ஒய்த்தா மாமா.
எனக்குப் பத்து வயதிருக்கும் போது அது நடந்தது..... ஒய்த்தாமாமாவைக் கண்டாலே எனக்குப் பயம். அவர் சிறுவர்களின் குஞ்சாமணியை தயைதாட்சண்யமின்றி அறுத்தெறிகிறவர் என்று கேள்விப்பட்டதிலிருந்து இந்தப்பயம். இது நிச்சயமாக நமக்கும் எப்போதோ நடக்கத்தான் போகிறதென்று உணர்ந்ததிலிருந்து அவரைக் கண்டாலே குலை நடுக்கம்தான்.. அப்படி அவர் குஞ்சாமணியை அறுத்தெறிகிறவர் என்றால் நம்மட வாப்பா பெரியப்பா பெரிய ஆம்பிள்ளைகள் எல்லாம் எப்படி ஒண்டுக்குப் போகிறார்கள் என்று கேள்வி மண்டையைக் குடையும்.. பள்ளிக்கூடம் செல்லும் வழியில் ஒய்த்தாமாமா தென்பட்டால் பதறிப் போய் வேறு வழியாக ஓட்டம் பிடிப்பேன்.. வீட்டருகே விளையாடிக் கொண்டிருக்கும் போது கண்டாலோ துடித்துப் பதைத்து உள்ளறைக்கு ஓடி விடுவேன்..
எங்கள் வீட்டில் வேலையாளாக இரிந்த கலந்தன்காக்காதான் ஒய்த்தா மாமாவைப் பற்றி கதைகதையாகச் சொல்வான்.. சில பிள்ளைகளின் குஞ்சாமணியை நுனியில் கொஞ்சமாக அறுப்பார் என்றும்.. அறுத்த குஞ்சு பல்லியின் வால் துடிக்கிறாப் போல் துடிக்குமென்றும்..அதுல சைத்தான் வந்து நிற்குமென்றும.. சில துடுக்குப் பிள்ளைகளின் குஞ்சாமணியை குலையோடு அறுத்து அதனைக் கடலில் கொண்டு போய் வீசிவிடுவார் என்றும்.. அபபடிப்பட்ட பிள்ளைகள் இனிச் சூப்பேயவும் முடியாதென்றும் அவன் சொன்ன கதைகள் பல... அதிலிருந்து நானும் எனது துடுக்குத்தனத்தையெல்லாம் அடக்கி கப்சிப்பென்றிருப்பேன்...
ஆயினும் ஒருநாள் மூன்றாம்தவணைப் பரீட்சை சித்தியடைந்து மிகச் சந்தோசமாக ரிப்போர்ட்டை வாப்பாவிடம் காட்டியபோதுää அவர் மகிழ்ந்து போய் ~~நாலாம் வகுப்புப் பாசாய்ட்டான் மகன்... இனி நீ அஞ்சாம் வகுப்பா..? ...பெரிய ஆள்... உனக்கு வார வெள்ளிக்கிளம சுன்னத்து வெய்க்கப் போறம்டா மகனே....|| என்று என் சம்மதமில்லாமலேயே திடீரென்று அறிவித்தார். கூட நின்றிருந்த கலந்தன்காக்கா வாப்பாவுக்குத் தெரியாமல் என்னிடம் தன் விரலைக் காட்டி கத்தியால் கரகரவென அறுத்தெறிவது போல் பாவனை காட்டினான்... நான் பயத்தில் ~~எண்டம்மா...எண்டம்மா...|| என்ற கத்திக் கொண்டே உம்மாவிடம் ஓடி அவளைக் கட்டிப்பிடித்துக் கொண்டேன்... உம்மா சிரித்து... ~~பயப்புடாதேடா தம்பி...அது எல்லாருக்கும் செய்றதுதான்.. அபபிடியெல்லாம் நோகாது...சும்மா கடியன் கடிச்சாப்பல கொஞ்ச நேரம் கடுக்கும்...மறுகாச் செரி...|| என்று சொல்லிச் சிரித்தாள்...
