Friday, October 27, 2023

ஒய்த்தாமாமா-தீரதம்- சிறுகதை -1

  ஒய்த்தா மாமா.

 

       எனக்குப் பத்து வயதிருக்கும் போது அது நடந்தது..... ஒய்த்தாமாமாவைக் கண்டாலே எனக்குப் பயம். அவர் சிறுவர்களின் குஞ்சாமணியை தயைதாட்சண்யமின்றி அறுத்தெறிகிறவர் என்று கேள்விப்பட்டதிலிருந்து இந்தப்பயம். இது நிச்சயமாக நமக்கும் எப்போதோ நடக்கத்தான் போகிறதென்று உணர்ந்ததிலிருந்து அவரைக் கண்டாலே குலை நடுக்கம்தான்.. அப்படி அவர் குஞ்சாமணியை அறுத்தெறிகிறவர் என்றால் நம்மட வாப்பா பெரியப்பா பெரிய ஆம்பிள்ளைகள் எல்லாம் எப்படி ஒண்டுக்குப் போகிறார்கள் என்று கேள்வி மண்டையைக் குடையும்..  பள்ளிக்கூடம் செல்லும் வழியில் ஒய்த்தாமாமா தென்பட்டால் பதறிப் போய் வேறு வழியாக ஓட்டம் பிடிப்பேன்..  வீட்டருகே விளையாடிக் கொண்டிருக்கும் போது கண்டாலோ துடித்துப் பதைத்து உள்ளறைக்கு ஓடி விடுவேன்..

 

      எங்கள் வீட்டில் வேலையாளாக இரிந்த கலந்தன்காக்காதான் ஒய்த்தா மாமாவைப் பற்றி கதைகதையாகச் சொல்வான்.. சில பிள்ளைகளின் குஞ்சாமணியை நுனியில் கொஞ்சமாக அறுப்பார் என்றும்.. அறுத்த குஞ்சு பல்லியின் வால் துடிக்கிறாப் போல்  துடிக்குமென்றும்..அதுல சைத்தான் வந்து நிற்குமென்றும.. சில துடுக்குப் பிள்ளைகளின் குஞ்சாமணியை குலையோடு அறுத்து அதனைக் கடலில் கொண்டு போய் வீசிவிடுவார் என்றும்.. அபபடிப்பட்ட பிள்ளைகள்  இனிச் சூப்பேயவும் முடியாதென்றும் அவன் சொன்ன கதைகள் பல... அதிலிருந்து நானும் எனது துடுக்குத்தனத்தையெல்லாம் அடக்கி கப்சிப்பென்றிருப்பேன்...

 

      ஆயினும் ஒருநாள் மூன்றாம்தவணைப் பரீட்சை சித்தியடைந்து மிகச் சந்தோசமாக ரிப்போர்ட்டை வாப்பாவிடம் காட்டியபோதுää அவர் மகிழ்ந்து போய் ~~நாலாம் வகுப்புப் பாசாய்ட்டான் மகன்... இனி நீ அஞ்சாம் வகுப்பா..? ...பெரிய ஆள்... உனக்கு வார வெள்ளிக்கிளம சுன்னத்து வெய்க்கப் போறம்டா மகனே....|| என்று என் சம்மதமில்லாமலேயே திடீரென்று அறிவித்தார். கூட நின்றிருந்த கலந்தன்காக்கா வாப்பாவுக்குத் தெரியாமல் என்னிடம் தன் விரலைக் காட்டி கத்தியால் கரகரவென அறுத்தெறிவது போல் பாவனை காட்டினான்...  நான் பயத்தில் ~~எண்டம்மா...எண்டம்மா...|| என்ற கத்திக் கொண்டே உம்மாவிடம் ஓடி அவளைக் கட்டிப்பிடித்துக் கொண்டேன்... உம்மா சிரித்து... ~~பயப்புடாதேடா தம்பி...அது எல்லாருக்கும் செய்றதுதான்.. அபபிடியெல்லாம் நோகாது...சும்மா கடியன் கடிச்சாப்பல கொஞ்ச நேரம் கடுக்கும்...மறுகாச் செரி...|| என்று சொல்லிச் சிரித்தாள்...

 

      எனக்கு ஒரே குழப்பமாகிப் போய்விட்டது.. என் அங்க இழப்பில் அவர்களுக்கென்ன சந்தோஷம் என்று புரியவில்லை.  முதல் ஆளாக வகுப்பேறிய சந்தோஷமும் போய்விட்டது.. எல்லோர் மீதும் கோபித்துக் கொண்டு படுத்துவிட்டேன்..  மாலையில் உம்மா என்னை எழுப்பி  தேறுதல் சொல்லி சாப்பிட வைத்தாள்.. வாப்பா வந்து..~~என்னடா தம்பி பயந்துட்டியா.. பயப்புடாதே.. எல்லாருக்கும் வெய்க்கிறதுதானே.. எனக்கிம் உண்ர வயதில வெச்சதான்.. அந்த நேரம் கய்ட்டம்...ப்ப எல்லாம் லேசி..! ஒண்டுக்கும் .பயப்புடாத...|| என்றார்..

 

      நான் பயத்தடன் ~~ எனக்கி முன்ன பொறந்த லாத்தாவுக்கு வெய்க்காம எனக்கேன் வாப்பா வெய்க்கிறீங்க.. மொதல்ல அவளுக்கு வெய்ங்க...|| என்றேன்.. அதைக் கேட்டு எல்லோரும் கலகலகவென்று சிரித்தார்கள்.. கலந்தன்காக்கா எட்டிப் பார்த்து...~~உனக்கிட்டதானே குஞ்சாமணி இருக்கி...லாத்தாக்கிட்ட அது ல்லியே....|| என்று சிரித்து...மறுபடி விரலை வெட்டிக் காட்டினான்... எனது இந்தக் கேள்வி அல்லசல் முழுவதும் பெண்கள் மத்தியில் பரவி... போறவாற பெண்கள் சிறுமிகள் எல்லோரும் என்னைப் பார்த்துச் சிரித்தார்கள்... நான் பயத்தடனும் ஏக குழப்பத்தடனும் வீட்டு தொங்கல் அறைக்குள் ஒழித்திருந்தேன்..

