கள்ளக்கோழி.
~மண்டயப் பொளந்துருவன்...ல்லாட்டி கைச்சந்துல ஒண்ட எறக்கிற...எந்த அறாங்குட்டி யெண்டு பாத்துருவம்..|| ண்டு நம்முட ஆத்தப்பாக் கௌவன் கய்யிலிரிந்த அருவாக்கத்திய இறுக்கயாப் புடிச்சிட்டு நட்ட ராவையில அவண்ட ஊட்டுக்குப் பொறகால இரிக்கிற பெரப்பம் பத்தைக்க ஒளிச்சிட்டுக் குந்திரிந்தான்.
ஒளிச்சிட்டுக் குந்திரிந்தான். ஒரு மனிசன வெட்டி அரியிற அளவுக்கு ந்த எளுவத்தாறு வயசில ஆத்தப்பாக் கௌவனுக்கு வெஞ்சினம் வந்தததென்ன..?அப்பிடி ஆர வெட்டி அரியப் போறான்..?: ஆரந்த அறாங்குட்டி...? வேறாரு..? .பேத்திற்ற ராவையில இருட்டுக்க வந்து போற...ஒரு அறாமி..!..ஆரவன்...? ஆரா இரிக்கட்டும்..! .கவையில்ல... ண்டைக்கி வெட்டிப்போட்டுத்தான் மறுவேல... ரெண்டு பேரையும் வெட்டிப்போட்டுட்டு தூக்குல தொங்கிற யெண்டாலும் செரிதாங்....ஆத்தப்பாக் கௌவன் உரத்த ரோசக்காரன்....
கௌவன் உரத்த ரோசக்காரன்.... ஆத்தப்பாக் கௌவண்ட பேத்தி நெல்ல வடிவான கொம்புள.. நெல்ல செறப்பாத்தான் கலியானம் செஞ்சிவெச்ச.. நகநட்டு சீருசெனத்தி எல்லாம் குடுத்த.. என்ன நடந்த கொதறத்தோ..?. பண்ணினவன் ஒரு பொடவ யாவாரி.. நெல்லாத் தெரிஞ்சவன்தான்.. காசிகப்பும் வெச்சிரிந்தான்.. மட்டக்களப்புல பொட்டணி யாவாரம்... ஆத்தப்பாக் கௌவனுக்கு ம்மாட வழியில கொஞ்சம் ஒறவு... ...அவண்ட சாதிசனம்தான்.. பண்ணி மூணுமாசம்தான் இரிந்தான். அண்டொரு நாள் சும்மா ஏசிப் போட்டுக் கோவிச்சிற்றுப் போய்ட்டான். ம்மாட ஊட்ட போனவன் திரும்பி வெரல்ல... சும்மாரிந்த குமரப் பழுதாக்கிப் போட்டுப் போய்ட்டான்.. .. ரெண்டு வரிசமாகுது...
ரெண்டு வரிசமாகுது... கோய்ச்சிட்டுப் போனவனக் கூட்டிட்டு வெரப் போன ஆத்தப்பாக் கௌவன அவன் மாப்புள்ளட வாப்பாக்காரன் புடிச்சித் தள்ளி உட்டுட்டான். ~போடாக் கௌட்டு வள்ளா.. ஒண்ட பேத்திர .........க்க எண்ட மகன்ட ....ஒரு நாளும் இனிப் பூர மாட்டா..போடா போடா....ண்டு வெரசினான. ~~அப்பிடி என்ன குத்தம்டா செஞ்ச எண்ட பேத்தி...என்னடா கொறடா அவளுக்கு..? செல்லுங்களண்டா அறாமியள்..?|| ண்டு ஆத்தப்பாக் கௌவன் ரோட்டுல நிண்டு கொம்பினத்துக்கு...மாப்புள்ளட ம்மாக்காரி முந்தானய சுத்திக்கட்டிட்டு ரோட்டுக்கு ஓடியாந்து..
