Thursday, June 11, 2020

அலெக்ஸ் பரந்தாமன்

படிப்பும் பாதிப்பும் - 17
""""""""""""""""""""""""""""""""""""
சமூகத்தில் கலையுணர்வோடு கூடிய குடும்ப உறுப்பினர்
கள் வாழும் இடத்தில் ஒரு படைப்பாளி தானாக உருவாக்கம்
பெறும்போது, அவனுக்கு அனுசரணைகள், ஊக்குவிப்புகள் கிடைக்கின்றன. நல்ல வழிகாட்டுதல்களும் ஏற்படுகின்றன.
இதன்நிமித்தம் அவன் விட்டுச்செல்லும் நினைவுகளும் படைப்புகளும் கலையை உணர்ந்தவர்களால் பாதுகாக்கப்
படுகின்றன ; போற்றவும்படுகின்றன.
ஆனால், எந்தவொரு ஆதரவுமற்று ஊக்கப்படுத்தல்களு
மற்று, தானே சுயமாக உருவாக்கம்பெறும் படைப்பாளன், இறுதியில் இங்கே விட்டுச் செல்வதென்ன? அதுவும், 'இலக்
கிய வாசனை' அற்ற குடும்பதிலுள்ள ஒருவன், படைப்பாளி
யாகி... அவன் இறந்தபின் பேசப்படுகிறானா? அவனது படைப்புகள், பரிசுகள்... என்னவாகின்றன? என்பதை வெளி
ப்படுத்துகிறது ஆர். எம். நெளஸாத் அவர்கள் எழுதிய 'கபடப்பறவைகள்' எனும் சிறுகதை!
எழுத்து இலக்கியம் என்றால் என்னவென்றே தெரியாத மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்... சகிதம் கொண்ட ஒரு படைப்பாளியானவன், இறந்து... நாற்
பதாவதுநாள் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து ஆவியாக எழுந்து, எவர் கண்களுக்கும் புலப்படாமல் தனது வீட்டிற்கு
வருகிறான்.
அதன்பின்பு - அந்தவீட்டில் நடக்கும் நிகழ்வுகளை நெள ஸாத் அவர்கள் தனக்கேயுரிய நகைச்சுவைப் பாங்கோடு
நகர்த்திச் செல்கிறார்.
''மரணவீடுதான்... ஆனால், வீடு நல்ல கலகலப்பாகக் காணப்பட்டது...'' என அவர் எழுதிச் செல்கையில், இந்தச்
சமூக அசிங்கத்தின் ஒருபகுதி அம்மணமாகத் தெரிகிறது.
இறந்துபோன அந்த எழுத்தாளன் உயிரோடு இருக்கும் போது தேடிவைத்த 'பொக்கிஷங்களை' ( நூல்கள், விருது
கள், பாராட்டுப்பத்திரங்கள்) காசுபணமென நினைத்து அவனது உறவுகள் அலுமாரிகளைத் குடைந்து ஏமாற்றமடை
வதும், அவனது பொக்கிஷங்கள் விற்பனைக்குச் செல்வ தும், அதிலும் படைப்பாளனின் சிறுவயதுப் பேரனொருவன்
அங்கு எஞ்சியிருந்த ஒரு' கபடப்பறவை' நூலின்மேல் தனது
சலத்தை அடித்து மலமும் கழிப்பது கதைக்கான இறுதி உச்சம்.
அங்கே ஆவியாக நிற்கும் படைப்பாளன், தனது படைப்பு களுக்கு ஏற்பட்ட அநீதி கண்டு சகிக்க முடியாமல், அவன் மீண்டும் தன்னைப் புதைக்கப்பட்ட இடத்துக்கே போய் சேருவதோடு... கதை முடிகிறது.
சிரிக்கவும்... சிந்திக்கவும் வைக்கிறது 'கபடப்பறவைகள்'
- அலெக்ஸ்பரந்தாமன்,
புதுக்குடியிருப்பு.
Image may contain: R.M. Nowsaath
Ashroff Shihabdeen, தியாகராசா ராஜ ராஜன் and 40 others
18 Comments
1 Share
Like
Comment

Comments

  • நானும் இக்கதையை படித்து ரசித்தேன் .
    நமக்கும் இப்படி வருமோ என்ற ஏக்கத்தை தந்த கதையது.
    1
    • Like
    • Reply
    • 5d
    Alex Paranthaman replied
       3 Replies
  • வாசிக்க வேண்டும். எங்கே கிடைக்கும். உண்மையில் இந்த சிந்தனை எனது மனதில் எப்போதும் தோன்றிக் கொண்டிருக்கும். அதை எழுத்து வடிவமாக்கியிருக்கும் எழுத்தாளர் நௌஷாத் அவர்களுக்கு நன்றிகள் 🙏❤️
    1
    • Like
    • Reply
    • 5d
    • Edited
    • Poornima Karunaharan
       தீரன் அவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்டுப்பாருங்கள். அல்லது கொழும்பிலுள்ள பூபாலசிங்கம் புத்தகக்கடையில் விசாரித்துப் பாருங்கள்.
      1
      • Like
      • Reply
      • 5d
      • Like
      • Reply
      • 5d
    Write a reply...

  • அவருடைய பார்வை எப்போதும் சிறப்பாகவே இருக்கும்
    கதை சொல்வதில் தனியானதொரு டிசைன் அவரிடம்
    அதுதான் அவரழகும்.
    1
    • Like
    • Reply
    • 5d
    Alex Paranthaman replied
       1 Reply
  • இலக்கிய உணா்வும் எழுத்தறிவும் வாசிப்புமற்ற குடும்பம் வாய்க்கப்பெறும் எழுத்தாளனின் நிலையே இதுதான் கவிஞரே
    2
    • Like
    • Reply
    • 5d
    Write a reply...

  • வாசிக்கவில்லை. ஆனால் அதுதான் அதிகமாக நடைமுறை. ஆனாலும் இன்னொரு பக்கமும் உண்டே. இலக்கிய வாசனையற்ற குடும்பத்தில் பிறந்திருக்கலாம். ஆனால் தன்னிலிருந்து உருவாகும் சந்ததிக்கு இ
    எழுத்தை, வாசிப்பை கடைசி அதன் மயிப்பை அல்லது தன் திறமை மீதான மதிப்பையோ நேசத்தையோ உருவாக்கும் வாய்ப்பிலிருந்து அவர் தவறியதும் இந்நிலைக்குக் காரணமாகலாமல்லவா
    1
    • Like
    • Reply
    • 4d
    Malini Mala replied
       2 Replies
  • வாசிக்கக்கிடைக்கவில்லை.உங்கள் பதிவு வாசிக்கத்தூண்டுகிறது.
    1
    • Like
    • Reply
    • 4d
    Murugesu Anatharadsagan replied
       2 Replies
  • இன்றைய கால இலக்கிய சட்டாம்பிள்ளை ஜெ. மோ. எழுப்பிய விவகாரத்தில் இதன் மறுபக்கம் இருக்கிறது.
    1
    • Like
    • Reply
    • 4d
Write a comment...

No comments:

Post a Comment