 

      அன்று பின்னேரம் சுன்னத்துக் கலியாணம் என்று கார்ட்டெல்லாம் அடித்து வந்தாயிற்று..

~~ எல்லாம்வல்ல இறைவன் திருவருளால்... நிகழும் ஹிஜ்ரி 1412 ஸவ்வால் மாதம் பிறை 12க்குச் சரியாகிய 1969ம் ஆண்டு பங்குனி மாதம் 23ம் திகதி பி.ப.4.00 மணியளவில் எமது திருநிறைச் செல்வன் அ.ற. முகம்மது றெஸ்வின்  அவர்களுக்கு விருத்தசேதனம் செய்யப் பெரியோர்கள் நிச்சயித்திருப்பதால் அன்று நிகழும் பகற்போசனத்திலும் அன்று மாலை நிகழவுள்ள வைபவத்திலும் தாங்கள் குடும்ப சகிதம் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.. இவ்வண்ணம் மீ.மு. அப்துல றகீம் முதலாளியும் பாரியாரும்.......|| வாசிக்க வாசிக்க ஆனந்தமாயிருந்தாலும் வருவோர் போவோரெல்லாம் மாப்பிள்ள மாப்பிள்ள என்ற கூப்பிட்டுக் கூப்பிட்டு அன்பு காட்டியதாலும்.. எராளமான அன்பளிப்புக்கள் கிடைத்துக் கொண்டிருந்ததாலும்  ஒய்த்தா மாமா மீதான பயம் சற்றுக் குறைந்தது... இருந்தாலும்.....  கலந்தன்காக்கா  எங்கள் வீட்டிலிருந்த ஒரு பெரிய அருவாக்கத்தியை எடுத்து என் கண்ணில்படும்படியாக ஒழித்து வைத்திருந்தான்.. அடிக்கடி அமை எடுத்து தீட்டிக் கொண்டுமிருந்தான்.. அக்கத்தியையம் என்னையும் பார்த்து அறுத்தறுத்துக் காட்டி என் பயத்தை சற்றும் குறையவிடாமல் அதிகரித்துக் கொண்டேயிருந்தான்....

 

      வெள்ளிக்கிழமைக்கு இன்னம் நான்கு நாட்கள்தாம் இருந்தன.. வாப்பா பென்னம்பெரிய ஒரு மாட்டை அறுத்து தானம் கொடுத்தார்.. வீடெல்லாம் திருத்தினார்கள்.. புது மை பூசி கதவெல்லாம் பொலிஸ் மணத்தது.. தென்னங்குருத்தோலைகளால் அலங்காரம் செய்து நிலைப்படிகளில் தொங்கின... வாசலில் பெரிய பந்தல் இட்டு சீலையால் மறைத்து அழகழகாக சோடனைத்தாள்ககளால் அலங்கரித்தார்கள்.. தென்னம்பாளையின் குருத்துகளில் வண்ணவண்ண அலங்காரங்கள்...ஆறு பெரிய டியுப் லைற்றுகள்... பத்துக் குண்டு பல்புகள்  கலர்கலராய் உமிழ்ந்து கண்ணைப் பறித்தன... ஷ்பீக்கர் கொண்டு வரப் போயிருந்தார்கள்.. பொல்லடி அடிக்கவும்..குருடி கவி பாடவும்.  சானாப் புலவன் வாழ்த்துப் பாடவும்.. போட்டோக்கள் பிடிக்கவும்..... ஏற்பாடுகள் நடந்தன..

 

      வாப்பாவின் தங்கச்சிமார்..மாமிமார் பொண்டுகள் கூட்டி வந்தார்கள். என்னை அலங்கரிக்கப்பட்ட கதிரையில் அமர வைத்து...பூக்கள் சொரிந்து...குரவையிட்டு...பகல்வர்த்தி சக்கரம் கொளுத்தி...பால்பழம் தந்து...பரிசுகள்...காசுகள்...துணிமணிகள்....உண்மையில் நான் பெரிய மாப்பிள்ளையேதானா..? வந்தோருக்கு உபசாரங்கள்...அதற்குதவியாக என் உம்மாவின் உறவினப்பட்டாளங்கள்...எப்போது பார்த்தாலும் கேக்..வாழைப்பழம்...துதல்..மஸ்கற்...கோப்பி..டீ..என்று பான வகைகள்...பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தார்கள்....வீடெல்லாம் கலகலப்புக்குப் பஞ்சமில்லை...

 