எனக்கு ஒரே குழப்பமாகிப் போய்விட்டது.. என் அங்க இழப்பில் அவர்களுக்கென்ன சந்தோஷம் என்று புரியவில்லை. முதல் ஆளாக வகுப்பேறிய சந்தோஷமும் போய்விட்டது.. எல்லோர் மீதும் கோபித்துக் கொண்டு படுத்துவிட்டேன்.. மாலையில் உம்மா என்னை எழுப்பி தேறுதல் சொல்லி சாப்பிட வைத்தாள்.. வாப்பா வந்து..~~என்னடா தம்பி பயந்துட்டியா.. பயப்புடாதே.. எல்லாருக்கும் வெய்க்கிறதுதானே.. எனக்கிம் உண்ர வயதில வெச்சதான்.. அந்த நேரம் கய்ட்டம்...ப்ப எல்லாம் லேசி..! ஒண்டுக்கும் .பயப்புடாத...|| என்றார்..
நான் பயத்தடன் ~~ எனக்கி முன்ன பொறந்த லாத்தாவுக்கு வெய்க்காம எனக்கேன் வாப்பா வெய்க்கிறீங்க.. மொதல்ல அவளுக்கு வெய்ங்க...|| என்றேன்.. அதைக் கேட்டு எல்லோரும் கலகலகவென்று சிரித்தார்கள்.. கலந்தன்காக்கா எட்டிப் பார்த்து...~~உனக்கிட்டதானே குஞ்சாமணி இருக்கி...லாத்தாக்கிட்ட அது ல்லியே....|| என்று சிரித்து...மறுபடி விரலை வெட்டிக் காட்டினான்... எனது இந்தக் கேள்வி அல்லசல் முழுவதும் பெண்கள் மத்தியில் பரவி... போறவாற பெண்கள் சிறுமிகள் எல்லோரும் என்னைப் பார்த்துச் சிரித்தார்கள்... நான் பயத்தடனும் ஏக குழப்பத்தடனும் வீட்டு தொங்கல் அறைக்குள் ஒழித்திருந்தேன்..
அன்று பின்னேரம் சுன்னத்துக் கலியாணம் என்று கார்ட்டெல்லாம் அடித்து வந்தாயிற்று..
~~ எல்லாம்வல்ல இறைவன் திருவருளால்... நிகழும் ஹிஜ்ரி 1412 ஸவ்வால் மாதம் பிறை 12க்குச் சரியாகிய 1969ம் ஆண்டு பங்குனி மாதம் 23ம் திகதி பி.ப.4.00 மணியளவில் எமது திருநிறைச் செல்வன் அ.ற. முகம்மது றெஸ்வின் அவர்களுக்கு விருத்தசேதனம் செய்யப் பெரியோர்கள் நிச்சயித்திருப்பதால் அன்று நிகழும் பகற்போசனத்திலும் அன்று மாலை நிகழவுள்ள வைபவத்திலும் தாங்கள் குடும்ப சகிதம் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.. இவ்வண்ணம் மீ.மு. அப்துல றகீம் முதலாளியும் பாரியாரும்.......|| வாசிக்க வாசிக்க ஆனந்தமாயிருந்தாலும் வருவோர் போவோரெல்லாம் மாப்பிள்ள மாப்பிள்ள என்ற கூப்பிட்டுக் கூப்பிட்டு அன்பு காட்டியதாலும்.. எராளமான அன்பளிப்புக்கள் கிடைத்துக் கொண்டிருந்ததாலும் ஒய்த்தா மாமா மீதான பயம் சற்றுக் குறைந்தது... இருந்தாலும்..... கலந்தன்காக்கா எங்கள் வீட்டிலிருந்த ஒரு பெரிய அருவாக்கத்தியை எடுத்து என் கண்ணில்படும்படியாக ஒழித்து வைத்திருந்தான்.. அடிக்கடி அமை எடுத்து தீட்டிக் கொண்டுமிருந்தான்.. அக்கத்தியையம் என்னையும் பார்த்து அறுத்தறுத்துக் காட்டி என் பயத்தை சற்றும் குறையவிடாமல் அதிகரித்துக் கொண்டேயிருந்தான்....
