனக்கு ஒய்த்தாமாமாக்களைக் கண்டால் ஒரு பயமும் இல்லை....(2012)

 

 

Friday, January 28, 2022

உக்குவளை அக்ரம்


 June 14, 2021

தீரதம்.... 
உக்குவளை அக்ரம்

0 


தேடித் தீராவெளி நோக்கி சிறகடிக்கும் ஒரு மின்மினி பூச்சியின்..(ஆர்.எம். நெளஷாத்தின் )பத்து கதைகளடங்கிய சிறுகதைத்தொகுதிதீரதம் .செளுமையும் கனதியும் ஆழமும் விரிவும் நிறைந்தது.பிரமிப்பிலும் ஆச்சரியத்துக்குள்ளும் நம்மை ஆழ்த்தும் கதை சொல்லி.


மறைந்த மாத்தளை எழுத்தாளரான மர்ஹும் பண்ணாமத்துக்கவிராயர் அடிக்கடி உச்சரிக்கும் நாமம்.அவர் இவ்வாறு ஞாபகப்படுத்துவார் ' கிழக்கு மாகாணத்தில் நெளஷாட் என்றொரு எழுத்தாளர் இருக்கிறார் புதிய களத்தில் செளுமைமிக்க கதைகளை படைத்திருக்கிறார்.அவரால் எழுதப்பட்ட ஒவ்வொரு கதையும் ஏதொவோர் பரிசை வென்றெடுத்த கதைகளாகவே பரிமாணம் கொள்கிறது.ஒவ்வொரு எழுத்தாளனும் தவிர்க்காது வாசிக்க வேண்டிய முக்கியப்படைப்பாளி.நீங்களும் கட்டாயம் அவரின் படைப்புகளை தேடி வாசியுங்கள் அவரின் படைப்புகளிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய விடயங்கள் உண்டு' என்பார் .இவ் வழிகாட்டலும் போதனையும் அவர் எழுத்து மீதான பேராவல் கொள்ள தூண்டலாக அமைந்திருந்தது.இவ்வாறு ஒவ்வொரு எழுத்தாளனினதும் அவதானத்திற்கும் கண்ணியத்திற்குரிய படைப்பாளியாக முத்திரையிடப்பட்டவரே ஆர்.எம்.நெளஷாத் என்ற சிறுகதையாளன்.


அவரின் கதைகள் அதன் வெற்றி பற்றி ஓரிடத்தில் இவ்வாறு பதிகிறார். ' அறியப்படாத தளங்களில் இருந்தும் அறியப்பட்ட. தளங்களில் உள்ள.தெரியப்படாத பக்கங்கள் பற்றியும் கூடுதலாகச் சிந்திக்கிறேன்.முதலில் நுகர்பவரை கதைக்குள்ளே வரவைக்கிறேன்அப்புறம் அவர் என்னை வாங்காமல் போக முடியாதபடி செய்து விடுவது என் கதைத்தந்திரம்.இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. எல்லோரும் ஒரே விதமாக 'கதை'த்துக்கொண்டிருப்பதில் எனக்கு சம்மதமில்லை.' என்கிறார்.இங்கிருந்தே மாற்றமும் படைப்பும் திறன் கொள்கிறது.


சிலர் கதைகளை தயாரிக்கிறார்கள் கண்ணைக்கவரும் பலவித கலவையின் கூட்டாக..,பலரோ ஆங்காங்கே கண்டு கேள்விப்பட்ட தகவல்களை கொண்டு பத்திக் பூச்சுவேலையாக ஒட்டி ஒப்பேத்துகின்றனர்.இன்னும் சிலரோ பலர் எழுதிய கதைகளை வாசிப்பனுவபத்தில் உள்வாக்கி, தமக்கிசைவான உவப்பான ஒரு கதையாக உருமாற்றம் செய்து வெளிதள்ளுகின்றனர்.

இக் கதை சொல்லி..தம் வாழ்வினில் நடந்தவை.கடந்தவைகள்.தம் வாழும் சூழலில் சமூகத்தில், வாழ்ந்து மறைந்த மூதாதையர்களின் பழம்பெருமைகளை அடிநாதமாக கொண்டு.அவர்களின் வாழ்வாதாரங்கள்.சம்பிரதாயங்கள்.கலைகலாச்சார பண்பாட்டு விழுமியங்களை உள்வாங்கி கிரகித்து அதனை வரிசை கிரமப்படுத்தி, செதுக்கி..செம்மைப்படுத்தி உயரிய கலைப்படைப்பாக, உயிரும் சதையுமான உயிர்ப்போசைமிக்க கதையோட்டமாக, நம்முள் பரவச் செய்து, நம்முள் ஆழப்பதியச் செய்கிறார்

.இவ்வாறான படைப்புத்திறன் காலத்தால் அழியாததாகா..அழிக்கப்படாத கலைப்படைப்புகளாக மனித மனங்களில் ஆழம் கொள்கிறது.

