மும்மான்.
(ரகுமான். பெருமான். முசல்மான்.)
ஒரே ஒரு காட்டில் ஒரேயொரு ராஜா. அது சிங்கராஜா. காடு முழுவதையும் சிங்கம் தன் கட்டுப்பாட்டில வைத்திருந்தது. தன் ஏக இராச்சியத்தில்ää தானே எல்லாவற்றையும் அனுபவித்து வந்தது. தட்டிக் கேட்பார் யார்..? சிங்கம்ää பிடரி மயிர்கள் சிலிர்த்தெழ உறுதிமிக்க தன்னிரு முன்னங்கால்களிலும்ää வாளை ஏந்தி முன்னுயர்த்தி கொடூர விழிகளை உருட்டிää கர்ச்சிக்கும் போது காடே கிடுகிடுத்தது. விலங்கினங்கள் பயத்தில் திடுக்கிட்டு தினம்தினம் செத்தன. ‘ஒரு உறையில் ஒரே வாள். ஒரு காட்டில் ஒரே ராஜா’ என்றும் திட்டமாகக் கர்ச்சித்தது.
சிங்கத்தின் இந்த ஆதிக்க அட்டூழியத்தில்ää கதிகலங்கிப் போன ஏனைய விலங்கினங்கள் கூடி யோசித்தன. வரவர இந்தச் சிங்கத்தின் ஆக்கிரமிப்பையும்ää அட்டூழியத்தையும் தாங்க முடியவில்லை. நாம் வேட்டையாடும் சிறுநிலப் பரப்பிலும் அது தன் ஆதிக்கத்தை விரிவுபடுத்துகிறது. நாம் இப்படியே பொறுத்துக் கொண்டிருந்தால் விரைவில்ää நமது இருப்பே கேள்விக்குரியதாகிவிடும்.. நமக்கு ஒரு துண்டுக் காடாவது கிடைக்கப் போவதில்லை. எப்படியும்ää நமது சிறுகாட்டுப் பரப்பினுள் சிங்கத்தை வரவிடக் கூடாது. ஏன்று முடிவு செய்தன. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை சிங்கத்திடம் எடுத்துச் செ(h)ல்ல ஒரு துர்துக்குழுவையும் தெரிவு செய்தன.
இக்குழுவை சிங்கம் சந்திக்கவே மறுத்துவிட்டது. இவை சிங்கத்தின் குகைவாசலிலää; சத்தியாக்கிரகமும்ää உண்ணாவிரதமுமாகää இருந்து பார்த்தன. ஆனால்ää சிங்கம் மசியவில்லை. மாறாகää தன் குட்டிகனை ஏவிää உண்ணாவிரதிகளை கடித்துக் குதறி அனுப்பியது. “சிங்கத்தோடு பேச்சுவார்த்தை ஏதும் நடத்தி இனி ஒரு பலனுமில்லை. இனி நம்மைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று சொல்லி விட்;டுää கிழட்டுப்பசு உயிரை விட்டது.
சிங்கத்துக்குத் தகுந்த ஒரு பாடம் படிப்பிக்கவே வேண்டும் என்று இரகசியமாகவும்ää திட்டவட்டமாகவும் சில வரிப்புலிகள் தீர்மானித்தன. புரட்சி நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருந்தது. இரண்டாவது பலம்பான்மை நாம்தான். மற்ற விலங்கினங்களை விட நமக்குத்தான்ää போராடக் கூடிய வல்லமையும்ää வேட்டைப் பற்களும்ää கூரிய நகங்களும்ää குரூர நெஞ்சும்ää போராட்டத்தளமும்ää உண்டு. சிங்கத்துக்கு நிகராக வேட்டையாடவும் முடியும். எதிர்க்கவும் முடியும் என்று முடிவு செய்தன.
எனவே முதலில் புலிகள் சிங்கத்தின் அட்டகாசத்தை பக்கத்துப் பெருங்காட்டை ஆளும் காண்டாவிடம் முறையிட்டன.. காண்டா அதைக் கண்டு கொள்ளவேயில்லை.. 1010அது உங்கள் உள்காட்டு விசயம் நான் தலையிடமாட்டேன்__ என்று சொல்லி விட்டது. சிங்கத்துக்கு நல்லபிள்ளையாக நடந்து கொண்டு ஆனால் புலிகளுக்கு இரகசியமாக எலும்புத் துண்டுகளை தும்பிகளிடம் கொடுத்தனுப்பி வானத்திலிருந்து போட்டது. அத்துடன் இரகசியமாக சில புரட்சிப் புலிகளை தன்னிடத்துக்கு வரவழைத்து போர்ப்பயிற்சி அளித்தது.