ரோட்டுக்கு ஓடியாந்து.. .~~டெ ஆத்தப்பாக் கௌவா...ஒ;ண்ட பேத்தியப் பண்ணின நாள்ள இரிந்து என்ட மகனுக்கு யாவாரத்தல நட்டம்டா நக்கு வள்ளா.. குறி கேட்டுப் பாத்துட்டம்.. அவள வெலக்கினாத்தான் முசிவத்தும் வெலகுமாம்.. இனி இஞ்ச வெராதடா கௌவா.. காதிக் கோட்டுலதான் வளக்கு வெளக்கம் எல்லாம்.. இனி ஞ்சாலப் பக்கம் வந்தியெண்டா....த்த்த்த்த...|| ண்டு டானிஸ் ஆடிட்டாள்...
டானிஸ் ஆடிட்டாள்... கோவத்துல ஆத்தப்பாக் கௌவன் சம்பந்திர சொத்தையில வெத்திலாக்கக் காறித் துப்பிட்டு ~~அடி வெங்கிளாத்துர வேலக்காரி... ஒண்ட வங்கிசத்த நெக்கித் தெரியாதா.. ஒருவாக்காசிக்கி மாட்டுப்பீயத் திண்ட கூட்டம்... இனி ஒன்ட மகன் அறாமாக்கும் வேணா...நெல்ல ஒரிச்சினல் மாப்ள்ள நான் எடுப்பன்டி...|| ண்டு சவால் உட்டுட்டு வெட்டக்கிறங்கி வந்துட்டான்.. அத்தோட எல்லாம் அறுந்து போச்சி.....
எல்லாம் அறுந்து போச்சி.... மாப்ள்ள பொண்ணப் பிரிக்கிறத்துக்கு காதிக் கோட்டுல வழக்கு நடக்குது...வேள் பேத்தி புரியனோட ஒளுங்கா வாள ல்ல அவளும் நெல்ல பார்வையான கொம்புள.. ரோட்டுல திரியிற வளிசலுகள் பேத்தில கண்ணக் கிண்ணப் போட்ருவாணுகள் ண்டத்தால ஆத்தப்பாக் கௌவன் கண்ணுல எண்ண ஊத்திக் கங்காணிப்பாயிரிந்தான்.. மஸிமாவ வெட்டக் கிறங்க உட மாட்டான்.. கேட்டதெல்லாம் காலடியில கெடைக்கிற மாயிரி கட்டுக் காவலா வெச்சிருந்தான்.. பேத்திக்கி அவிசிரமா மாப்பிள்ள பாத்தான்....
பாத்தான்தான்...ஆனா என்ன வெச்சிரிந்து என்ன..? ப்ப கொஞ்ச நாளா...பேத்திர நடத்தயள்ள கொஞ்சம் சமிசயம் தட்டுது. .கொஞ்ச நாளா ராவையில பவுடர் பூசுறாள்.. தனிய நிண்டுட்டுச் சிரிக்காள்... அத்துரு மணக்குது... தலையில கிளிப்புகளும்.. களுத்துல மணி நெக்கிளசும் ஊசாடுது.. கொசாலா இரிக்காள்... சொணங்கித்தான் எளும்புறாள்.. செல நேரம் மாலமசண்டைக்க ஒரு பத்தப்பதினஞ்சி நிமிசம் ஆளக் காணல்ல... . எங்கடி போன ண்டு கேட்டா ~~என்னது நா ஒண்டுக்கு இரண்டுக்குப் போறல்லியா.. ஊட்டுக்குள்ளயா பீமூத்திரம் உர்ர..?|| ண்டு கேட்டு கடிச்சி ஏறப்பாக்காள்.. ~~கௌட்டு வயதுல சோத்தத் திண்டுட்டுப் படுக்காம கௌவண்ட கேள்வியப் பாரு... || ண்டு செல சமயம் புறுபுறுக்காள்..
செல சமயம் பரபரக்காள்... வேள்ள ந்தப் புதுக் குசாலுக்கு என்னடா காரணம் ண்டு ஆத்தப்பாக் கௌவன் உசுப்பாம ஒசாரா கங்காணிக்கத் தொடங்கினான். ரெண்டொரு நாள் மாட்டுக்குடில்ப் பக்கம் ஆரோ பொளங்கின மாயிரி சமுசயம் தட்டிட்டு... ன்னமின்னம் ஊசாட்டம் பாத்ததுல பேத்திக்கு ஆரோ ஒர்த்தனோட சாடமாடயாத் கள்ளத்தொடர்வு இரிக்கி ண்டு வெளங்கிப் போச்சி... ம்.. நமக்குத் தெரியாம வேளவு தகிரியமா ஞ்சயே வந்து சந்திக்கிறவன்...ஆரந்த அறாமி..?