தீரதம் தொகுதியில் பத்துக்கதைகளில் எது சிறந்த கதையென்றால், பத்தும் பத்து தளங்களில் பத்து வெளிகளை நோக்கி பயணித்து நம்மை பிரமிப்பில் ஆழ்த்துவனவாக உள்ளதில் பத்துமே தனக்குரிய கருவில், கதை சொல்லும் பாங்கில் தனித்துவம் மிக்கனவாகவே நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.

கதைக்குள்ளே கதைகளால் மனித மனங்களை ஆழும் கதைசொல்லியாக நம்மில் கம்பீரமாக வீற்றிருக்கும் நாமம். ஆர்.எம்.நெளஷாத் என்பதில் மாற்று கருத்தில்லை என்பேன்.00 

Saturday, June 5, 2021

ஹனீஸ் முகம்மது

'தீரதம்' சிறுகதைத் தொகுதி (2017)

கதை சொல்லி- தீரன். R.M. Nowsaath

0 ஹனீஸ் முஹம்மத்0



இரண்டு மாதங்களிற்கு முன் தோழர் Mohamed Sabry யின் பணிப்பின் பெயரின் தீரன் அவர்களை சந்திக்க அவரது வீடு சென்று அளவளாவ கிடைத்தது. அப்போது அவரின் அன்பின் மிகுதியால் எனக்கு தேசிய, மாகாண சாகித்திய விருதுகள் பெற்ற 'வெள்ளிவிரல்' மற்றும் 'தீரதம்' சிறுகதைத் தொகுதிகளை பரிசளித்தார். அப்போது ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள முடியாமல் போனமை மனவருத்தம் தான்.

அப்போதே வெள்ளி விரல் தொகுதியை வாசித்து முடித்துவிட்டேன் ஆனால் முகப்புத்தகத்தில் கருத்துக்களை பகிர நேரம் கிடைக்கவில்லை. நேற்று தான் தீரதத்தை வரசித்தேன்.

தீரனின் கதைகளை வாசிக்கும்போது எனக்கு பட்டது, கதை எழுதுவதற்கு ஒன்னும் உருட்டி பிரட்டி யோசிக்க தேவையும் இல்லை, புதுசா ஒரு யுக்தி மண்ணாங்கட்டியையும் ஆராய்ச்சி செய்ய தேவையுமில்லை. ஒவ்வொரு நாளும் நம்மை சுற்றி எத்தனையோ சம்பவங்களை மசிரென கடந்து போகிறோம், ஆனால் அவற்றிற்கு ஒவ்வொன்றிலும் மறைக்கப்படும், சொல்ல வேண்டிய கதைகள் இருக்கின்றன என்பதை எனக்கு உணர்த்தியது.


இத்தொகுதி பத்து கதைகள் இருக்கின்றன, அவற்றில் அநேகமானது குறியீடுகளை வைத்து அரசியல் பேசுகின்றன, அணில், காக்காமாரும் தோர்களும், மும்மான்.

அணில் கதை ஒரு தாபாலகத்தில் மேலதிகாரி ஒரு தமிழர், இடையதிகாரி ஒரு இஸ்லாமிர், கடையுழியர் ஒரு சிங்களவர், முக்கியமான பாத்திரத்தில் குறியீடாக அணில், இவர்களுக்கிடையில் நடைபெறும் அரசியல்.

காக்காமாரும் தோர்களும்- வித்தியசமான நடை, அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக கக்கிய வன்ம பத்திரிகை அறிக்கை துணுக்களை வைத்து ஒரு கதையை சொல்லிருக்கிறார்.

மும்மான்- முழுவதும் குறியீட்டுக்கதை, ஒரு காட்டொடு கதை நகர்கிறது, முப்பது வருடகால யுத்தத்தில் சிங்கத்திற்கும் புலிகளுக்குமிடையில் மான்கள் எப்படி வதைக்கப்பட்டது என்றதை மிகவும் சுவாரசியமாக கதை சொல்லியிருக்கிறார்.