      வெள்ளிக்கிழமை விடிந்தது.. கண்விழித்ததுமே...வீடெல்லாம் பரபரப்பாக இயங்கியது... ஓ... இண்றைக்கு அல்லவா சுன்னத்து....? என்ற நினைப்பு வந்ததுமே பயந்து போய் சட்டென்று எழுந்து விட்டேன்... உம்மா வந்து என்னை அணைத்துக் கொண்டாள்... ~~ண்டைக்கித்தான் என்ட பள்ள பெரிய எளந்தாரியா ஆகப் போறான்..டோ..ய்..|| என்ற சிரித்தாள்.. மாப் பிட்டும் காடைக்குருவிக் கறியும் தந்து சாப்பிடச் செய்தாள்... என்னைக் கண்டதும் கலந்தன் காக்கா சிரித்து... ~~ஙா...மாப்பிள்ள எழும்பிட்டியா... ண்டைக்கி ஒரு ஆள்ர குஞ்சி அறுந்து தொங்கப் போகுது..பா..ர்....||   என்று என் கண்ணெதிரேயே அந்;த அருவாக்கத்தியை எடுத்து  முற்றத்து முண்டாக்கல்லில் கூர் தீட்டித் தீட்டி என்னைப் பார்த்துச் சிரித்தான்.. நான் வாய்குளறிப் போய் உம்மாவின் பின்னால் நின்று அழத்தொடங்pகினேன்... உம்மா சிரித்து...~~டேய்....கலந்தா..! .பிள்ளயப் போட்டு பயமுளுத்தாட்டாதடா... || என்று அவனுக்கு ஏசினாள்.. வாப்பா வந்துää  ~~தம்பி...அவண்ட கதய உட்டுட்டு..நீ வடிவாக் குளிச்சிட்டு வாடாம்பி...பள்ளியடிக்கிப் போய் காணிக்க போட்டுட்டு வருவம்...|| என்றார்...

 

      கலந்தன் காக்காவும் மீரானும் எனக்குக் கிணற்றடியில் வைத்து தண்ணீர் ஊற்றி வார்த்தார்கள்.. அந்நேரம் கலந்தன்காக்கா என் அதைப் பிடித்துப் பார்;த்து ~~ண்டையோட இது அறுந்து போகும்...வெறும் மொட்டையா இரிக்கிம்... நா ஒய்த்தமாமாட்ட செல்லிட்டன்.. வேரு செரியான துண்டாக்காரன்.. குலையோட அறு..ண்டு செல்லிரிக்கன்...|| என்றான்.. நான் பயத்தால் விறைத்துப் போனேன். உடனே மீரான் ~~டெ..கலந்தா..புள்ளயப் பயம் காட்டாதடா.  அதெல்லாம்   சும்மா   செல்றான்டா  தம்பி.. .நீ ஒ;ண்டுக்கும் பயப்புடாத....|| என்று ஆறுதலளித்தாலும் மீரானும் பொய்தான் சொல்கிறானோ என்று மேலும் பயமாகி விட்டது...

 

      குளித்து முடிந்ததும் எனக்கு புது உடுப்பு அணிவித்தார்கள்.. வாழ்வில் முதற்தடவையாக லோங்ஸ் அணிந்தேன்... புது உடுப்பும்..காலில் சப்பாத்தும் அணிந்து உண்மையில் பெரிய ஆள் போலத்தானிருந்தேன்... என்னைக்கண்ட வகுப்புக் கூட்டாளிமாரும் அல்அசலில் வசிக்கிற சிறுமிகளும் ஆச்சரியம் ததும்ப என்னைப் பார்ப்பதும் கிசுகிசுப்பதுமாக இரு;ந்தனர்.. எனக்குப் பெருமையாக இருந்தாலும் மாலை நடக்கவிருக்கும் ஒய்த்தா மாமாவின் அறுப்பை  எண்ணி எண்ணி பயந்துகொண்டுமிருந்தேன்...

 

      மாலை அஷர் தொழுகை முடிந்த கையோடு  பரபரப்பு ஆரம்பமாகி விட்டது... ஒய்த்தா மாமா வந்துவிட்டார்.. நான் பயத்தால் விறைத்துப் போய் உம்மாவிடம் போய் ஒட்டிக் கொண்டேன்... உம்மா சற்றுக் கவலையாக.... ~~ஞ்சங்க..புள்ள ஒரமாப் பயப்புடுறான்.. அவர மாமாட்டச் சொல்லி கொஞ்சம் ஊதிப்பாருங்க.....|| என்றதும் வாப்பா வந்து என்னிடம் ~~ஏன்டா மகன் பயப்பர்ராய்..? வா ..வா.. மாமா கொஞ்சம் ஊதிப்பாக்கட்டும்...வா...| என்று என்னைப் பலவந்தமாக இழுத்துக் கொண்டு ஒய்த்தாமாமாவிட்ம கொண்டு வந்தார்... ~~மாமா...புள்ள கொஞ்சம் பயந்திரிக்கான்.. கொஞ்சம் ஊதிப்பாருங்க...|| என்றதும்- ஒய்த்தா மாமா என்னைப் பார்த்தார்... அவரது கண்களில் ஒன்று மாறுகண்ணாக இருந்தது... ~~தம்பி...நீதானா.. மாப்பிள்ள...சரிசரி..வா..வா...ஒண்டுக்கும் பயப்புடாத...சும்டமா கொஞ்சத்த நோண்டிவிடுவன்... ப்ப வா..ஊதிப்பாப்பம்....|| என்று சொல்லி என்னை அருகமர்த்தி அரபு பாஸையால் என்ன்னவோவெல்லாம் ஓதி நெஞ்சில் ஊதி விட்டார்.. கைச்சந்தில் ஒரு சின்ன வெள்ளைச் சீலையில் ஒருருபாய் நாணயக்குற்றியை முடிச்சிட்டுக் கட்டினார்.. பின் என் நெஞ்சிலும்  முகத்திலும் மெதுவாக தண்ணீரினால் ஓங்கியடித்தார்... ~~ஙா..செரிநெசரி.. அ.. இனிப்பயப்படமாட்டாரு மாப்பிள்ள...உள்ளுக்க கூட்டிட்டுப் போய் உடுப்ப மாத்திக் கூட்டிட்டு வாங்க...|| என்றார்..