வெள்ளிக்கிழமைக்கு இன்னம் நான்கு நாட்கள்தாம் இருந்தன.. வாப்பா பென்னம்பெரிய ஒரு மாட்டை அறுத்து தானம் கொடுத்தார்.. வீடெல்லாம் திருத்தினார்கள்.. புது மை பூசி கதவெல்லாம் பொலிஸ் மணத்தது.. தென்னங்குருத்தோலைகளால் அலங்காரம் செய்து நிலைப்படிகளில் தொங்கின... வாசலில் பெரிய பந்தல் இட்டு சீலையால் மறைத்து அழகழகாக சோடனைத்தாள்ககளால் அலங்கரித்தார்கள்.. தென்னம்பாளையின் குருத்துகளில் வண்ணவண்ண அலங்காரங்கள்...ஆறு பெரிய டியுப் லைற்றுகள்... பத்துக் குண்டு பல்புகள் கலர்கலராய் உமிழ்ந்து கண்ணைப் பறித்தன... ஷ்பீக்கர் கொண்டு வரப் போயிருந்தார்கள்.. பொல்லடி அடிக்கவும்..குருடி கவி பாடவும். சானாப் புலவன் வாழ்த்துப் பாடவும்.. போட்டோக்கள் பிடிக்கவும்..... ஏற்பாடுகள் நடந்தன..
வாப்பாவின் தங்கச்சிமார்..மாமிமார் பொண்டுகள் கூட்டி வந்தார்கள். என்னை அலங்கரிக்கப்பட்ட கதிரையில் அமர வைத்து...பூக்கள் சொரிந்து...குரவையிட்டு...பகல்வர்த்தி சக்கரம் கொளுத்தி...பால்பழம் தந்து...பரிசுகள்...காசுகள்...துணிமணிகள்....உண்மையில் நான் பெரிய மாப்பிள்ளையேதானா..? வந்தோருக்கு உபசாரங்கள்...அதற்குதவியாக என் உம்மாவின் உறவினப்பட்டாளங்கள்...எப்போது பார்த்தாலும் கேக்..வாழைப்பழம்...துதல்..மஸ்கற்...கோப்பி..டீ..என்று பான வகைகள்...பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தார்கள்....வீடெல்லாம் கலகலப்புக்குப் பஞ்சமில்லை...
வெள்ளிக்கிழமை விடிந்தது.. கண்விழித்ததுமே...வீடெல்லாம் பரபரப்பாக இயங்கியது... ஓ... இண்றைக்கு அல்லவா சுன்னத்து....? என்ற நினைப்பு வந்ததுமே பயந்து போய் சட்டென்று எழுந்து விட்டேன்... உம்மா வந்து என்னை அணைத்துக் கொண்டாள்... ~~ண்டைக்கித்தான் என்ட பள்ள பெரிய எளந்தாரியா ஆகப் போறான்..டோ..ய்..|| என்ற சிரித்தாள்.. மாப் பிட்டும் காடைக்குருவிக் கறியும் தந்து சாப்பிடச் செய்தாள்... என்னைக் கண்டதும் கலந்தன் காக்கா சிரித்து... ~~ஙா...மாப்பிள்ள எழும்பிட்டியா... ண்டைக்கி ஒரு ஆள்ர குஞ்சி அறுந்து தொங்கப் போகுது..பா..ர்....|| என்று என் கண்ணெதிரேயே அந்;த அருவாக்கத்தியை எடுத்து முற்றத்து முண்டாக்கல்லில் கூர் தீட்டித் தீட்டி என்னைப் பார்த்துச் சிரித்தான்.. நான் வாய்குளறிப் போய் உம்மாவின் பின்னால் நின்று அழத்தொடங்pகினேன்... உம்மா சிரித்து...~~டேய்....கலந்தா..! .பிள்ளயப் போட்டு பயமுளுத்தாட்டாதடா... || என்று அவனுக்கு ஏசினாள்.. வாப்பா வந்துää ~~தம்பி...அவண்ட கதய உட்டுட்டு..நீ வடிவாக் குளிச்சிட்டு வாடாம்பி...பள்ளியடிக்கிப் போய் காணிக்க போட்டுட்டு வருவம்...|| என்றார்...
கலந்தன் காக்காவும் மீரானும் எனக்குக் கிணற்றடியில் வைத்து தண்ணீர் ஊற்றி வார்த்தார்கள்.. அந்நேரம் கலந்தன்காக்கா என் அதைப் பிடித்துப் பார்;த்து ~~ண்டையோட இது அறுந்து போகும்...வெறும் மொட்டையா இரிக்கிம்... நா ஒய்த்தமாமாட்ட செல்லிட்டன்.. வேரு செரியான துண்டாக்காரன்.. குலையோட அறு..ண்டு செல்லிரிக்கன்...|| என்றான்.. நான் பயத்தால் விறைத்துப் போனேன். உடனே மீரான் ~~டெ..கலந்தா..புள்ளயப் பயம் காட்டாதடா. அதெல்லாம் சும்மா செல்றான்டா தம்பி.. .நீ ஒ;ண்டுக்கும் பயப்புடாத....|| என்று ஆறுதலளித்தாலும் மீரானும் பொய்தான் சொல்கிறானோ என்று மேலும் பயமாகி விட்டது...