10இது ஒரு காட்டின் கானக எல்லையை மீறிய செயல்.._ என்று வெகுண்டெழுற்த சிங்கம் காண்டாவின் பருத்த உடல் வலிமை கண்டு கொஞ்சம் பயந்து அடக்கியே கர்ஜித்தது..
தொடர்ந்த சில நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கக்குட்டிகள்ää எல்லைக் காட்டருகில் கொல்லப்பட்டுக் கிடந்தன. இதுகண்டு வெகுண்டெழுந்த சிங்கம்ää வெறிகொண்டுää எல்லை கடந்து உட்புகுந்து கண்ணில் கண்ட விலங்குகளையெல்லாம் வேட்டையாடியது. காடு போர்க்களமானது.
அதேசமயம்ää காட்டில் தாமுண்டு தம் வேலையுண்டு என்று வாழ்ந்திருந்த சில அப்பாவி முசல்மான்களும் கூட பயங்கரமான முறையில் கொல்லப்பட்டு எல்லைப்புறத்தில் விசிறப்பட்டுக் கிடந்தன. “இது சிங்கத்தின் உச்சக்கட்ட வெறித்தனம்.” என்று வரிப்புலிகள் அறிவிக்க “இல்லை இது வரிப்புலியின் குருரக் கொலை… ” என்று சிங்கமும் குற்றம் சாட்டியது.
இடையில் அகப்பட்டுக் கொண்ட முசல்மான்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவை வேட்டைப்பற்களும்ää கூரிய நகங்களுமற்று இருந்ததால்ää வேட்டையாடப்படும் விலங்குகளாகவே இருந்து வந்தன. சிங்கத்தின் கர்ச்சிப்பிலும்ää புலியின் உறுமலிலும்ää தினம் தினம் தம்மை இழந்து வந்தன. தாம் அநாவசியமாக இந்;த ஆதிக்கச் சண்டையில் மாட்டுப் பட்டதென்ன.. ஏன்.. என்றெல்லாம் யோசிக்கத் திராணியற்று பயத்துடன் அங்குமிங்கும்ää அகதிமான்களாய் அலைந்து திரியத் தொடங்கின. போராட்ட விலங்குகளின் இனவெறிக் கூச்சலில்ää முசல்மான்களின் முனகல் எவர் காதிலும் விழவில்லை.
விலங்கினங்களின் அநியாய அழிவைத் தடுக்கவும்ää தான் இந்தப் போரில்ää ஒரு அரசியல் இலாபம் பெறவும்ää வலிமை பெற்றுவரும் வரிப் புலிகளை ஒரு மட்டம் தட்டவும் காண்டா திடீரெனத் தீர்மானித்தது. ; இதில் இனி நேரடியாக களமிறங்கத் தீர்மானித்தது. “போரை நிறுத்துங்கள்.!” என்று பெருங்குரலில் கத்தியது. “இல்லாவிட்டால் எனது கரும்பூனைப்படையை அனுப்புவேன்.” என்று இரு தரப்பாரையும் அச்சுறுத்தியது.
அதன் அனுசரனையின் பேரில்ää சிங்கம்ää புலியுடன் பேச்சுவார்த்தை நடத்த இணங்கியது. “அதிகாரப் பகிர்வுக்கு முன்னர் அமைதியை ஏற்படுத்துங்கள்” என்று சிங்கம்ää காண்டாவிடம் கூறியது. “இரண்டும் ஒரே சமயத்தில் நடக்கும்” என்று உறுதியளித்த காண்டா உபகண்டம் முழுக்க நிறுத்தி வைத்திருந்த வலிமைமிக்கää தன் கரும்பூனைப் படைகளைக் களத்தில் இறக்கியது. கரும்பூனைப்படைகளுக்குää அமைதிகாக்கச் சொல்லி ஆணையிட்டது.