 

      கலந்தன்காக்கா அநதப் பெரிய அருவாக்கத்தியக் கொண்டு போய் ஒய்த்தாமாமவினருகே வைத்துவிட்டு என்னை நோக்கிச் சிரித்தான்... ~~வேல செரி..|| என்றான்.  நான் வெருண்டு போய்..கத்தியழ ஆரம்பித்தேன்...   . இனி நடப்பதெதுவும்; என் வசத்திலில்லை என்று புரிந்துவிட்டடது... நான் அணிந்திருந்த லோங்ஸைக்யும் சேர்ட்டையும் கழற்றிவிட்டார்கள்.. வெறும் ஒரு வெள்ளைத் துண்டை உடுத்துவிட்டார்கள்....

 

       கலந்தன் காக்காவும் மீரானும் என் தாய்மாமாவும் சேர்ந்து என்னைப் பலவந்தமாக ஒய்த்தாமாமா வின் அருகே கொண்டு சென்றனர்... . ஒரு மர உரலுக்குப் பக்கத்தில்  கீழே அமர்ந்திருந்த ஒய்த்தா மாமாவின் பக்கத்தே ஒரு தட்டு நிறைய மணல் இருந்தது ..சின்னஞ்சிறிய கத்திகளும்...கூடவே.. பயமுறுத்தும் ஒரு வகை மணமும்...  உத்தரத்திலிருந்து நூல் தொங்கியது..அதில் ஒரு பெரிய வெள்ளைச்சீலை கட்டி பாயின் மீது படிந்து தொங்கியது.... ஒய்த்தாமாமா ~~கத்தாத மருமகனே...ஒரு அஞ்சி நிமிசத்தில வேல முடிஞ்சிரும்..|| என்று சொன்னார்..  நான் உதறிக் கத்தி ஆர்ப்பரித்தேன்.. என் கூச்சலை யாரும் பொருட்படுத்தவில்லை..

 

      ஒய்த்தாமாமா எனக்கு விளங்காதபடி கலந்தன்காக்காவிடம் ஏதோ சைகை செய்தது போலிருந்தது. அவரின் எதிரே உரலில் என்னைப் பலவந்தமாக  இருப்பாட்டினார்கள். எனக்குப் பின்னாலிருந்த கலந்தன்காக்கா நான்உடுத்தியிருந்த வெள்ளைத் துண்டை சட்டென உருவிவிட்டான்... நான் நிர்வானமாக மகா அவமானத்துடனும் ஆத்ததிரத்துடனும் அவனின் கையைக் கடித்தேன்.. ஆனால்.. அவன் என்புறத் தொடைகளுக்கள்  அவனது கைகளைச் செலுத்தி என் கைகளையும் சேர்த்து ஒரே கொடுங்கைப்பிடியாகப் பிடித்துக் கொண்டான்... மீரான் என் தலையை ஒரு பக்கமாகத் திருப்பிப் பிடித்துக் கொண்டான்... என்னால் அசையவே முடியவில்லை... ஒரு சற்றும் திமிறவும் முடியவில்லை... நான் என்வசமிழந்து  கண்களை மூடிக் கொண்டேன்... ஒய்த்தாமாமா மிக இலகுவாக என் குஞ்சாமணியைப் பிடித்........ வேறு ஒன்றும் என் நினைவிலில்லை.................

 

      எனக்கு ஞாபகம் வந்து விழித்துப் பார்த்தபோதுää பாயில் படுக்க வைக்கப்பட்டிருந்தேன்... உம்மாவின் முகம் கண்ணீருடன் தெரிந்தது... வாப்பா சிரித்தபடி என்னிடம்...~~எல்லாம் முடிஞ்சி மகன்... நோகுதா..?|| என்று கேட்டார்... கலந்தன்காக்காவும் மீரானும் புன்னகைத்தனர்... ~~சின்னத்து வெச்சாச்சேய்...|| என்றனர்...  எனக்குத் துளி கூட வலிக்கவில்லை... நான் தயக்கமாக என்னை மூடியிருந்த வெள்ளைச்சீலையைச் சற்று உயர்த்திப் பார்த்தேன்... எதுவும் தெரியவில்லை... ஆயினும் என் குஞ்சாமணியைச் சுற்றி சீலையால் கட்டுப் போடப்பட்டிருந்தது..ஓ..இருக்கிறது. நான் வெட்கத்துடன்..ஒய்த்தாமாமாவைப் பார்த்தேன்... ஒய்த்தாமாமா என்னைப் பார்த்து ~~எ;ன்ன மருமகனே... ஒரு சின்னத்துண்டை நோண்டிவிட்டேன்.... எப்பிடி..நோகிச்சா...ல்லியே... வாப்பாட்டச் சொல்லி எனக்கி காணிக்கை கூடயா வாங்கித் தா...|| என்று சிரித்தார்....அதன் பிறகு எனக்கு ஒய்த்தாமாமாக்களைக் கண்டால் ஒரு பயமும் இல்லை....(2012)

 

 

Friday, January 28, 2022

உக்குவளை அக்ரம்


 June 14, 2021

தீரதம்.... 
உக்குவளை அக்ரம்

0 


தேடித் தீராவெளி நோக்கி சிறகடிக்கும் ஒரு மின்மினி பூச்சியின்..(ஆர்.எம். நெளஷாத்தின் )பத்து கதைகளடங்கிய சிறுகதைத்தொகுதிதீரதம் .செளுமையும் கனதியும் ஆழமும் விரிவும் நிறைந்தது.பிரமிப்பிலும் ஆச்சரியத்துக்குள்ளும் நம்மை ஆழ்த்தும் கதை சொல்லி.