ஒய்த்தா மாமா- விருத்த சேதனத்திற்கு பயந்து ஓடி ஒழியும் நினைவுகள்.
கள்ளக்கோழி- மூட நம்பிக்கையால் பிரித்து வைக்கப்படும் இளம் தம்பதியினரை பற்றியது.
பொன்னெழுத்துப் பீங்கான் - இது ஒரு அற்புதமான கதை, அக்காலத்தில் பொக்கிஷமாக பொன்னெழுத்துப் பீங்கானை குறியீடாக மாற்றி தன்னோழுக்கம் பற்றி பேசும் அதே வேளை, போரில் ஒரு அப்பாவி குடும்பஸ்தனின் உயிர்ப்பலியால் அக்குடும்பத்தின் நிலையை பற்றி பேசிகிறது. 
இத்ததைக்கே தனியோரு பதிவை எழுதலாம்.

"லெட்டியால தமுளன்ட கொளப்பமா இரிக்காம்... ண்டைக்கு காவலுக்கு போகணுமா...? ண்டு கேட்டன்... சிரிக்காரு...புலிப்படைய காட்டி சிங்கப்பட பொறுப்பு.. 
சிங்கப்படயக் காட்டியிம் ஆனப்பட பொறுப்புடி புள்ளேய்...

இந்த வரிகளே அக்காலப்பகுதியில் நிலவிய முழு அரசியலையும் பேசுகிறது. 
இது போன்ற சில வரிகள் போதும் சரித்திரம் பேச.

மறிக்கிடா - ஒரு குறியீட்டு கதை, வாசிக்கும் போதே நகச்சுவையும், பாலின உணர்வும் ததும்பும்.
தீரதம்- சூஃபித்துவ நிலை கதை

கபடப் பறவைகள் - ஒரு எழுத்தாளன் மறைந்ததன் பின் 
அவனது ஆத்மா அவரை வீட்டிற்கு வந்து கண்டடையும் காட்சிகள்.

ஆத்துமீன் ஆசை - ஒரு சராசரி குடும்பத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மாத கடைசியில் அவரது மாசமான மனைவின் ஆத்துமின் திங்கும் ஆசையை நிறைவேற்ற சந்தைக்கு சென்று அவமானப்படும் கதைகளம்.

"ந்தா.. விரால் மீனுக்கு வெல கேட்டும் வாங்காம,
அந்தா மரக்கறிப்பக்கம் ஓடுர கணக்கு மாஸ்டருக்கு மட்டுமில்லடா ஆக்களே.. வவ்த்துல புள்ளக்காரிக்கும்.. இந்த விராலப் புடிச்சவனுக்கும், இத வாங்கி விக்கிற எனக்கும்தான் விரால் மீன் சாப்பிடக் கட்டுப்படியாகாது. இத வித்து என்ட கடன் அடச்சிட்டு, இரவைக்கிச் சுண்டலோட சோறு திண்டுட்டுப் படுப்பன்... பிச்சை எடுக்கிற இந்த ஆள் ராச்சாப்பாட்டுக்குக் கூட விரால் மீன் பொரியல்... என்டால், இதென்ன புதினமான கணக்கு.. ஆரு போட்ட கணக்கு...? விளங்குதா கணக்குப் பாடம் எடுக்கிற மாஸ்டரே...ய்...?

அவரது ஒவ்வொரு கதைகளையும் வாசிக்கும் போது வட்டார மொழி நடையும் காட்சிகளும்
 நம்மயே கதை மாந்தர்களாக மாற்றுகின்றது.

தீரனின் ஏனைய __
வல்லமை தாராயோ... (சிறுகதைத் தொகுதி-2000

நட்டுமை (நாவல்) -2009 - சுந்தர ராமசாமி 75 பவளவிழா போட்டியில் முதல் பரிசு பெற்றது.

வெள்ளி விரல் (சிறுகதைத் தொகுதி)-2011- தேசிய, மாகாண சாகித்திய விருதுகள்.

கொல்வதெழுதுதல்.90 (நாவல்)-2013 - தமிழ் நாடு அரசின் ஆயிரம் பிரதிகளுக்கான நூலக ஆணை பெற்றது.

அபாயா என் கறுப்பு வானம் (கவிதைகள்-மின்நூலி 2015 அழித்தாயே ஆழித்தாயே...
(சுனாமி கடற்கோள் காவியம்) 2017

குறு-நெல் (குறும்பாக்களி2017)