Saturday, June 5, 2021

ஹனீஸ் முகம்மது

'தீரதம்' சிறுகதைத் தொகுதி (2017)

கதை சொல்லி- தீரன். R.M. Nowsaath

0 ஹனீஸ் முஹம்மத்0



இரண்டு மாதங்களிற்கு முன் தோழர் Mohamed Sabry யின் பணிப்பின் பெயரின் தீரன் அவர்களை சந்திக்க அவரது வீடு சென்று அளவளாவ கிடைத்தது. அப்போது அவரின் அன்பின் மிகுதியால் எனக்கு தேசிய, மாகாண சாகித்திய விருதுகள் பெற்ற 'வெள்ளிவிரல்' மற்றும் 'தீரதம்' சிறுகதைத் தொகுதிகளை பரிசளித்தார். அப்போது ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள முடியாமல் போனமை மனவருத்தம் தான்.

அப்போதே வெள்ளி விரல் தொகுதியை வாசித்து முடித்துவிட்டேன் ஆனால் முகப்புத்தகத்தில் கருத்துக்களை பகிர நேரம் கிடைக்கவில்லை. நேற்று தான் தீரதத்தை வரசித்தேன்.

தீரனின் கதைகளை வாசிக்கும்போது எனக்கு பட்டது, கதை எழுதுவதற்கு ஒன்னும் உருட்டி பிரட்டி யோசிக்க தேவையும் இல்லை, புதுசா ஒரு யுக்தி மண்ணாங்கட்டியையும் ஆராய்ச்சி செய்ய தேவையுமில்லை. ஒவ்வொரு நாளும் நம்மை சுற்றி எத்தனையோ சம்பவங்களை மசிரென கடந்து போகிறோம், ஆனால் அவற்றிற்கு ஒவ்வொன்றிலும் மறைக்கப்படும், சொல்ல வேண்டிய கதைகள் இருக்கின்றன என்பதை எனக்கு உணர்த்தியது.


இத்தொகுதி பத்து கதைகள் இருக்கின்றன, அவற்றில் அநேகமானது குறியீடுகளை வைத்து அரசியல் பேசுகின்றன, அணில், காக்காமாரும் தோர்களும், மும்மான்.

அணில் கதை ஒரு தாபாலகத்தில் மேலதிகாரி ஒரு தமிழர், இடையதிகாரி ஒரு இஸ்லாமிர், கடையுழியர் ஒரு சிங்களவர், முக்கியமான பாத்திரத்தில் குறியீடாக அணில், இவர்களுக்கிடையில் நடைபெறும் அரசியல்.

காக்காமாரும் தோர்களும்- வித்தியசமான நடை, அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக கக்கிய வன்ம பத்திரிகை அறிக்கை துணுக்களை வைத்து ஒரு கதையை சொல்லிருக்கிறார்.

மும்மான்- முழுவதும் குறியீட்டுக்கதை, ஒரு காட்டொடு கதை நகர்கிறது, முப்பது வருடகால யுத்தத்தில் சிங்கத்திற்கும் புலிகளுக்குமிடையில் மான்கள் எப்படி வதைக்கப்பட்டது என்றதை மிகவும் சுவாரசியமாக கதை சொல்லியிருக்கிறார்.

ஒய்த்தா மாமா- விருத்த சேதனத்திற்கு பயந்து ஓடி ஒழியும் நினைவுகள்.
கள்ளக்கோழி- மூட நம்பிக்கையால் பிரித்து வைக்கப்படும் இளம் தம்பதியினரை பற்றியது.
பொன்னெழுத்துப் பீங்கான் - இது ஒரு அற்புதமான கதை, அக்காலத்தில் பொக்கிஷமாக பொன்னெழுத்துப் பீங்கானை குறியீடாக மாற்றி தன்னோழுக்கம் பற்றி பேசும் அதே வேளை, போரில் ஒரு அப்பாவி குடும்பஸ்தனின் உயிர்ப்பலியால் அக்குடும்பத்தின் நிலையை பற்றி பேசிகிறது. 
இத்ததைக்கே தனியோரு பதிவை எழுதலாம்.

"லெட்டியால தமுளன்ட கொளப்பமா இரிக்காம்... ண்டைக்கு காவலுக்கு போகணுமா...? ண்டு கேட்டன்... சிரிக்காரு...புலிப்படைய காட்டி சிங்கப்பட பொறுப்பு.. 
சிங்கப்படயக் காட்டியிம் ஆனப்பட பொறுப்புடி புள்ளேய்...

இந்த வரிகளே அக்காலப்பகுதியில் நிலவிய முழு அரசியலையும் பேசுகிறது. 
இது போன்ற சில வரிகள் போதும் சரித்திரம் பேச.

மறிக்கிடா - ஒரு குறியீட்டு கதை, வாசிக்கும் போதே நகச்சுவையும், பாலின உணர்வும் ததும்பும்.
தீரதம்- சூஃபித்துவ நிலை கதை

கபடப் பறவைகள் - ஒரு எழுத்தாளன் மறைந்ததன் பின் 
அவனது ஆத்மா அவரை வீட்டிற்கு வந்து கண்டடையும் காட்சிகள்.

ஆத்துமீன் ஆசை - ஒரு சராசரி குடும்பத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மாத கடைசியில் அவரது மாசமான மனைவின் ஆத்துமின் திங்கும் ஆசையை நிறைவேற்ற சந்தைக்கு சென்று அவமானப்படும் கதைகளம்.

"ந்தா.. விரால் மீனுக்கு வெல கேட்டும் வாங்காம,
அந்தா மரக்கறிப்பக்கம் ஓடுர கணக்கு மாஸ்டருக்கு மட்டுமில்லடா ஆக்களே.. வவ்த்துல புள்ளக்காரிக்கும்.. இந்த விராலப் புடிச்சவனுக்கும், இத வாங்கி விக்கிற எனக்கும்தான் விரால் மீன் சாப்பிடக் கட்டுப்படியாகாது. இத வித்து என்ட கடன் அடச்சிட்டு, இரவைக்கிச் சுண்டலோட சோறு திண்டுட்டுப் படுப்பன்... பிச்சை எடுக்கிற இந்த ஆள் ராச்சாப்பாட்டுக்குக் கூட விரால் மீன் பொரியல்... என்டால், இதென்ன புதினமான கணக்கு.. ஆரு போட்ட கணக்கு...? விளங்குதா கணக்குப் பாடம் எடுக்கிற மாஸ்டரே...ய்...?

அவரது ஒவ்வொரு கதைகளையும் வாசிக்கும் போது வட்டார மொழி நடையும் காட்சிகளும்
 நம்மயே கதை மாந்தர்களாக மாற்றுகின்றது.

தீரனின் ஏனைய __
வல்லமை தாராயோ... (சிறுகதைத் தொகுதி-2000

நட்டுமை (நாவல்) -2009 - சுந்தர ராமசாமி 75 பவளவிழா போட்டியில் முதல் பரிசு பெற்றது.

வெள்ளி விரல் (சிறுகதைத் தொகுதி)-2011- தேசிய, மாகாண சாகித்திய விருதுகள்.

கொல்வதெழுதுதல்.90 (நாவல்)-2013 - தமிழ் நாடு அரசின் ஆயிரம் பிரதிகளுக்கான நூலக ஆணை பெற்றது.

அபாயா என் கறுப்பு வானம் (கவிதைகள்-மின்நூலி 2015 அழித்தாயே ஆழித்தாயே...
(சுனாமி கடற்கோள் காவியம்) 2017

குறு-நெல் (குறும்பாக்களி2017)

No comments:

Post a Comment