மறைந்த மாத்தளை எழுத்தாளரான மர்ஹும் பண்ணாமத்துக்கவிராயர் அடிக்கடி உச்சரிக்கும் நாமம்.அவர் இவ்வாறு ஞாபகப்படுத்துவார் ' கிழக்கு மாகாணத்தில் நெளஷாட் என்றொரு எழுத்தாளர் இருக்கிறார் புதிய களத்தில் செளுமைமிக்க கதைகளை படைத்திருக்கிறார்.அவரால் எழுதப்பட்ட ஒவ்வொரு கதையும் ஏதொவோர் பரிசை வென்றெடுத்த கதைகளாகவே பரிமாணம் கொள்கிறது.ஒவ்வொரு எழுத்தாளனும் தவிர்க்காது வாசிக்க வேண்டிய முக்கியப்படைப்பாளி.நீங்களும் கட்டாயம் அவரின் படைப்புகளை தேடி வாசியுங்கள் அவரின் படைப்புகளிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய விடயங்கள் உண்டு' என்பார் .இவ் வழிகாட்டலும் போதனையும் அவர் எழுத்து மீதான பேராவல் கொள்ள தூண்டலாக அமைந்திருந்தது.இவ்வாறு ஒவ்வொரு எழுத்தாளனினதும் அவதானத்திற்கும் கண்ணியத்திற்குரிய படைப்பாளியாக முத்திரையிடப்பட்டவரே ஆர்.எம்.நெளஷாத் என்ற சிறுகதையாளன்.


அவரின் கதைகள் அதன் வெற்றி பற்றி ஓரிடத்தில் இவ்வாறு பதிகிறார். ' அறியப்படாத தளங்களில் இருந்தும் அறியப்பட்ட. தளங்களில் உள்ள.தெரியப்படாத பக்கங்கள் பற்றியும் கூடுதலாகச் சிந்திக்கிறேன்.முதலில் நுகர்பவரை கதைக்குள்ளே வரவைக்கிறேன்அப்புறம் அவர் என்னை வாங்காமல் போக முடியாதபடி செய்து விடுவது என் கதைத்தந்திரம்.இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. எல்லோரும் ஒரே விதமாக 'கதை'த்துக்கொண்டிருப்பதில் எனக்கு சம்மதமில்லை.' என்கிறார்.இங்கிருந்தே மாற்றமும் படைப்பும் திறன் கொள்கிறது.


சிலர் கதைகளை தயாரிக்கிறார்கள் கண்ணைக்கவரும் பலவித கலவையின் கூட்டாக..,பலரோ ஆங்காங்கே கண்டு கேள்விப்பட்ட தகவல்களை கொண்டு பத்திக் பூச்சுவேலையாக ஒட்டி ஒப்பேத்துகின்றனர்.இன்னும் சிலரோ பலர் எழுதிய கதைகளை வாசிப்பனுவபத்தில் உள்வாக்கி, தமக்கிசைவான உவப்பான ஒரு கதையாக உருமாற்றம் செய்து வெளிதள்ளுகின்றனர்.

இக் கதை சொல்லி..தம் வாழ்வினில் நடந்தவை.கடந்தவைகள்.தம் வாழும் சூழலில் சமூகத்தில், வாழ்ந்து மறைந்த மூதாதையர்களின் பழம்பெருமைகளை அடிநாதமாக கொண்டு.அவர்களின் வாழ்வாதாரங்கள்.சம்பிரதாயங்கள்.கலைகலாச்சார பண்பாட்டு விழுமியங்களை உள்வாங்கி கிரகித்து அதனை வரிசை கிரமப்படுத்தி, செதுக்கி..செம்மைப்படுத்தி உயரிய கலைப்படைப்பாக, உயிரும் சதையுமான உயிர்ப்போசைமிக்க கதையோட்டமாக, நம்முள் பரவச் செய்து, நம்முள் ஆழப்பதியச் செய்கிறார்

.இவ்வாறான படைப்புத்திறன் காலத்தால் அழியாததாகா..அழிக்கப்படாத கலைப்படைப்புகளாக மனித மனங்களில் ஆழம் கொள்கிறது.

தீரதம் தொகுதியில் பத்துக்கதைகளில் எது சிறந்த கதையென்றால், பத்தும் பத்து தளங்களில் பத்து வெளிகளை நோக்கி பயணித்து நம்மை பிரமிப்பில் ஆழ்த்துவனவாக உள்ளதில் பத்துமே தனக்குரிய கருவில், கதை சொல்லும் பாங்கில் தனித்துவம் மிக்கனவாகவே நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.

கதைக்குள்ளே கதைகளால் மனித மனங்களை ஆழும் கதைசொல்லியாக நம்மில் கம்பீரமாக வீற்றிருக்கும் நாமம். ஆர்.எம்.நெளஷாத் என்பதில் மாற்று கருத்தில்லை என்பேன்.00 

Saturday, June 5, 2021

ஹனீஸ் முகம்மது

'தீரதம்' சிறுகதைத் தொகுதி (2017)

கதை சொல்லி- தீரன். R.M. Nowsaath

0 ஹனீஸ் முஹம்மத்0



இரண்டு மாதங்களிற்கு முன் தோழர் Mohamed Sabry யின் பணிப்பின் பெயரின் தீரன் அவர்களை சந்திக்க அவரது வீடு சென்று அளவளாவ கிடைத்தது. அப்போது அவரின் அன்பின் மிகுதியால் எனக்கு தேசிய, மாகாண சாகித்திய விருதுகள் பெற்ற 'வெள்ளிவிரல்' மற்றும் 'தீரதம்' சிறுகதைத் தொகுதிகளை பரிசளித்தார். அப்போது ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள முடியாமல் போனமை மனவருத்தம் தான்.

அப்போதே வெள்ளி விரல் தொகுதியை வாசித்து முடித்துவிட்டேன் ஆனால் முகப்புத்தகத்தில் கருத்துக்களை பகிர நேரம் கிடைக்கவில்லை. நேற்று தான் தீரதத்தை வரசித்தேன்.