ஆரந்த அறாமி.. கள்ளக்கோழி புடிக்க வாறவன்...? ஒரு நா பகல் அப்பான் சாப்பிட்டுட்டு கொஞ்சம் கெளிவம் ண்டு ஆத்தப்பாக் கௌவன் கண்ணமூடிட்டு உள்ளறைக்க கட்டில்ல படுக்கிற மாய்ரி சாஞ்சிற்று இரிந்தான்.. வேள் பேத்தி சாப்புக்க படுத்தவள் எளும்பி பொறக்கடக் கதவ உசுப்பாம தொறந்துட்டு.. வெட்டயால போறாள்.... ஆத்தப்பாக் கௌவனும் தவண்டுட்டு வெட்டையால வந்து ஊட்டுக்குப் பொறகால இரிக்கிற பெரப்பம் பத்தைக்க ஒழிச்சிட்டு இரிந்து பாத்தான்.. நெனச்சது செர்தாங்...! ஒரு சீட்டிச் சத்தம் கேக்குது.... ஒடன மாட்டுக்குடிலுக்க வேள் பேத்தி போறதும்... ஆரோடயோ குசுகுசுக்கிறதும்.....ம்..... .சிக்கிலட்டுப் பொகையும் மணக்குது..? ஆத்தப்பாக் கௌவன் வெறச்சிப் போய்ட்டான்.. ஆரந்த அறாங்குட்டி...? என்ன கட்டுக்காவலா வெச்சிருந்தும் ந்தப் பொட்ட நாய் போன போக்கென்ன..?
போன போக்கென்ன..? பேத்தி ஒரு அஞ்சி நிமிசத்தில திரும்பிட்டாள்.. கய்யில ஒரு பெரிய பார்சல்... சிரிச்சிட்டு திரும்பிப் பாத்து கைகாட்றாள்...என்னயோ கதைக்காள்... டக்கெண்டு கௌவன் திரிம்பி வந்து படுத்துட்டான்... நெஞ்சப் பொத்திற்று வெஞ்சினத்த விளுங்கிற்றான்... ம்மாட மண்ட.... இத ரெண்டுல ஒண்டு பாக்காம உட்றல்ல... ண்டு அந்நரம் முடிவு கட்டினான். ஆரு நாயா இரிந்தாலும் நக்க வார நாய்க்கி அருவாக்கத்தியால மண்டையில கொத்துற ண்டு தீமானங் கட்டிட்டான்...
அந்நரமே முடிவு கட்டிட்டான்.. இதப்பத்தி ஆத்தப்பாக் கௌவன் பேத்திட்ட ஒரு கதயும் கேக்கல்ல.. தெரிஞ்ச மாய்ரி காட்டிக்கயும் ல்ல.. ஆனா செரியான சந்தர்ப்பத்த காத்துட்டு அதுலயே ஒரு கண்ணாயிரிந்தான்..
அதுலயே கண்ணா இரிந்தவன்...ஒரு திட்டம் போட்டுட்டான்.. இண்டு ராவைக்கி தோட்டத்துல பண்டிக் காவலுக்குப் போறண் ண்டு செல்லிட்டு சாப்பாடும் கட்டி எடுத்துட்டு.. போறாப்பல போக்குக் காட்டிட்டுப் போய்.....நெல்ல மசமசண்ட இருட்டுக்க ஆத்தப்பாக் கௌவன் கிறுகி வந்து ஆருக்கும் தெரியாம ஊட்டுக்குப் பொறகால இரிக்கிற பெரப்பம் பத்தைக்க குந்திரிந்தான். கய்யில மூணு வெத்தி டோர்ச்சி லைட்டும் நெல்ல கூரான அருவாக்கத்தியும் வெச்சிட்டுப் பதுங்கிற்று சத்தம்கித்தம் போடாம குந்திரிக்கான்......