ஆனால் எதிர்பார்த்தபடி ஏதும் நடக்கவில்லை. அமைதி காக்கவந்த கரும்;பூனைகளால்ää அமைதிகாக்க முடியவில்லை. விரைவிலேயேää புலிகளுக்கும் கரும்ப10னைப்படைகளுக்கும் போர் தொடங்கிவிட்டது. காட்டுக்குள் உக்கிர யுத்தம் வெடிக்க--கொஞ்சம் நிம்மதியாயிருந்த முசல்மான்களுக்கு மீண்டும் கிலி பிடித்துக் கொண்டது. இரண்டுக்கும் நடுவில் அகப்பட்டு முசல்மான்கள் மீண்டும் கொல்லப்பட்டன.. சிங்கமும் முசல்மான்களைத் தந்திரமாக கைவிட்டுவிட்டது..
அவை இருக்கவும் புலம்பெயரவும் இருவழியும் ஆபத்தாகி இக்காட்டுக்குள்ளேயே கிடந்து வாழ்ந்து யுத்தத்தில் அழிய ஆரம்பித்தன. இதனையே நிலையான வாழ்வாகக் கொண்டன. சிங்கத்தின் காட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த முசல்மான்களைச் சிங்கம் சந்தேகக் கண் கொண்டு பார்த்தது. 10நீங்கள் மான் தோல் போர்த்திய புலிகளா..|’ என்று சிலசமயம் குதறியும் பார்த்தது. புலிக்கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ்ந்த முசல்மான்களைää 10நீங்கள் மான் தோல் போர்த்திய சிங்கங்கள் என்று புலி சந்தேகித்து சில முசல்மான்களை கொன்று தோலுரித்துப் பார்த்தது.
அது போதாதென்று கரும்பூனைப்படைகளும்ää அதனுடன் ஒட்டிக் கொண்டிருந்த சிலகழுதைப் புலிகளும் கூட தம் பாட்டுக்கு முசல்மான்களை காரணகாரியம் ஏதுமின்றியே வேட்டையாடத் தொடங்கின.. முசல்மான்கள் முப்பக்க நெருக்குவாரத்தில் சிக்குப்பட்டுச் சீரழிந்தன. நிரந்தரமாக மரணபீதி ஆரம்பித்து விட்டது. காட்டில்ää சும்மா மேய்ந்து கொண்டிருந்த நம்மை யார் கொல்கிறார்கள்.. ஏன் கொல்கிறார்கள்.... உண்மையில்ää நாம் காடு கேட்கவுமில்லை.. காட்டைப் பிரித்துக் கேட்பவர்களுக்கு இடைஞ்சலாய் இருந்ததுமில்லை... ஆயினும் நமக்கு இந்தக் கதி ஏனோ..
இந்நிர்க்கதி நிலையை யோசித்த முசல்மான்கள் தனிவழி செல்லத் தீர்மானித்து கஸ்தூரிமானின் தலைமையில் ஒரு மரத்தின் கீழ் ஒன்று கூடின. காட்டுக்கு உண்மையான ராஜா யார்..? சிங்கமா..? புலியா..? காண்டாவா...?.. முத்தரப்பையும் சந்தித்துத் தமது அவல நிலையை எடுத்துச் சொல்லத் தீர்மானித்தன.. முத்தரப்பும் முசல்மான்களின் கதையைக் கேட்டு ஆவண செய்கிறோம் என்று கூறி வழியனுப்பி விட்டு கோரிக்கையை வரலாற்றுக் குப்பைத்தொட்டிக்குள் எறிந்தன. முசல்மான்களுக்கு கிலி பிடித்தாட்டியது.
திடீரென ஒரு நாள்ää நூற்றுக் கணக்கான முசல்மான்களின் உயிரற்ற உடல்கள் குதறப்பட்டுக் காடெங்கும் சிதறிக் கிடந்தன. மறுபடியும்ää இது புலிகளின் இரத்த வெறி என்று சிங்கங்களும்ää இது சிங்கத்தின் பிரித்தாளும் தந்திரம் அல்லது கரும்”னைப் படையும்; அதனுடன் சேர்ந்து விளையாடும் குள்ளநரிக் கூட்டமும் மற்றும் கழுதைப் புலிகளும் பார்;க்கின்ற வேலை என்று வரிப்புலிகளும்; மாறிமாறிப் பழி சொல்லி யுத்த மூர்க்கமுற்றன.
இன்னொரு நாள்ää வரிப்புலிகள் மூன்றே நிமிசத்தில் வாழிடங்களை விட்;டும் முசல்மான்களைப் பலவந்தமாக ; வெளியேற்றின. இப்போதுää வரிப்புலிக்கட்டுப்பாட்டுப் பகுதி தனிஇனநிலமாக இருந்தது.