குளித்து முடிந்ததும் எனக்கு புது உடுப்பு அணிவித்தார்கள்.. வாழ்வில் முதற்தடவையாக லோங்ஸ் அணிந்தேன்... புது உடுப்பும்..காலில் சப்பாத்தும் அணிந்து உண்மையில் பெரிய ஆள் போலத்தானிருந்தேன்... என்னைக்கண்ட வகுப்புக் கூட்டாளிமாரும் அல்அசலில் வசிக்கிற சிறுமிகளும் ஆச்சரியம் ததும்ப என்னைப் பார்ப்பதும் கிசுகிசுப்பதுமாக இரு;ந்தனர்.. எனக்குப் பெருமையாக இருந்தாலும் மாலை நடக்கவிருக்கும் ஒய்த்தா மாமாவின் அறுப்பை எண்ணி எண்ணி பயந்துகொண்டுமிருந்தேன்...
மாலை அஷர் தொழுகை முடிந்த கையோடு பரபரப்பு ஆரம்பமாகி விட்டது... ஒய்த்தா மாமா வந்துவிட்டார்.. நான் பயத்தால் விறைத்துப் போய் உம்மாவிடம் போய் ஒட்டிக் கொண்டேன்... உம்மா சற்றுக் கவலையாக.... ~~ஞ்சங்க..புள்ள ஒரமாப் பயப்புடுறான்.. அவர மாமாட்டச் சொல்லி கொஞ்சம் ஊதிப்பாருங்க.....|| என்றதும் வாப்பா வந்து என்னிடம் ~~ஏன்டா மகன் பயப்பர்ராய்..? வா ..வா.. மாமா கொஞ்சம் ஊதிப்பாக்கட்டும்...வா...| என்று என்னைப் பலவந்தமாக இழுத்துக் கொண்டு ஒய்த்தாமாமாவிட்ம கொண்டு வந்தார்... ~~மாமா...புள்ள கொஞ்சம் பயந்திரிக்கான்.. கொஞ்சம் ஊதிப்பாருங்க...|| என்றதும்- ஒய்த்தா மாமா என்னைப் பார்த்தார்... அவரது கண்களில் ஒன்று மாறுகண்ணாக இருந்தது... ~~தம்பி...நீதானா.. மாப்பிள்ள...சரிசரி..வா..வா...ஒண்டுக்கும் பயப்புடாத...சும்டமா கொஞ்சத்த நோண்டிவிடுவன்... ப்ப வா..ஊதிப்பாப்பம்....|| என்று சொல்லி என்னை அருகமர்த்தி அரபு பாஸையால் என்ன்னவோவெல்லாம் ஓதி நெஞ்சில் ஊதி விட்டார்.. கைச்சந்தில் ஒரு சின்ன வெள்ளைச் சீலையில் ஒருருபாய் நாணயக்குற்றியை முடிச்சிட்டுக் கட்டினார்.. பின் என் நெஞ்சிலும் முகத்திலும் மெதுவாக தண்ணீரினால் ஓங்கியடித்தார்... ~~ஙா..செரிநெசரி.. அ.. இனிப்பயப்படமாட்டாரு மாப்பிள்ள...உள்ளுக்க கூட்டிட்டுப் போய் உடுப்ப மாத்திக் கூட்டிட்டு வாங்க...|| என்றார்..
கலந்தன்காக்கா அநதப் பெரிய அருவாக்கத்தியக் கொண்டு போய் ஒய்த்தாமாமவினருகே வைத்துவிட்டு என்னை நோக்கிச் சிரித்தான்... ~~வேல செரி..|| என்றான். நான் வெருண்டு போய்..கத்தியழ ஆரம்பித்தேன்... . இனி நடப்பதெதுவும்; என் வசத்திலில்லை என்று புரிந்துவிட்டடது... நான் அணிந்திருந்த லோங்ஸைக்யும் சேர்ட்டையும் கழற்றிவிட்டார்கள்.. வெறும் ஒரு வெள்ளைத் துண்டை உடுத்துவிட்டார்கள்....