சத்தம்கித்தம் போடாம குந்திரிக்கான்......ண்டைக்கி நெல்ல அம்மாச இருட்டு... ஒத்தச் சாமக் கோளி கூவக்க.. வெசயம் தொடங்கிட்டு... ஆத்தப்பாக் கௌவன் நெனச்ச மாய்pரியே நடந்திச்சு... திடிருண்டு மாட்டுக்காலைக்கிப் பொறகால இரிந்து ஒரு சின்ன விசில்ச்சத்தம் கேட்டிச்சு... ஒடனே பேத்தி பொளக்கடக் கதவத் தொறந்துட்டு வெட்டால வாறாள்.. சாட்டுக்கு கெணத்துல தண்ணி அள்ளி காலக்களுவுறாள்.. பொறகு.. ன்னொரு கனப்புச் சத்தம் கேட்டதும்... பேத்தி வந்து மாட்டுக்காலைக்குள்ள பூந்துட்டாள்... ஆத்தப்பாக் கௌவனுக்கு எரத்தம் கொதிக்குது.... பல்லக் கடிச்சிட்டு அருவாக்கத்திய இறுக்கயாப் புடிச்சிட்டு சரசரண்டு பெரப்பம் பத்தைக்க தவண்டு தவண்டு மாட்டுக்காலப்பக்கம் வந்துட்டான்.
மாட்டுக்காலப்பக்கம் வந்துட்டான். ஆனா கௌவன் வந்த சத்தம் கேட்டுட்டுப் போல.... வேள் பேத்தி குசுகுசுப்பாக ~~ஆரே வாறாக.. ஆரே வாறாக..|| ண்டு செல்லிட்டு டக்குண்டு எழும்பி பொடவயத் தூக்கிட்டு ஒட-கூட இரிந்த ஆரோ ஒரு கள்ளன் உடுத்திரிந்த சாரனையும் அவுட்டுட்டு மாட்டுக்காலைக்கி வெளியால பாஞ்சான்... ஆனா.. ஆத்தப்பாக் கௌவனும் உடல்ல.. டக்கெண்டு பாஞ்சி அவண்ட காலக் கட்டிப்; புடிச்சிட்டான்.. ரெண்டு பேரும் தட்டுமுட்டுப் பட்டு மாட்டுக்காலைக்க உளுந்து கட்டிப்புடிச்சிட்டுப்; பெரள.... பேத்தி பயத்தில ஊட்டுக்க ஓடிட்டாள்.. ஆத்தப்பாக் கௌவன் தன்னோட மல்லுக்கட்டின ஆம்பிளய ஒரே புடியா அமுக்கிட்டான்... ஆனா அவன் எளந்தாரிப் பொடியன்..
எளந்தாரிப் பொடியன். ஆத்தப்பாக் கெனவன்ட கய்யக் கடிச்சிற்றான்..புடிய ஒதறி உடுபட்டுட்டு... டக்கெண்டு பசுமாட்ர கவுட்டுக்குள்ளால ப10ந்துட்டு மத்தப்பக்கமா பாஞ்சிட்டான்.. ஆனா ஆத்தப்பாக் கௌவன் சட்டுண டோச்சி லைற்ற அவண்ட சொத்தையில வெளிச்சம் அடிச்சிற்று...அருவாள ஓங்க......
அருவாள ஓங்க...... டோர்ச்சி லைற்று வெளிச்சத்துல அவண்ட சொத்தையப் பாத்த ஆத்தப்பாக் கௌவன் வெறைச்சிப் போய்ட்டான்... ஒடன அருவாக்கத்திய கீள போட்டுட்டான். வெக்கத்துல மெலச்சிப் போய் அப்பிடியே செல மாய்ரி நிண்டுட்டான். அப்பிடியே குந்திட்டான்.. வெறப்படி இரிக்கிம்..? வந்துட்டுப் போற அந்தக் கள்ள அறாங்குட்டி வேள் பேத்திர உட்டுட்டுப் போன புரிசன்காரன்தான் ண்டு தெரிஞ்ச பொறகு........................? (2011)
8888888888888888888888888888
No comments:
Post a Comment