மற்றுமொரு நாள் முசல்மான்களின் தலைமையான கஸ்தூரிமான் நடுக் கானகத்தில் வைத்து வெகு சூட்சுமமான முறையில் கொல்லப்பட்டுவிட்டது.. தலைமையையும் இழந்த முசல்மான்களின் நிலை பற்றிக் கவலைப்பட யாரும் இருக்கவில்லை.
இந்த வேட்டைப் பிராணிகளின் மத்தியில்ää எமது தனித்துவத் தலைமையும் இழந்து கூரிய நகம் மற்றும் வேட்டைப் பற்கள் முதலான ஆயுதங்களும் இன்றி சாதுவாக இக்காட்டிலிருப்பது எவ்வளவு ஆபத்தானது.. தாமும் வேட்டைப்பற்களும்ää கூரிய நகங்களும் கொண்ட ஆயுதப் பிராணிகளாhக மாற முடிவு செய்தன. பலம் கொண்டு பாய்ந்து கர்ச்சித்துää அல்லது பதுங்கி உறுமிää சிங்கத்தையும்ää புலிகளையும் கரும்”னைகளையும் தாக்குதல் வேண்டும். ஆயின்ää சாதுவான முசல்மான்கள் எப்படி சிங்கமாக மாற முடியும்..? அல்லது புலியாக மாற முடியும்..? இயல்பை மாற்றுதல் சாத்திமா..? உருவைத்தான் ஆக்குதல் சாத்தியமா..? அதுவும் இச்சிறுகாட்டினுள் இருந்து கொண்டு..?
எவ்வழிகளும் சாத்தியமாகாத நிலையில்ää இறுதியில் முசல்மான்கள் தம் பிரச்சினையை மான்களுக்குப் பிணை நின்ற கருணையே உருவான நம் பெருமான் ஊடாக தம்மைப் படைத்த வல்லபெரிய ரகுமானிடம்; கொண்டு செல்லத் தீர்மானித்தன. யாகங்கள் பல செய்து அங்கிருந்த பெரும் பரிந்துரைக்கதிகாரியான பெருமானைச் சரணடைந்து புகழ்ந்தேற்றி வல்லபெரிய ரகுமான்; சந்நிதியை அடைந்தன. வல்லபெரிய ரகுமானிடம் தம் பிரச்சினையச் சமர்ப்பித்தன. முசல்மான்களைப் படைத்த வல்லபெரிய ரகுமான் சொன்னது_
“ஓ.. முசல்மான்களே.. வேட்டைப் பிராணிகளாக நீங்கள் படைக்கப்படவுமில்லை. நீங்கள் சிங்கங்களாக அல்லது புலிகளாகää அல்லது வேறு எதுவுமாக மாற வேண்டிய அவசியமேயில்லை. முதலில் நீங்கள் உண்மையான முசல்மான்களாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் தலையில் என்ன இருக்கிறது..?”
திகைத்துப்போன முசல்மான்கள் அப்போதுதான் தம் தலைக்கு மேல் மேலிருந்த தொப்பிக்குள் பார்த்தன. சிங்கத்தையும்ää புலிகளையும் வெருண்டோடச் செய்யும்; மனித முகமும் வல்லூறை விடவும் விசாலிப்பான இறக்கைகளும்ää குதிரையின் வலிமையான உடலும் ஒருங்கேää கொண்ட பிராணியாக தம்மைக் கண்டன. அவை தம் வாயைத் திறந்ததும் “புராக்……புராக்…” கென்ற சத்தத்தில் ஈருலகங்களும் அதிர்ந்தன.
வல்லபெரிய ரகுமான் மீன்டும் சொன்னது “ஓ.. முசல்மான்களே..பார்த்தீர்களா.. இந்த புராக் உங்களுக்குள்ளேயே இருக்கிறது. நீங்கள் யாருக்கும் பயப்பட வேண்டிய தேவையில்லை.. நீங்கள் முதலில் உண்மையான முசல்மான்களாக வாழ்ந்தால் வலிமையான புராக்காக மாற முடியும்.. இப்போதுää நீங்கள் போகலாம்..”
இனியென்ன.. முசல்மான்கள் திரும்பி வந்தன. வலிமைமிக்க அந்த “புராக்”கைப் பெறுவது நம் நடத்தையில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டன. அவை தம் தொப்பிகளை ஒழுங்காக அணியத் தொடங்கின. .0(2012)
No comments:
Post a Comment