தீரனின் கதைகளை வாசிக்கும்போது எனக்கு பட்டது, கதை எழுதுவதற்கு ஒன்னும் உருட்டி பிரட்டி யோசிக்க தேவையும் இல்லை, புதுசா ஒரு யுக்தி மண்ணாங்கட்டியையும் ஆராய்ச்சி செய்ய தேவையுமில்லை. ஒவ்வொரு நாளும் நம்மை சுற்றி எத்தனையோ சம்பவங்களை மசிரென கடந்து போகிறோம், ஆனால் அவற்றிற்கு ஒவ்வொன்றிலும் மறைக்கப்படும், சொல்ல வேண்டிய கதைகள் இருக்கின்றன என்பதை எனக்கு உணர்த்தியது.


இத்தொகுதி பத்து கதைகள் இருக்கின்றன, அவற்றில் அநேகமானது குறியீடுகளை வைத்து அரசியல் பேசுகின்றன, அணில், காக்காமாரும் தோர்களும், மும்மான்.

அணில் கதை ஒரு தாபாலகத்தில் மேலதிகாரி ஒரு தமிழர், இடையதிகாரி ஒரு இஸ்லாமிர், கடையுழியர் ஒரு சிங்களவர், முக்கியமான பாத்திரத்தில் குறியீடாக அணில், இவர்களுக்கிடையில் நடைபெறும் அரசியல்.

காக்காமாரும் தோர்களும்- வித்தியசமான நடை, அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக கக்கிய வன்ம பத்திரிகை அறிக்கை துணுக்களை வைத்து ஒரு கதையை சொல்லிருக்கிறார்.

மும்மான்- முழுவதும் குறியீட்டுக்கதை, ஒரு காட்டொடு கதை நகர்கிறது, முப்பது வருடகால யுத்தத்தில் சிங்கத்திற்கும் புலிகளுக்குமிடையில் மான்கள் எப்படி வதைக்கப்பட்டது என்றதை மிகவும் சுவாரசியமாக கதை சொல்லியிருக்கிறார்.

ஒய்த்தா மாமா- விருத்த சேதனத்திற்கு பயந்து ஓடி ஒழியும் நினைவுகள்.
கள்ளக்கோழி- மூட நம்பிக்கையால் பிரித்து வைக்கப்படும் இளம் தம்பதியினரை பற்றியது.
பொன்னெழுத்துப் பீங்கான் - இது ஒரு அற்புதமான கதை, அக்காலத்தில் பொக்கிஷமாக பொன்னெழுத்துப் பீங்கானை குறியீடாக மாற்றி தன்னோழுக்கம் பற்றி பேசும் அதே வேளை, போரில் ஒரு அப்பாவி குடும்பஸ்தனின் உயிர்ப்பலியால் அக்குடும்பத்தின் நிலையை பற்றி பேசிகிறது. 
இத்ததைக்கே தனியோரு பதிவை எழுதலாம்.

"லெட்டியால தமுளன்ட கொளப்பமா இரிக்காம்... ண்டைக்கு காவலுக்கு போகணுமா...? ண்டு கேட்டன்... சிரிக்காரு...புலிப்படைய காட்டி சிங்கப்பட பொறுப்பு.. 
சிங்கப்படயக் காட்டியிம் ஆனப்பட பொறுப்புடி புள்ளேய்...

இந்த வரிகளே அக்காலப்பகுதியில் நிலவிய முழு அரசியலையும் பேசுகிறது. 
இது போன்ற சில வரிகள் போதும் சரித்திரம் பேச.

மறிக்கிடா - ஒரு குறியீட்டு கதை, வாசிக்கும் போதே நகச்சுவையும், பாலின உணர்வும் ததும்பும்.
தீரதம்- சூஃபித்துவ நிலை கதை

கபடப் பறவைகள் - ஒரு எழுத்தாளன் மறைந்ததன் பின் 
அவனது ஆத்மா அவரை வீட்டிற்கு வந்து கண்டடையும் காட்சிகள்.

ஆத்துமீன் ஆசை - ஒரு சராசரி குடும்பத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மாத கடைசியில் அவரது மாசமான மனைவின் ஆத்துமின் திங்கும் ஆசையை நிறைவேற்ற சந்தைக்கு சென்று அவமானப்படும் கதைகளம்.

"ந்தா.. விரால் மீனுக்கு வெல கேட்டும் வாங்காம,
அந்தா மரக்கறிப்பக்கம் ஓடுர கணக்கு மாஸ்டருக்கு மட்டுமில்லடா ஆக்களே.. வவ்த்துல புள்ளக்காரிக்கும்.. இந்த விராலப் புடிச்சவனுக்கும், இத வாங்கி விக்கிற எனக்கும்தான் விரால் மீன் சாப்பிடக் கட்டுப்படியாகாது. இத வித்து என்ட கடன் அடச்சிட்டு, இரவைக்கிச் சுண்டலோட சோறு திண்டுட்டுப் படுப்பன்... பிச்சை எடுக்கிற இந்த ஆள் ராச்சாப்பாட்டுக்குக் கூட விரால் மீன் பொரியல்... என்டால், இதென்ன புதினமான கணக்கு.. ஆரு போட்ட கணக்கு...? விளங்குதா கணக்குப் பாடம் எடுக்கிற மாஸ்டரே...ய்...?

அவரது ஒவ்வொரு கதைகளையும் வாசிக்கும் போது வட்டார மொழி நடையும் காட்சிகளும்
 நம்மயே கதை மாந்தர்களாக மாற்றுகின்றது.

தீரனின் ஏனைய __
வல்லமை தாராயோ... (சிறுகதைத் தொகுதி-2000

நட்டுமை (நாவல்) -2009 - சுந்தர ராமசாமி 75 பவளவிழா போட்டியில் முதல் பரிசு பெற்றது.