கலந்தன் காக்காவும் மீரானும் என் தாய்மாமாவும் சேர்ந்து என்னைப் பலவந்தமாக ஒய்த்தாமாமா வின் அருகே கொண்டு சென்றனர்... . ஒரு மர உரலுக்குப் பக்கத்தில் கீழே அமர்ந்திருந்த ஒய்த்தா மாமாவின் பக்கத்தே ஒரு தட்டு நிறைய மணல் இருந்தது ..சின்னஞ்சிறிய கத்திகளும்...கூடவே.. பயமுறுத்தும் ஒரு வகை மணமும்... உத்தரத்திலிருந்து நூல் தொங்கியது..அதில் ஒரு பெரிய வெள்ளைச்சீலை கட்டி பாயின் மீது படிந்து தொங்கியது.... ஒய்த்தாமாமா ~~கத்தாத மருமகனே...ஒரு அஞ்சி நிமிசத்தில வேல முடிஞ்சிரும்..|| என்று சொன்னார்.. நான் உதறிக் கத்தி ஆர்ப்பரித்தேன்.. என் கூச்சலை யாரும் பொருட்படுத்தவில்லை..
ஒய்த்தாமாமா எனக்கு விளங்காதபடி கலந்தன்காக்காவிடம் ஏதோ சைகை செய்தது போலிருந்தது. அவரின் எதிரே உரலில் என்னைப் பலவந்தமாக இருப்பாட்டினார்கள். எனக்குப் பின்னாலிருந்த கலந்தன்காக்கா நான்உடுத்தியிருந்த வெள்ளைத் துண்டை சட்டென உருவிவிட்டான்... நான் நிர்வானமாக மகா அவமானத்துடனும் ஆத்ததிரத்துடனும் அவனின் கையைக் கடித்தேன்.. ஆனால்.. அவன் என்புறத் தொடைகளுக்கள் அவனது கைகளைச் செலுத்தி என் கைகளையும் சேர்த்து ஒரே கொடுங்கைப்பிடியாகப் பிடித்துக் கொண்டான்... மீரான் என் தலையை ஒரு பக்கமாகத் திருப்பிப் பிடித்துக் கொண்டான்... என்னால் அசையவே முடியவில்லை... ஒரு சற்றும் திமிறவும் முடியவில்லை... நான் என்வசமிழந்து கண்களை மூடிக் கொண்டேன்... ஒய்த்தாமாமா மிக இலகுவாக என் குஞ்சாமணியைப் பிடித்........ வேறு ஒன்றும் என் நினைவிலில்லை.................
எனக்கு ஞாபகம் வந்து விழித்துப் பார்த்தபோதுää பாயில் படுக்க வைக்கப்பட்டிருந்தேன்... உம்மாவின் முகம் கண்ணீருடன் தெரிந்தது... வாப்பா சிரித்தபடி என்னிடம்...~~எல்லாம் முடிஞ்சி மகன்... நோகுதா..?|| என்று கேட்டார்... கலந்தன்காக்காவும் மீரானும் புன்னகைத்தனர்... ~~சின்னத்து வெச்சாச்சேய்...|| என்றனர்... எனக்குத் துளி கூட வலிக்கவில்லை... நான் தயக்கமாக என்னை மூடியிருந்த வெள்ளைச்சீலையைச் சற்று உயர்த்திப் பார்த்தேன்... எதுவும் தெரியவில்லை... ஆயினும் என் குஞ்சாமணியைச் சுற்றி சீலையால் கட்டுப் போடப்பட்டிருந்தது..ஓ..இருக்கிறது. நான் வெட்கத்துடன்..ஒய்த்தாமாமாவைப் பார்த்தேன்... ஒய்த்தாமாமா என்னைப் பார்த்து ~~எ;ன்ன மருமகனே... ஒரு சின்னத்துண்டை நோண்டிவிட்டேன்.... எப்பிடி..நோகிச்சா...ல்லியே... வாப்பாட்டச் சொல்லி எனக்கி காணிக்கை கூடயா வாங்கித் தா...|| என்று சிரித்தார்....அதன் பிறகு எனக்கு ஒய்த்தாமாமாக்களைக் கண்டால் ஒரு பயமும் இல்லை....(2012)
No comments:
Post a Comment