நூலாசிரியர் அறிமுகம்
-தம்பிலுவில் ஜெகா
00 தமிழ்நாடு ~காலச்சுவடு| இதழ் நிறுவுனர் சுந்தர ராமசாமி 75 பவழவிழா இலக்கியப்போட்டியில் இவரது ~நட்டுமை| நாவல் முதற் பரிசு பெற்றது.
00 இவரது ~வெள்ளிவிரல்| சிறுகதைத் தொகுதி 2011ல் தேசிய அரச சாகித்திய விருதும் கிழக்கு மாகாண சாகித்திய விருதும் ஒருங்கே பெற்றுக் கொண்டது.
00 “கொல்வதெழுதுதல்-90’ என்னும் நாவல் தமிழ்நாடு அரசின் ஆயிரம் பிரதிகளுக்கான நூலக ஆணை பெற்றது.
00 அக்கினிக் குஞ்சு இணையம் நடத்திய எஸ்.பொ. நினைவு நாவல் போட்டியில் இவரின் ‘வக்காத்துக்குளம்” நாவல் மூன்றாம் பரிசு பெற்றது.
00 ~தினக்குரல்| நாளிதழும் பிரான்ஸ் தமிழ்வானொலியும் இணைந்து நடத்திய சில்லையூர் செல்வராசன் ஞாபகார்த்த உலக வானொலி நாடகப் போட்டியில் ~காகித உறவுகள்| என்ற வானொலி நாடகம் 3ம் பரிசு பெற்றது.
00 ~நல்லதொரு துரோகம்| என்ற சிறுகதைக்கு பேராதனை பல்கலைக் கழக தமிழ்சங்கம் இவருக்கு முதற்பரிசாக தங்கப் பதக்கம் அளித்தது..
00 அத்துடன்ää ~சாகும்-தலம்.| என்ற சிறுகதை தமிழ்நாடு எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை நிறுவனம் நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியில் சிறப்புப்பரிசு பெற்றது.
00 ~ஞானம்| சஞ்சிகை நடத்திய புலோலியூர் க. சதாசிவம் நினைவுச் சிறுகதைப் போட்டியில் இவரது ~தாய்-மொழி| சிறுகதைக்கு முதற்பரிசு கிடைத்தது.
00 கிழக்கிலங்கையின் சாய்ந்தமருதுவில் 1960ல் பிறந்த இவர் இலங்கை அஞ்சல்துறையில் தபாலதிபராக 31 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
கிழக்கிலங்கையின் இலக்கிய வரலாற்றில் தவிர்க்கமுடியாத ஒரு அடையாளம.; இவர்.
தம்பிலுவில் ஜெகா
தம்பிலுவில் ஜெகா

No comments:
Post a Comment