வெள்ளி விரல் (சிறுகதைத் தொகுதி)-2011- தேசிய, மாகாண சாகித்திய விருதுகள்.

கொல்வதெழுதுதல்.90 (நாவல்)-2013 - தமிழ் நாடு அரசின் ஆயிரம் பிரதிகளுக்கான நூலக ஆணை பெற்றது.

அபாயா என் கறுப்பு வானம் (கவிதைகள்-மின்நூலி 2015 அழித்தாயே ஆழித்தாயே...
(சுனாமி கடற்கோள் காவியம்) 2017

குறு-நெல் (குறும்பாக்களி2017)

Tuesday, June 23, 2020

கிண்ணியா பாயிஸா அலி

Aaliya Aaliya


தீரதம்
கிண்ணியா பாயிஸா அலி  



தீரதம் அருமையான தொகுதி.அதிலும் அந்தக் கபடப் பறவைகள் எத்தனை முறை படித்தாலும் அலு க்காது.நாம் நம்மைப் பற்றி. நம் சொந்தம்..பந்தம் என்று நம்பி கொண்டிருக்கும் அனைவரும்உண்மைக்கு உண்மையாய் என்னவாக அளந்து கணிக்கிரார்கள் என்பதை உணர்ந்து கொள்ள "இறந்து வரவேணும்" என்பதை சொல்லாமல் சொல்லுகிறது கபடப்பறவைகள் சிறுகதை.

இவரின் வெள்ளி விரல், கூட மிகவும் எள்ளல் சுவையோடு சமூகப் பிறழ்வுகள் பற்றிப் பேசி நிற்கும். நட்டுமை நாவல் உண்மையில் ஒரு நல்ல திரைப்படம் பார்த்து முடித்த நிறைவைத் தந்தது.

Friday, June 19, 2020

நோயல் நடேசன்

தீரதம் --ஒரு குறுக்கு வெட்டு முகம் 

நோயல் நடேசன்  

0 



குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டுமென்ற காரணத்தால் நான் எனது மனைவியுடன் இலக்கிய விடயங்கள் பேசுவதில்லை. ஆனால், தொடர்ந்தும் நான் எதனையாவது படித்துவிட்டு, சிரித்தபடியே இருந்தால் “ என்னவென்று…? “ கேட்பாள். அவ்வாறுதான் ஒரு தருணம் மீண்டும் வந்தது, நௌஸாத் எழுதிய தீரதம் படித்துவிட்டும் சிரித்தேன். ‘என்ன விடயம்..? என்று கேட்டபோது, நௌஸாத்தின் கபடப் பறவைகள் கதையைப் பற்றி சுருக்கமாகச் சொன்னேன். இருவரும் சிரித்தோம்.

இந்தக் கதையில் வரும் ஒரு எழுத்தாளன், தனது புத்தகங்களைத்தான் தனது பொக்கிஷமாகச் சொல்லிவிட்டு இறந்துவிடுகிறான். ஆனால், அவனது குடும்பத்தினர் அதற்குள் பணமேதாவது இருக்கிறதா…? எனத் தேடுகிறார்கள். இறந்தவனது நாற்பதாம் நாள் செலவைச் செய்வதற்கு 
அவர்களுக்குப் பணம் தேவைப்படுகிறது.


அந்த எழுத்தாளன் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து அவனது ஆவி வெளியே வந்து வீட்டில் நடப்பதைப் பார்க்கிறது. அவனது நண்பர்கள் மூவர் குந்தியிருந்து இறந்த எழுத்தாளனுக்கு தாங்கள் கதை, கவிதை, என எழுதிக் கொடுத்ததாகவும் பேசிக்கொள்கின்றனர். அதில் ஒருவர், தனது சிபார்சிலேதான் அந்த எழுத்தாளனுக்கு கலாபூஷணம் பட்டம் கிடைத்ததாகவும் பேசிக்கொள்கிறார்.

குடும்பத்தினர் பணத்திற்காக அவனது அறையைத் தேடுகின்றனர். அவன் எழுதியவற்றை ஒழுங்காக வாசிக்க முடியவில்லை என்றும் ஆதங்கப்படுகின்றனர். தனது புத்தகங்களை “ எல்லோருக்கும் ஓசியில் கொடுத்து விட்டு ஒன்றே ஒன்று மிஞ்சியிருந்தது. அது அவனது சாகித்திய விருது பெற்ற கபடப்பறவைகள் கவிதைத் தொகுதி. அதன் மீது அவனது பேரக்குழந்தையொன்று பீ மூத்திரமடித்து நக்கரைத்துக்கொண்டிருந்தது( கால்களை மடித்து பூமியில் பிட்டம் பதிய நடத்தல்..அல்லது இழுபட்டுச் செல்லுதல்) இதற்கு மேலும் என்னால் இதுகளைப் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை.


என் உயிர்ப்பறவை பறந்தபின் வீட்டில் வாழும் கபடப்பறவைகளின் நடத்தைகளைக் கண்டு சகியாமல் வீரெனப்பறந்து என் புதைகுழிக்குள் புகுந்தேன்– என்னை மௌத் ஆக்கியதற்கு மிக்க நன்றி இறைவனே . என்று துதிசெய்து கொண்டு நெடும்தூக்கத்தில் ஆழ்ந்தேன்” என நௌஸாத் அக்கதையை முடிக்கிறார்.

உண்மையில் மற்றவர்களை எள்ளிநகையாடி ஹாஸ்யமாக்குவது நகைச்சுவையல்ல. 
ஆனால், அதனை எவராலும் செய்யமுடியும். புதுமைப்பித்தனிலிருந்து 
அ.முத்துலிங்கத்தின் எழுத்துகள் வரையில் பார்த்திருக்கிறேன்.

தமிழ்த் திரையுலகம் இதற்குச் சிகரம் வைத்ததுபோல் கறுப்பானவர்கள்- கட்டையானவர்கள்- சறுக்கி விழுந்தவர்கள் முதலானோரை நகைச்சுவை பாத்திரமாக்கியது. கவுண்டமணி – செந்தில் அளித்த நகைச்சுவை இதில் மோசமான முன் உதாரணங்கள். உண்மையான நகைச்சுவை ஒருவன் தன்னைத்தானே நகைச்சுவையாக்க வேண்டும். இதையே நௌஸாத் அழகாக செய்திருக்கிறார்.


நான் வாசித்தவர்களில் எஸ். பொ. மற்றும் எஸ். எல் .எம் ஹனிபா போன்றவர்கள் வார்த்தைகளைத் தேர்ந்த சிற்பி, பெண்ணின் சிலையில் மூக்கையோ உதடுகளையோ உளிவைத்து செதுக்குவதுபோல் எழுத்துகளில் புனைவை வைத்துச் செதுக்கும் வித்தகர்கள். நௌஸாத் அப்படியல்ல. இவர் தமிழ் மொழியில் மிகவும் வித்தியாசமாக கதை புனைகிறார். கட்டிடக் கலைஞர் புதிதாக வடிவங்களை சித்திரிப்பது போன்று , ஐரோப்பாவில் அப்படிக் கதை சொல்பவராக காஃகாவைச் சொல்வார்கள்.

முதலாவது கதையில் ஒய்த்தா மாமா, சிறுவர்களின் குஞ்சாமணியை அறுத்தெறிபவர்’ என்ற பந்தியிலிருந்து மிகவும் அழகாகச் சுன்னத்துக்கல்யாணத்திற்கு அழைத்து செல்கிறார்.
 அதேபோல் கள்ளக்கோழியையும் பேத்தியையும் சந்தேகிக்கும் பேரனின் கதை .


மறிக்கிடா, என்ற சிறுகதை மு. தளையசிங்கத்தின் தொழுகை மற்றும் ஜி. நாகராஜனது சிறுகதைகளுடன் ஒப்பீடு செய்யத்தக்கதாயினது அல்லது அவற்றைவிட வீரியமானது .
ஒவ்வொரு கதையும் முத்தானவை. இங்கே ஞானம் ஆசிரியரது முகவுரைபோல் இக் கதைகளைப் பற்றி நான் எழுதுவது நேரவிரயம். கதை ஒன்றை எப்படித் தொடங்கி வாசகரை உள்ளே அழைத்துப்போவது என்பது ஒரு கலை. பல எழுத்தாளர்கள் ரப்பராக இழுப்பார்கள். அரைவாசியில் போய் என்ன அறுப்படா எழுதியிருக்கிறான் என எம்மை அறியாமலே ரப்பரை அறுத்துவிட்டு திரும்பி விடுவோம்.


நௌஸாத், ஒவ்வொரு கதையின் முடிவிலும் முரண்பாட்டையோ அல்லது புதிய அனுபவத்தையோ தந்து நமக்கு இதற்குமேல் எதுவும் சொல்வதற்கில்லை ( Logical exhaustion) என்ற உணர்வோடு முடித்திருக்கிறார்.

சினிமா – முகநூல் – சீரியல் எனப் பல ஊடகங்கள் இருக்கும் இக்காலத்தில் நாம் கதை சொல்லுகிறோம். வாசிக்கும்போது வாசகரைப் பங்குபற்ற வைக்கும் திறன் காட்சி ஊடகங்களுக்கு குறைவு . எம்.ஜி.ஆர்- சரோஜாதேவி போல் தங்களைக் கற்பனை பண்ணும் ரசிகர்கள் இன்னமும் இருக்கலாம் . ஆனால், கதை சொல்லிகளால் கதைகளில் வாசகர்களைப் பங்கு பற்றச்செய்து பயணிக்க வைக்க இலகுவாக முடியும். இதைச் செய்யும் போது கதைகளில் தொய்வேற்படாது கொண்டுவரும் திறமையே இக்காலத்தில் முக்கியமானது. 
அது நௌஸாத்திடம் அதிகமாக உள்ளது

இலங்கையின் ஒரு சிறந்த நாவலாசிரியரை இவரது கொல்வதெழுதல் நாவலைப் படித்த பின்பு இனம் கண்டுகொண்டேன் . தற்போது தீரதத்தில் அவர் சிறந்த சிறுகதையாசிரியராகவும் தெரிந்துகொண்டேன். இந்தத் தொகுப்பில் மிகவும் குறைந்த சிறிய கதைகளே உள்ளன ஆனால், அவை எல்லாம் வித்தியாசமானவை.

மிக அருகில் சென்று மணந்தால் மட்டுமே பெண் கூந்தலில் போட்ட ஷாம்பு மணக்கும். அப்படியிருக்க பாண்டிய மன்னன் மனைவியின் கூந்தலுக்கு மட்டுமல்ல உமாதேவியரின் கூந்தலுக்கும் இயற்கையில் மணமில்லை என்று சாதித்த நக்கீரன் பரம்பரையில் வந்த நான் சொல்ல ஒன்றிருக்கிறது:

எனக்கே தீரதம் என்றால் அர்த்தம் தெரியாது.! படித்தபின் ஊகிக்க முடிகிறது . இது என்ன சாமான் என்று நினைத்தபடி பார்த்துவிட்டு பலகாலம் படிக்கவில்லை. 
நானாக இருந்தால் இந்நூலுக்கு கபடப் பறவைகள் என வைத்திருப்பேன் .

சிறுகதை எழுதத் தொடங்குபவர்கள் வாசிக்கவேண்டிய கதைகள் தீரதத்தில் இடம்பெற்றுள்ளன. அவ்வளவுதான்.
—0—